WorksheetsTamil grade 10
Total questions: 50
Worksheet time: 8hrs 20mins
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் .... என்பதில் திங்கள் என்பதன் பொருள்,
மாதம்
சந்திரன்
கிழமை
அந்த
'கணக்காயர் இல்லாத ஊரும் ' - இங்கு கணக்காயர் என்பது,
கணக்காளர்
ஆசிரியர்
வணிகர்
மூத்தோர்
'பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்....' இங்கு வதனம் என்பது,
சுடர்
அலங்கு
முகம்
மலர்
விரி குழல் பைந்தொடி நாணி என்பதில் குழல் என்பதன் ஒத்த சொல்,
தலை
கூந்தல்
பெண்
அழகு
"பொங்கி எழுந்த கொழுங்கன லென்ன எழுந்தார்" கொழுங்கனல் என்பதன் பொருள்,
மிக்க கோபம்
நீர்வீழ்ச்சி
நீண்ட அருவி
பெரு நெருப்பு
"பிரிவின் கண் பீழை தருவது ஒன்றில்" - பீழை என்பதன் எதிர்க்கருத்து,
துன்பம்
கவலை
மயக்கம்
இன்பம்
வாட்டசாட்டமாக எந்த வாலிபனைக் கண்ட மங்கையர் அனைவரும் மயங்கினர். இங்கு வாலிபன் என்பதன் எதிர்ப்பாற் சொல்,
வாலிபி
வாலிபிச்சி
வாலை
வாலிபை
'அறியார் புல்லர் நல்லோரை.....' புல்லர் என்பதன் எதிர்க்கருத்து,
அறிவுடையார்
அறிவிலர்
முதியோர்
பகைவர்
"எட்டுணை யானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது" ஈதல் என்பதன் எதிர்ச்சொல்,
வேட்டல்
ஏற்றல்
சிறப்பு
கொடை
"போதம் மூன்றும் நலம் செயும் நாடு...." போதம் என்பதனுள் அடங்காதது எது?
பிறப்பு
இறப்பு
தாழ்வு
வாழ்வு
பிள்ளை என்ற இளமைப் பெயர் பின்வருவனவற்றுள் எதனுடன் பொருந்தி வராது,
கீரி
கிளி
முதலை
அணில்
"டைரக்டரி உண்டாக்கி அதிலே எங்கள் வேலைகளை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்" - டைரக்டரி (Directory) என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்,
குறிப்பேடு
சிற்றேடு
ஒலிப்பதிவு
விபரப்புத்தகம்
அவரிடம் அறிவு தேஜஸ், சட்டெனத் தெரியும். இங்கு தேஜஸ் என்பது,
ஒளி
அழகு
முதிர்வு
தேகம்
கண்ணி,ஆரம்,தொடை என்ற சொற்கள் குறிப்பது,
மாலை
தரளம்
அழகு
கீர்த்தி
பொருத்தமற்ற சொற்களின் இணணப்பு,
உடு - திரள்
வைக்கோல் - கற்றை
மலர் - செண்டு
சுருட்டு - சிப்பம்
வண்டு இரையும் என்பது போல குரங்கு,
சீறும்
அளப்பும்
பாயும்
குழறும்
எடுத்த எடுப்பில் கவிபாடும் ஆற்றல் மிக்கவன்,
வரகவி
ஆசுகவி
சாரதி
மாலுமி
கடவுள் இல்லை என்று நம்புபவன்,
வள்ளுவன்
ஆத்திகன்
அசகாயசூரன்
நாத்திகன்
தேர் செலுத்துபவன் பாகன் என்பது போல விமானம் செலுத்துவோன்,
வலவன்
மீகாமன்
சாரதி
