wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

(அத்தனை + பெட்டிகளும் ) என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

a)

அத்தனை பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

b)

அத்தனைப் பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

c)

அத்தனைபெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

d)

அத்தனைப்பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

2.

செய்து + காட்டினார் =

a)

செய்துக் காட்டினார்

b)

செய்து காட்டினாள்

c)

செய்து காட்டினார்

3.

சேர்த்து எழுதுக.

அவை + பெட்டிகள்

a)

அவைப் பெட்டிகள்

b)

அவைப்பெட்டிகள்

c)

அவை பெட்டிகள்

4.

வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

எது + பாடம்

b)

மற்ற + பாடம்

c)

தனி + பாடம்

d)

இனி + பாடம்

5.

அது + காலனி

a)

அது காலனி

b)

அந்த காலனி

c)

அ காலனி

6.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எது சரியானது?

a)

கமலா தன் தம்பியை உறங்கும்படி சொன்னாள்.

b)

கண்ணன் சிவாவை வேகமாக ஓடும்படிப் பணித்தார்.

c)

அமுதன் அம்மாவிடம் தோசையைச் சுட்டுத் தரும்படிக் கேட்டான்.

7.

அவ்வளவு + பெரிய

a)

அவ்வளவுப் பெரிய

b)

அவ்வளவுபெரிய

c)

அவ்வளவு பெரிய

d)

அவ்வளவுப்பெரிய

8.

இவை + காப்புகள் =

a)

இவை காப்புகள்

b)

இவைக்காப்புகள்

c)

இவைகாப்புகள்

d)

இவைக் காப்புகள்

9.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்.

b)

சில,பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

c)

சில,பல என்பனவற்றுக்கு முன் வலிமிகாது.

d)

சில,பல என்பனவற்றுக்கு முன் வலிமிகும்.

10.

தர்வின் வண்ண மீன்களை (அன்று + தொட்டியில்) நிரப்பினான்.

a)

தர்வின் வண்ண மீன்களை அன்று தொட்டியில் நிரப்பினான்.

b)

தர்வின் வண்ண மீன்களை அன்றுத் தொட்டியில் நிரப்பினான்.

c)

தர்வின் வண்ண மீன்களை அன்றுத்தொட்டியில் நிரப்பினான்.

d)

தர்வின் வண்ண மீன்களை அன்றுதொட்டியில் நிரப்பினான்.

11.

________ தடவை சொல்லியும் தம்பி விடாப்பிடியாகத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

a)

பலத்

b)

பல

c)

சிலச்

d)

சில

12.

இத்தனை + பூச்செடிகளா = ______________________

a)

இத்தனைப் பூச்செடிகளா ?

b)

இத்தனை பூச்செடிகளா ?

c)

இத்தனை பூச்செடிகளா

13.

அறிந்து + கொண்டார் =

a)

அறிந்து கொண்டார்

b)

அறிந்துக் கொண்டார்

c)

அறிந்துக்கொண்டார்

d)

அறிந்துகொண்டார்

14.

கலைமணி தான் எழுதிய ___________________ கட்டுரைகளையும் ஆசிரியரின் பார்வைக்கு வைத்தாள்.

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

15.

6. கீழ்காணும் சொற்றொடர் ஏன் வலிமிகவில்லை?


எங்கே போனாய்?

a)

எழுவாய்த்தொடர் என்பதால்

b)

செயப்படுப்பொருள் இல்லாததால்

c)

ஏகாரம் முடியும் சுட்டு என்பதால்

d)

வினைமுற்றுத்தொடர் என்பதால்