Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஐந்தாம் வகுப்பு அகமதிப்பீடு - 01- V B

Total questions: 43

Worksheet time: 2hrs 50mins

Name
Class
Date
1.

பெயர் :

4 lines
2.

தேர்வுஎண் :

4 lines
3.

வகுப்பு & பிரிவு :

4 lines
4.

கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் -

தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும் -

தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்

மேற்கண்டபாடலைப் படித்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி. 5

1) இப்பாடலை இயற்றியவர் யார்?

a)

அ) பாரதியார்

b)

ஆ) பாரதிதாசன்

c)

இ). ஒளவையார்

d)

ஈ). கவிமணி

5.

இப்பாடலில் மோனை அமைந்துள்ள சொற்கள்--------------.

a)

அ) கனி,பனி.

b)

ஆ) கனி,கழை.

c)

இ)தேன்,சுவை.

d)

ஈ) கனி,பனி.

6.

இப்பாடலில் எதுகை அமைந்துள்ள சொற்கள்-------------.

a)

அ) கனி,கழை.

b)

ஆ) பனி,பாகு

c)

இ) நனி,நல்கிய.

d)

ஈ) கனி,பனி.

7.

'கழை' இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் --------------.

a)

அ) கரும்பு

b)

ஆ)கறும்பு

c)

இ) கருப்பு

d)

ஈ) கறுப்பு

8.

'கழையிடை' என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ----------.

a)

அ) கழை + யிடை

b)

ஆ) கழை + இடை

c)

இ) கழி + இடை

d)

ஈ) கழை + ய்டை

9.

பின்வரும் பத்தியை படித்து கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி

காட்டில் புலி ஒன்று மானை வேட்டையாடத் துரத்தியது . மான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள வேகமாக ஓடியது. மானைத் துரத்திச் செல்லும்போது வேடன் விரித்திருந்த வலையில் புலிச் சிக்கிக் கொண்டது.வேடன் வலையில் சிக்கிய புலியைக் கூண்டில் அடைக்க முயன்றான். அப்பொழுது புலி வேடனைப் பார்த்து என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு. நான் ஓடிப்போய்விடுகிறேன் என்று கெஞ்சியது.அதற்கு வேடன்"அதெல்லாம் முடியாது" என்று கூறினான்.

உனக்கு இரக்கமே இல்லையா? என்னை ஏன் துன்புறுத்துகிறாய்?எனக்கேட்டது புலி.அதற்கு வேடன் நீ ஏன் மானை துரத்தினாய்? உனக்கு ஒரு நீதி. எனக்கு ஒரு நீதியா? எனக் கேட்டான். புலி அமைதியாக இருந்தது.

மானை வேட்டையாடத் துரத்திய விலங்கு எது?

a)

அ) நரி

b)

ஆ) சிங்கம்

c)

இ) புலி

d)

ஈ) ஓநாய்

10.

வேடன் விரித்த வலையில் சிக்கிய விலங்கு எது?

a)

அ) மான்

b)

ஆ) நரி

c)

இ) சிங்கம்

d)

ஈ) புலி

11.

"என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு" என்று கெஞ்சியது யார்?

a)

அ) மான்

b)

ஆ) புலி

c)

இ) சிங்கம்

d)

ஈ) நரி

12.

"உனக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா" எனக் கேட்டது யார்?

a)

அ) வேடன்

b)

ஆ) நரி

c)

இ) மான்

d)

ஈ) புலி

13.

"உனக்கு இரக்கமே இல்லையா என்னை ஏன் துன்புறுத்துகிறாய்" எனக்கேட்டது யார்?

a)

அ) புலி

b)

ஆ) வேடன்

c)

இ) மான்

d)

ஈ) சிங்கம்

14.

சரியான விடையைத் தேர்ந்தெ.டுத்து எழுதுக.

யானை----------------.

a)

அ) குட்டி

b)

ஆ) கன்று

c)

இ) பிள்ளை

d)

ஈ) குருளை

15.

