WorksheetsPENTAKSIRAN SUMATIF PERTENGAHAN THN 2021,B.TAMIL (PERALIHAN)
Total questions: 40
Worksheet time: 1hrs 20mins
சரியான விடையைத் தெரிவு செய்க.
அம்மா காய்க்கறிகளைக் கழுவியபின் __________ சமைத்தார்.
அரிந்து
அறிந்து
சரியான விடையைத் தெரிவு செய்க.
யாழினி தோட்டத்திலுள்ள மலர்களைப்_______________.
பரித்தாள்
பறித்தாள்
சரியான விடையைத் தெரிவு செய்க.
திருமண விருந்தில் வாழை __________ உணவு உண்டோம்.
இலையில்
இழையில்
சரியான விடையைத் தெரிவு செய்க.
குரங்கு மரத்தில் ________________.
ஏரியது
ஏறியது
சரியான விடையைத் தெரிவு செய்க.
மீனவன் ____________ வீசி மீன் பிடித்தான்.
வலை
வளை
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
மெய்யெழுத்து இல்லாத சொல் யாது?
பிஞ்சு
படகு
காய்
பழம்
சேர்த்து எழுதுக.
கல் + கோவில்
கட்கோவில்
கல்கோவில்
கற்கோவில்
கண்கோவில்
கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.
கூ, தோ, போ, மா
உயிர்மெய் குறில்
உயிர்மெய் நெடில்
மெல்லின உயிர்மெய்
இடையின உயிர்மெய்
கோடிட்ட இடத்திற்குப் பொருந்தும் இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
நம் பள்ளியில் பந்து விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். ____________________இவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
ஏனெனில்
ஆனால்
எனவே
இருப்பினும்
கோடிட்ட இடத்திற்குப் பொருந்தும் இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
காந்தியடிகள் எப்பொழுதும் உண்மையே பேசினார்கள். _________________ அவரை உலகம் புகழ்கிறது.
காரணம்
ஆதலால்
ஏனெனில்
ஆனால்
ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க.
குருடன் = ________________________
குறத்தி
குருடி
மறத்தி
திருடி
காலி இடத்தில் பொருத்தமான சுட்டுச் சொற்களைத் தெரிவு செய்க.
_______________ ஏன் அழுகிறாள்?
அது
அவன்
அவள்
அங்கு
காலி இடத்தில் பொருத்தமான சுட்டுச் சொற்களைத் தெரிவு செய்க.
"__________________ என்னுடைய புத்தகங்கள்" என்றான் தீபன்.
அது
இது
அவை
இஃது
வாக்கியத்தை நிறைவு செய்க.
பறவைகள் உயரே __________________.
பறந்தது
பறந்த்ன
பறக்கின்றனர்.
வாக்கியத்தை நிறைவு செய்க.
____________________ புத்தகம் படிக்கிறான்.
மாணவி
அமுதன்
அப்பா
சிறுவர்கள்
நான்காம் வேற்றுமை உருபு யாது?
ஐ
ஆல்
கு
இருந்து
வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டுள்ள சொல் எவ்வகை வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?
அப்பா தவறு செய்த மாறனைக் கண்டித்தார்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
பொருத்தமான வினாச் சொல்லைத் தெரிவு செய்க.
" உன்னுடைய சகோதரன்_______________"
எது
ஏன்
யார்
யாது
பொருத்தமான வினாச் சொல்லைத் தெரிவு செய்க.
___________ இங்கே வந்தாய் ?
ஏன்
யார்
அவனா
என்ன
தன் குடும்ப நலனுக்காக __________________ ஆக உழைத்த பரமன் தற்பொழுது உடல்நலமின்றி இருக்கிறார்.
இரவு பகல்
குற்றம் குறை
தங்கு தடை
ஆற அமர
விமலாவின் திருமணத்திற்கு _______________________ திரளாக வந்திருந்தனர்.
உற்றார் உறவினர்
குற்றம் குறை
தங்கு தடை
ஆற அமர
எந்தச் சூழலிலும் _______________ யோசித்துச் செயல்படுவதால் செல்வன் தேவையில்லாதச் சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை.
தங்கு தடை
ஆற அமர
குற்றம் குறை
இரவு பகல்
கடுமையாக வேலை செய்து வரும் சந்திரன் இப்பொழுது _________________ உடன் வாழ்ந்து வருகிறார்.
