wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பல்வகை செய்யுள் படிவம் 1 (மன்னனும் மாசறக் கற்றோனும்)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மன்னனைக் காட்டிலும் கற்றவர்க்கே சிறப்பு எனங்கூறும் செய்யுளடி எது?

a)

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

b)

மன்னனின் கற்றோர் சிறப்புடையன்

c)

மன்னற்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை

d)

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

2.

கல்வி கற்றோர் எங்குச் சிறப்புப் பெறுவர் எனச் செய்யுள் கூறுகிறது?

a)

கற்றோர் மத்தியில்

b)

மன்னரிடத்தில்

c)

சிறப்புடையோர் இடத்தில்

d)

அனைத்து இடத்தில்

3.

மேற்கண்ட செய்யுள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

a)

திருமுறை

b)

நாலடியார்

c)

மூதுரை

d)

அறநெறிச்சாரம்

4.

கல்வி கற்றவர் எப்படிக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என ஔவையார் கருதுகிறார்?

a)

மன்னனை விட அதிகமாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.

b)

மன்னனை விடச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.

c)

கற்றோரை விட சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்

d)

பிழையறக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.

5.

விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

______________________________– மன்னற்குத்

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

a)

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்

b)

மக்கட் பிறப்பில் பிறிதில்லை

c)

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

d)

வெய்ய கதிரோன் விளக்காக

6.

செய்யுளின் விடுப்பட்ட சொற்களைத் தெரிவு செய்க.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன் தேசமல்லாற் ______________ கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் _______________ .

a)

சிறப்பு - மதிப்பில்லை

b)

சிறப்பில்லை – சிறப்பு

c)

மதிப்பில்லை – பாராட்டு

d)

இடமில்லை – வேலைவாய்ப்பு

7.

முதல் இரண்டு அடியின் பொருள் என்ன?


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன் தேசமல்லாத சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு

a)

ஒரு நாட்டின் கற்றறிந்தவனைவிட மன்னனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.

b)

ஒரு நாட்டின் மன்னனைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.

c)

ஒரு நாட்டின் கற்றறிந்த மன்னனைவிட கல்லாதவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.

d)

ஒரு நாட்டின் கல்லாத மன்னனைவிட கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.

8.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு


சிறப்பு என்ற எதைக் குறிக்கிறது?

a)

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் பணம் கிடைக்கும்

b)

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் பதவி கிடைக்கும்

c)

அனைவரும் கற்றவரை மதித்துப் போற்றுவர்.

d)

கற்றவர்க்கு அனைத்து இடங்களிலும் சிறப்புச் சலுகை கிடைக்கும்

9.

மன்னனையும் கற்றவர்களையும் ஒப்பிடுவதன் நோக்கம் என்ன?

4 lines
10.

மாசற என்ற செய்யுள் சீரின் பொருள் என்ன?

4 lines