மாலுமி
பின்வருவனவற்றுள் ஒல்லாந்து மொழிச் சொல்,
ஆசுபத்திரி
இலாகா
விராந்தை
தோம்பு
சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்பன,
ஐம்பால்
ஐம்பொறி
ஐம்புலன்
தர்க்கம்
"கன்செப்ட்" (concept) என்பதற்குப் பொருத்தமான கலைச்சொல்,
தலைப்பு
கருத்தாக்கம்
குறியீடு
தர்க்கம்
வலிந்து பொறுப்பாளியாக்குதல் என்பதனைக் குறிக்கும் பொருத்தமான மரபுத்தொடர்,
கழுத்தறுத்தல்
கழுத்திற்கட்டுதல்
காதறுத்தல்
வயிற்றிலடித்தல்
மனப்பால் குடித்தல் என்பதன் பொருள்,
கற்பனை செய்தல்
ருசியாக இருத்தல்
விரும்புதல்
பால் குடித்தல்
ஆடாது அசையாது நிற்றல் எனும் பொருள் தரும் உவமைத்தொடர்,
சிறகற்ற பறவை போல்
சித்திரப் பாவை போல
கல் மேல் எழுத்துப் போல்
நகமும் சதையும் போல்
அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடலாமா? எனும் பழமொழி உணர்த்தும் விடயம்,
அபகரிப்பு
பாதகம்
ஏமாற்றம்
துரோகம்
முத்துப் போன்ற பற்கள் . இங்கு வந்துள்ள உவமேயம்,
முத்து
பற்கள்
போன்ற
மூன்றும்
மாடுகள் தண்ணீர் குடிக்கும் நீர்நிலைகளுக்கு நடப்பட்டிருக்கும் குற்றி,
ஆகுற்றி
ஆவிலக்குற்றி
ஆதிண்டுக்குற்றி
நீராகாரக்குற்றி
வற்றி வரண்டு என்பது ,
இணைமொழி
இரட்டைமொழி
அடுக்குத்தொடர்
அடுக்கிடுக்குத்தொடர்
"பங்கஜம்" எனும் வடசொல் குறிக்கும் தமிழ்ச்சொல்,
மல்லிகை
அலரி
அம்புஜம்
தாமரை
கழிமகிழ் வெய்தினர் என்பதில் கழி என்பது,
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
மலைவாசிகள் ஆடிபாடிக் குதூகலித்தனர். இங்கு தரப்பட்டுள்ள வாக்கியத்தின் அமைப்பின் அடிப்படையில்,
மூன்றும்
தனிவாக்கியம்
கூட்டுவாக்கியம்
கலப்பு வாக்கியம்
நடித்தனன் என்ற சொல்லில் வந்துள்ள பகுபத உறுப்புக்கள்,
பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி
பகுதி, இடைநிலை, விகுதி
பகுதி, சந்தி, சாரியை
பகுதி, சாரியை, விகுதி
விக்கிரகத்தை உடைத்தவனுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.இங்கு உடைந்தவனுக்கு என்பது,
வினைச்சொல்
வினையாலணையும் பெயர்
ஓகார இடைச்சொல்
வியங்கோள் வினை
"வீட்டினின்று புறப்பட்டான்" என்பதில் வந்துள்ள நின்று என்ற சொல்லுருபு எத்தனையாம் வேற்றுமைப் பொருளை உணர்த்தி நிற்கின்றது.
ஆறாம்
ஐந்தாம்
ஏழாம்
இரண்டாம்
பின்வருவனவற்றுள் பிறவினைக்கு உதாரணம்,
அரசன் மக்களை வருத்தினான்.
ஆசிரியர் படித்தார்.
குழந்தை பால் குடித்தது.
கண்ணகி அழுது புலம்பினாள்.