சிங்கம்--------------.

a)

அ) கன்று

b)

ஆ) குட்டி

c)

இ) குஞ்சு

d)

ஈ) குருளை

16.

புலி------------

a)

அ) குட்டி

b)

ஆ) பறழ்

c)

இ) பிள்ளை

d)

ஈ) குருளை

17.

'நல்கிய' இச்சொல் உணர்த்தும் பொருள்-------------------.

a)

அ) வழங்காத

b)

ஆ) பெற்ற

c)

இ) வழங்கிய

d)

ஈ) அனுப்பிய

18.

பாரதியார் தாம் இயற்றிய கவிதையை வெளியிட்ட போது அவருக்கு வயது -----------.

a)

அ) 10

b)

ஆ) 7

c)

இ) 8

d)

ஈ) 11

19.

'உலகம்' என்னும் பொருளைக்

குறிக்காத சொல்------------------.

a)

அ) வானம்

b)

ஆ) அண்டம்

c)

இ) செகம்

d)

ஈ) அகிலம்

20.

' நற்றமிழ்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

a)

அ) நல் + தமிழ்

b)

ஆ) நற்+ றமிழ்

c)

இ) நன்மை + தமிழ்

d)

ஈ)நல்ல + தமிழ்

21.

பண்பால் உயர்ந்தவர்கள்---------.

a)

அ) அதியமான்,

அப்துல் கலாம்

b)

ஆ) அன்னை தெரசா,

தாமஸ் ஆல்வா எடிசன்.

c)

இ) புத்தர், அப்துல் கலாம் ‌.

d)

ஈ) அதியமான், அன்னை தெரசா.

22.

குரங்கின் ஒலி மரபு ----------.

a)

அ) கத்தும்

b)

ஆ) அலப்பும்

c)

இ) கனைக்கும்

d)

ஈ) அலறும்

23.

கம்பங்கொல்லையில் வண்டுகள்______ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

a)

அ) கத்தும்

b)

ஆ) ரீங்கரிக்கும்

c)

இ) முரலும்

d)

ஈ)கீச்சிடும்

24.

"கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறி யவர் -------------------.

a)

அ) ஒளவையார்

b)

ஆ) திருவள்ளுவர்

c)

இ) பாரதிதாசன்

d)

ஈ) பாரதியார்

25.

'வறுமை' இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ------------------.

a)

அ) செழுமை

b)

ஆ) இன்மை

c)

இ) செம்மை

d)

ஈ) ஏழைமை

26.

சிறுமியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு யாது?

a)

அ) தங்கமுட்டை

b)

ஆ) தங்க மோதிரம்

c)

இ) தங்கக்காசு

d)

ஈ) தங்க மூக்குத்தி

27.

தங்கக்காசைப் பெற்ற சிறுமியின் பெயர் என்ன?

a)

அ) இளமதி

b)

ஆ) இளந்தென்றல்

c)

இ) இளவேனில்

d)

ஈ) இளவரசி

28.

'மூதுரை' பாடலை எழுதியவர் --------------.

a)

அ) திருவள்ளுவர்

b)

ஆ) பாரதிதாசன்

c)

இ) பாரதியார்

d)

ஈ) ஒளவையார்

29.

'சிறுமி' என்ற சொல் ----------------.

a)

அ) பெயர்ச்சொல்

b)

ஆ) வினைச்சொல்

c)

இ) இடைச்சொல்

d)

ஈ) உரிச்சொல்

30.

'எழுதினான்' என்பது --------------.

a)

அ) பெயர்ச்சொல்

b)

ஆ) இடைச்சொல்

c)

இ) உரிச்சொல்

d)

ஈ) வினைச்சொல்

31.

"'என்றெண்ணி " என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது ----------------.

a)

அ) என்+றெண்ணி

b)

ஆ) என்று + எண்ணி

c)

இ) என்றெ+ எண்ணி

d)

ஈ) என்று + றெண்ணி

32.

பணம் ----------செய்யும்.

a)

அ) எட்டும்

b)

ஆ) ஆறும்

c)

இ) பத்தும்

d)

ஈ) பதினொன்றும்

33.

