Font size
Worksheetsகோல்டன்கேட்ஸ் வித்யாஷ்ரம் - தமிழ் - நான்காம்வகுப்பு - அ
Total questions: 33
Worksheet time: 1hrs 6mins
NAME :
CLASS & SECTION ;
EXAM NUMBER :
1 . "அன்னைத் தமிழே " இப்பாடலின் ஆசிரியர் யார் ?
2. ஆவி என்பதன் பொருள் என்ன ?
கண்
உயிர்
மனம்
காது
3. சாலையோரம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
சாலை + ஓரம்
சாலை + யோரம்
சா + ஓரம்
சாலையோ + ரம்
4. மட்டம் என்பதன் பொருள் என்ன?
கட்டம்
அளவு
பட்டம்
வட்டம்
5. நம் மாநில மரம் எது?
6. அழைக்கும் எழுத்து எது?
தா
வா
போ
ஊ
7. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உயர்திணையைக் குறிக்கும் படத்தினைக் கண்டுபிடி ?
8. "அவை " எனச் சுட்டப்படும் பால் எது?
ஆண்பால்
பெண்பால்
ஒன்றன்பால்
பலவின்பால்
9. கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த புலவர் யார்?
மரியாதை ராமன்
பலராமன்
தெனாலிராமன்
சுந்தர ராமன்
10. தையலர் என்பதன் பொருள் என்ன?
ஆண்கள்
பெண்கள்
தையல்காரர்
தபால்காரர்
11. கீழ்கண்டவற்றுள் எது நவதானியம் இல்லை?
12. பழைமை + மொழி - இச்சொற்களை சேர்த்து எழுதக் கிடைப்பது ---------------------------
பழைமைமொழி
பழமைமொழி
பழமொழி
பழைமைம்மொழி
13. -----------------நாய் கடிக்காது. சரியான விடையை எடுத்து எழுதுக.
குறைக்கிற
குரைக்கிற
கொரைக்கிற
கொலைக்கிற
14. உயரம் இச்சொல்லிற்கான எதிர்ச்சொல் என்ன?
பள்ளம்
குட்டை
மேடு
நீளம்
15. காற்றாடி ,விசிறி இவைகள் பனைமரத்தின் எந்த பாகத்தில் இருந்து தயாரிக்கப் படுகிறது?
வேர்
பழம்
பனை ஓலை
தண்டு
16. பலர்பால் என்றால் என்ன?
ஓர் ஆணை மட்டும் குறிப்பது
ஓர் பெண்ணை மட்டும் குறிப்பது
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் மற்றும் மனிதர்களைக் குறிப்பது.
அஃறிணையில் ஒன்றை மட்டும் குறிப்பது
17. கடல் நீரால் வளர்வான் : மழை நீரால் மடிவான் அவன் யார் ?
18. முயலின் மூதாதையர்களைக் கொன்றுதின்றது எது?
19. பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------------
பல் + லாண்டு
பல் + ஆண்டு
பல + ஆண்டு
பல + யாண்டு
20.முளைப்பாரி பாடல் என்பது கீழ்கண்டவற்றுள் எதைக் குறிக்கும் ?
கும்மிப் பாடல்
நடவுப் பாடல்
ஏற்றப் பாடல்
தாலாட்டுப் பாடல்
21. விலங்குகள் எதைக் கண்டு அஞ்சின?
22. திணை................. வகைப்படும்.
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
23. பனை மரத்திற்கு ............. என்ற பெயரும் உண்டு.
கற்பகத்தரு
அதிசயமரம்
பட்டமரம்
காய்ந்த மரம்
24. படத்திற்குரிய ஓரெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
நா
ஆ
பூ
ஈ
25. அஃறிணையைத் தேர்வு செய்க.
26. துளிர் என்பதன் பொருள் என்ன?
இளம் இலை
முதிர் இலை
பக்க இலை
அடி இலை
27. சொல் ஒன்று , பொருள் இரண்டு . கண்டுபிடி :
ஆடை நெய்ய உதவுவது --------------- .
திருக்குறள் உலகம் போற்றும் ------------------ .
தறி
நூல்
வண்ணம்
தையல்
28.' கலை ' இச்சொல்லின் இடையில் ஓர் எ ழுத்து சேர்த்து பொருள் தரும் புதிய சொல் உருவாக்குக
காலை
காவல்
கவலை
கழலை
29. விலங்குகளின் கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டதாக, முயல் புலியிடம் கூறியது ?
இனி புலிதான் காட்டிற்கு அரசன்
இனி முயல்தான் காட்டிற்கு அரசன்
இனி சிங்கம்தான் காட்டிற்கு அரசன்
இனி யானைதான் காட்டிற்கு அரசன்
30. தமிழ் அன்னை தன் கையில் எந்த நூலை வளையலாக அணிந்திருந்தாள்?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
