Worksheetsநன்னெறிக்கல்வி (ஆண்டு 5)
Total questions: 6
Worksheet time: 3mins
நேர்மைப் பண்பைக் குறிக்கும் செயல்களைத் தெரிவு செய்க.
அண்டை வீட்டாரின் கண்ணாடியைத் தெரியாமல் உடைத்த சிவன் தன் தவற்றை ஒப்புக் கொண்டான்.
நடந்து சென்ற பெரியவரின் பையிலிருந்த பணப்பை கீழே விழுவதைக் கண்ட கீதா அப்பெரியவரிடம் எடுத்துக் கொடுத்தாள்.
கடைக்காரர் கொடுத்த மீதப்பணம் கூடுதலாக இருக்கிறது எனத் தெரிந்தும் மலர் தெரியாதது போல் இருந்தாள்.
கண்ணாடிக் கோப்பையை உடைத்த அமலன் தன் தவற்றை ஒப்புக் கொள்ளவில்லை.
நேர்மையாக நடக்காவிடில் என்ன நிகழும்?
மக்கள் நம்மை விரும்புவர்.
நம்மிடம் நட்பு கொள்ள விரும்புவர்.
முக்கியப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு கைநழுவிப் போகும்
நற்பெயர் கிடைக்கும்
தேநீரைத் தவறுதலாகக் கொட்டிவிட்டாய்?நீ என்ன செய்வாய்?
தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பேன்
தம்பி மேல் பழி சுமத்துவேன்.
வகுப்பாசிரியர் அவசர வேலையாக அலுவலகம் செல்ல வகுப்புத் தலைவனான உன்னை சிறிது நேரம் வகுப்பறையைக் கண்காணிக்கச் சொல்கிறார்...
சத்தம் போடும் என் நண்பர்களின் பெயர்களை எழுத மாட்டேன்.
சத்தம் போடுபவர்கள் என் நண்பர்களாக இருந்தாலும் பெயர்களை எழுதுவேன்.
கணக்காய்வாளராகப் பணிப்புரியும் திரு.கமல் தன் தொழிற்சாலை லாபத்தை சிறிது எடுத்துக் கொள்ளலாம் என எண்ணினார்.இவரின் இச்செயல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
நேர்மையானச் செயல்
நேர்மையற்றச் செயல்
ஓவியப் போட்டியில் தன் மகன் சிறப்பாகச் செய்யவில்லை எனத் தெரிந்தும் அப்போட்டிக்கு நீதிபதியாக இருந்த திரு.கார்த்திக் தன் மகனுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கினார்.
நேர்மையானச் செயல்
நேர்மையற்றச் செயல்