' அம்புலி ' என்பது --------------.

a)

அ) கதிரவன்

b)

ஆ) சந்திரன்

c)

இ) சூரியன்

d)

ஈ)நெருப்பு

34.

' இம்மை ' என்ற சொல் குறிக்கும் பொருள் --------------------.

a)

அ) இப்பிறப்பு

b)

ஆ) மறுபிறப்பு

c)

இ) பிறப்பு

d)

ஈ) முற்பிறப்பு

35.

பொருத்துக.

1. உறுமீன் - அ) நீர் பாயும் வழி

2. கருதவும் - ஆ) பணிவு

3. அறிவிலர் - இ) நினைக்கவும்

4. மடைத்தலை - ஈ) பெரியமீன்

5. அடக்கம் - உ )அறிவு இல்லாதவர்

a)

1 - ஈ, 2 - உ, 3 - அ, 4 - ஆ, 5 - இ.

b)

1 - ஈ, 2 - இ, 3 - உ, 4 - ஆ, 5- அ.

c)

1- ஈ, 2 - இ, 3 - உ , 4 -அ, 5 - ஆ.

d)

1 - ஈ, 2 - உ, 3 - இ, 4 - ஆ , 5 - அ .

36.

வினை மரபுகளைப் பொருத்துக.

1) நீர் - அ) பறித்தாள்

2) முறுக்கு - ஆ) எய்தான்

3) உணவு - இ) குடித்தான்

4) அம்பு - ஈ) தின்றான்

5) பூ - உ) உண்டாள்

a)

1 - ஆ, 2 - உ, 3 - அ, 4 - இ, 5 - ஈ.

b)

1 - இ, 2 - ஈ, 3 - உ, 4 - ஆ, 5 - அ.

c)

1 - உ, 2 -ஈ, 3 - இ, 4 - ஆ, 5 - அ.

d)

1 - இ, 2 - ஆ, 3 - உ, 4 - அ, 5 - ஆ.

37.

ஆந்தை அலறும் என்பது ------------.

a)

அ) ஒலி மரபு

b)

ஆ) வினைமரபு

c)

இ) இளமைப்பெயர் மரபு

d)

ஈ) இருப்பிடப் பெயர் மரபு

38.

இருப்பிட மரபுச்சொற்களை பொருத்துக.

1. மாடு - அ) கொட்டில்

2. குதிரை - ஆ) வலை

3. நண்டு - இ) தொழுவம்

4. சிலந்தி - ஈ) புற்று

5. கரையான் - உ) வளை

a)

1 - ஈ, 2 - உ, 3 - இ, 4 - அ, 5 - ஆ.

b)

1 -அ, 2 -ஆ, 3 - இ, 4 - ஈ, 5 - உ.

c)

1 - இ, 2 - அ, 3 - உ, 4 -ஆ, 5 - ஈ.

d)

1-உ, 2 -ஈ, 3 - இ,4 - ஆ, 5 - அ.

39.

அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல் ------------.

a)

அ) அறிவில்லாதவர்

b)

ஆ) படிக்காதவர்

c)

இ) அறியாதார்

d)

ஈ) அறிவுடையவர்

40.

.பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்து இருந்தார் ---------

a)

அ) கண்ணதாசன்

b)

ஆ) வாணிதாசன்

c)

இ) ஒளவையார்

d)

ஈ) பாரதியார்

41.

'நெல்' இச்சொல்லின் உறுப்புப்பெயர் மரபுச்சொல் --------------.

a)

அ) தட்டை

b)

ஆ) தாள்

c)

இ) இலை

d)

ஈ) பிஞ்சு

42.

சூரியனைக் குறிக்காத சொல் ----------.

a)

அ) ஆதவன்

b)

ஆ) ஞாயிறு

c)

இ) திங்கள்

d)

ஈ) பரிதி

43.

தமிழ்மொழியின் முதல் இலக்கண நூல் -----------.

a)

அகத்தியம்

b)

தொல்காப்பியம்

c)

திருக்குறள்

d)

ஆத்திசூடி