இரவு பகல்
உற்றார் உறவினர்
குற்றம் குறை
சொத்து சுகம்
பிறருடைய __________________ களைப் பெரிதுபடுத்தும் குணம் கவிதாவுக்கு இல்லை.
சொத்து சுகம்
இரவு பகல்
குற்றம் குறை
சொத்து சுகம்
பல வருடங்களாக கிராமத்திலேயே வாழ்ந்து வந்த அகிலா முதன்முதலாக சிரம்பானுக்கு வந்தபோது அவளுக்கு _________ இருந்தது.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல
கீரியும் பாம்பும் போல
ஒளியைக் கண்ட இருள் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
தீய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் காவல் அதிகாரியைக் கண்டதும் __________ பதுங்கினர்.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல
கீரியும் பாம்பும் போல
ஒளியைக் கண்ட இருள் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
தேர்வில் தேர்ச்சி அடையாத வேலன், மனவேதனையில் இருக்கும்போது அவனது நண்பர்களின் கேலிபேச்சு _____________ இருந்தது.
ஒளியைக் கண்ட இருள் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கீரியும் பாம்பும் போல
எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றினாற் போல
___________ பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பற்ற வைத்தல்
இடைவிடாமல்
கை தவறுதல்
குரங்குப்பிடி
வரதன் அருகிலுள்ள கடைக்கு ____________ சென்று திரும்பினான்.
பற்ற வைத்தல்
இடைவிடாமல்
இரண்டெட்டில்
குரங்குப்பிடி
_________ தன் மோதிரத்தை வீடு முழுவதும் தேடினாள் நங்கை.
கை தவறிய
இடைவிடாமல்
இரண்டெட்டில்
குரங்குப்பிடி
கீழ்க்காணும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
சுத்தமாக இருந்தால் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழலாம்
நேரம் தங்கத்தைப் போன்று விலைமதிப்பற்றது
உழைக்காமல் இருந்துவிட்டால் உடம்பில் தைரியம் இருக்காது
தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
நாம் தூய்மையைக் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்
ஒற்றுமையே பலம்
சுத்தம் சுகம் தரும்
பருவத்தே பயிர் செய்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாது புரிந்துணர்வோடு ஒன்றுபட்டு வாழ்வதே நலம் பயக்கும்.
ஒற்றுமையே பலம்
சுத்தம் சுகம் தரும்
பருவத்தே பயிர் செய்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
மேற்காணும் திருக்குறளில் விடுப்பட்ட வரியைத் தேர்ந்தெடு.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
_____________________________________________
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
கீழ்க்காணும் திருக்குறளுக்கான பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்
செவியினால் நல்லது கெட்டதைக் கேட்க வேண்டும்
வாயால் அதிகம் பேசி சுவையை உணர வேண்டும்
வாயால் பேசி கேள்வி ஞானம் பெற வேண்டும்
வாயால் அறியும் நாக்கின் சுவையைஉணர்வதைவிட கேள்வியாகிய அறிவுச் சுவையை உணர்வதே சிறப்பாகும்
கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட அடியை விளக்கும் கருத்து யாது?
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு
- நாலடியார்
கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம் சிறப்புப் பெற்று
படிப்பில்லாதவர்கள் என்றாலும் படித்தவர்களுடன் சேர்ந்து பழகினால்
வாயால் பேசி கேள்வி ஞானம் பெற வேண்டி
பண்பில் சிறந்த பெரியோரிடம் கொண்ட நட்பு வளர்பிறை போல ஒவ்வொரு நாளும்
கீழ்க்காணும் செய்யுளில் கோடிடப்பட்டுள்ள “சேர்ந்தொழுகின்” என்ற சொல்லின் பொருள் யாது?
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு
சேர்ந்து பழகினால்
வாய்க்கப் பெறும்
புது மண் பாண்டம்
பெரியோர்
கோடிட்ட இடத்தை நிறப்புக.
புலி மானைத் ______________.
துரத்தியது
துரத்தின
துரத்தினர்
துரத்துகின்றன
கோடிட்ட இடத்தை நிரப்புக.
சிறுவர்கள் திடலில் ______________________.
விளையாடுகின்றது
விளையாடுகின்றன
விளையாடுகின்றான்
விளையாடுகின்றனர்
