wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தனி வாக்கியம்

Total questions: 16

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

மகிழன் மேடையில் பாடல் பாடினான்.

b)

முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.

2.

விடுபட்ட எழுவாயை எழுதுக.


___________________ வேகமாக ஓடின.

a)

சிறுவர்கள்

b)

குதிரைகள்

3.

படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாறனும் மாலாவும் புத்தகம் வாசித்தனர்.

b)

மகிழன் புத்தகம் வாசித்தான்.

c)

மகிழன் தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தான்

4.

படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

நளினா கஞ்சி சமைத்துச் சாப்பிடுகிறாள்.

b)

நளினா கஞ்சி சாப்பிடுகிறாள்..

5.

தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

சித்திரா ஓவியம் வரைந்து அனுப்பினாள்.

b)

முத்து ஓவியம் வரைகிறான்.

6.

1. தனி வாக்கியத்தில் எத்தனை எழுவாய்கள் உள்ளன?

a)

1

b)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்

c)

3

7.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

பலமாக வீசியதால் சாய்ந்தன. காற்று மரங்கள்

a)

காற்று வீசியதால் மரங்கள் பலமாக சாய்ந்தன.

b)

மரங்கள் சாய்ந்தன காற்று வீசியதால் பலமாக.

c)

காற்று பலமாக வீசியதால் மரங்கள் சாய்ந்தன.

8.

தனி வாக்கியத்தில் எத்தனை பயனிலைகள் இருக்க வேண்டும்?

a)

2

b)

1 அல்லது பல

c)

1

9.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எழுவாயைத் தேர்ந்தடுக்கவும்.

கயல்விழி உடுத்தியிருந்த புத்தாடை அழகாக இருந்தது.

a)

உடுத்தியிருந்த

b)

கயல்விழி

c)

அழகாக

10.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எது பயனிலை?

வேடன் மானை நோக்கி அம்பு எய்தான்.

a)

வேடன்

b)

அம்பு

c)

எய்தான்

11.
தனி வாக்கியம் என்றால் என்ன?
a)
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம்.
b)
ஒரு எழுவாய் பல பயனிலையைக் கொண்டு முடியும்.
c)
ஒரு எழுவாய் ஒரு செயப்படுபொருளைக் கொண்டு முடியும்.
d)
ஒரு செயப்படுபொருள் பல எழுவாயைக் கொண்டு முடியும்.
12.
சரியான எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைக் கொண்ட இணையைத் தெரிவு செய்க.
a)
சிவா, ரவின், விளையாடினார்கள்
b)
கவிதா, பூ, பறித்தாள்
c)
ஓடினான், பாடினாள், ஆசிரியர்
d)
கண்ணன், அம்மா, தம்பி
13.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தங்கை பாடினாள்.
b)
நடனம் ஆடினாள்.
c)
அம்மா கடைக்குச் சென்றார்.
d)
பழம் சாப்பிட்டார்.
14.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ராமுவும் குமாரும் விளையாடினர்.
b)
ஆசிரியர் பாடம் போதித்தார்.
c)
தங்கை வாசித்தாள்.
d)
ஓவியம் வரைந்தான்.
15.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
பலூன் ஊதினான்.
b)
சீருடை வாங்கினாள்
c)
அமுதா எழுதினாள்.
d)
அம்மாவும் அக்காவும் கறி சமைத்தனர்.
16.

சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

மகிழன் மேடையில் பாடல் பாடினான்.

b)

முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.