முன்னொட்டு சேர்ந்தமையால் உருவான சொல்,
பாற்காரன்
குணவதி
மீயுயர்
கொடையாளி
நச்சுப்பாம்பை நல்ல பாம்பு எனக் கூறுதல்,
தகுதி வழக்கு
இயல்பு வழக்கு
இலக்கணப்போலி
மரூஉ
ஒரு நண்பன் செய்ய வேண்டிய வேலை உன்னால் செய்யப்பட்டது என்பது,
பிறவினை
செயப்பாட்டுவினை
செய்வினை
ஏவல் வினை
பறவை பறந்தன என்பதில் வந்துள்ள வழு,
எண் வழு
பால் வழு
கால வழு
மரபு வழு
அந்த மரத்திலே காணப்படுகின்ற
ஒவ்வொரு பழங்களும் கசப்பானது.
ஒவ்வொரு பழமும் கசப்பானவை.
ஒவ்வொரு பழங்களும் கசப்பானவை.
ஒவ்வொரு பழமும் கசப்பானது.
டாக்டர் அப்துல் கலாமுக்கு நேர்மையும் முயற்சியுமே
வாழ்க்கையின் குறிக்கோளாய் இருந்தன.
வாழ்க்கையின் குறிக்கோள்களாய் இருந்தது.
வாழ்க்கையின்குறிக்கோள்களாய் இருந்தன.
வாழ்க்கையின்குறிக்கோளாய் இருந்தது.
மாடுகள், குதிரைகள் ஓடுவன போல
ஓடா
ஓடாது
ஓட மாட்டா
ஓட மாட்டாதன
நீர் படித்ததனாலன்றோ
சித்தியடைவாய்
சித்தியடைவீர்
சித்தியடைந்தீர்
சித்தியடைந்தாய்
சுகாதார அமைச்சினால் செய்யப்பட்ட .............. அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அணிந்துரை
பிரேரணைகள்
விதப்புரைகள்
திறனாய்வு
ஆசிரிய ஆலோசகர் தமது கருத்தை வலியுறுத்துவதற்குப் பல இலக்கியங்களிலிருந்து .......................... காட்டிப் பேசினார்.
எடுகோள்
மேற்கோள்
குறிக்கோள்
கருதுகோள்
ஆதி ............ மனிதனுடைய வாழ்வை வளப்படுத்தின.
நாகரிகங்கள்
நாஹரிகம்
நாகரிகங்கள்
நாகரீகம்
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அன்றைய கவியரங்கிலே இடம்பெற்ற கவிதைகள் ஒவ்வொன்றும் ஆழமான பொருளையுடையவை.
அன்றைய கவியரங்கிலேஇடம்பெற்ற கவிதைகள் ஒவ்வொன்றும் ஆழமான பொருளுடையது.
அன்றைய கவியரங்கிலேஇடம்பெற்ற கவிதைகள் ஒவ்வொன்றும் ஆழமான பொருளையுடையது.
அன்றைய கவியரங்கிலே இடம்பெற்ற கவிதைகள் ஆழமான பொருளாலானது.
சரியான வாக்கியத்தை தெரிவு செய்க.
கடற்கரை ஓரமாக மனிதன் ஒருவன் உலாவிக் கொண்டிருந்தான்.
கடற்கரை ஓரமாக ஒருவன் மனிதன் உலாவிக் கொண்டிருந்தான்.
கடற்கரை ஓரமாக ஓர் மனிதன் உலாவிக் கொண்டிருந்தான்.
கடற்கரை ஓரமாக மனிதன் ஒன்று உலாவிக் கொண்டிருந்தான்.
அ) பனையோலைப் பாயில் சுகமாகப் புரண்டு படுத்துக் கிடந்தான்.
ஆ) அவன் படுக்கையிலிருந்து எழும்பி வருகின்றவரை நான் காத்திருந்தேன்.
இ) அவன் உறக்கத்தைக் குழப்ப நான் விரும்பவில்லை.
ஈ) இன்று காலையில் நான் அவனை இடையிடையே போய்ப் பார்த்தேன்.
ஈ,அ,ஆ,இ
ஈ,அ,இ,ஆ
இ,ஆ,அ,ஈ
அ,ஆ,இ,ஈ
