WorksheetsTamil Grade 04
Total questions: 50
Worksheet time: 8hrs 20mins
நாம் தினமும் .............த்தால் எமது உடல் சுத்தமாக இருக்கும்.
குலி
குளி
குழி
'அழகு' என்பதன் ஒத்தகருத்துச் சொல்,
சீவியம்
கீதம்
எழில்
'உலவு' என்பதன் பொருள்,
உலவுதல்
பயிர்த்தொழில்
வேற்றுப்பெயர்
சந்தேகம் என்பதன் ஒத்தகருத்துச் சொல்,
அமைதி
ஐயம்
சந்தோசம்
துன்பம் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,
கவலை
துக்கம்
இன்பம்
சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்,
தீபாவளி
தீவாளி
தீபவாளி
'அரி' என்பதன் பொருள்,
உணர்தல்
அரித்தல்
தெரிந்து கொள்ளல்
கடிதம் என்பதன் பன்மை வடிவம்,
கடிதங்கள்
கடிதம்கள்
கடிதம்ங்கள்
மரம்+கன்றுகள் என்பதைச் சேர்த்தெழுதினால் வருவது,
மரம்கன்றுகள்
மரகன்றுகள்
மரக்கன்றுகள்
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
12
18
30
வாழைப்பழம் என்பதைப் பிரித்தெழுதினால் வருவது,
வாழை+பழம்
வாழைப்+பழம்
வாழை+ப்பழம்
சிறுவன் என்பதன் எதிர்ப்பாற்சொல்,
சிறுவி
சிறுமி
சிறுனி
நான் காடுகளை .............................
பாதுகாப்பான்
பாதுகாப்போம்
பாதுகாப்பேன்
பின்வருவனவற்றுள் உயர்திணைச் சொல்,
அப்பா
கதிரை
குரங்கு
பால்+சோறு என்பதைச் சேர்த்தெழுதினால் வருவது,
பால்சோறு
பாற்சோறு
பாட்சோறு
சத்தியம், வாய்மை ஆகிய கருத்துக்களைத் தரும் சொல்,
களிப்பு
உண்மை
சுத்தம்
'கிளி' என்பது,
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
மாமா போன வருடம் கனடாவுக்குப் .....................
போவார்
போகின்றார்
போனார்
ஒளியைப் பரப்புவது,
விளக்கு
விலக்கு
விழக்கு
சமுத்திரம் என்பதன் ஒத்தகருத்துச் சொல்,
குளம்
குட்டை
கடல்
'பூ' என்பதன் பன்மை வடிவம்,
பூக்கள்
பூகள்
பூங்கள்
'தம்பியும் தங்கையும் கடைக்குப் போனார்கள்' என்ற வாக்கியத்திலுள்ள வினைச்சொல்,
தம்பி
கடை
போனார்கள்
'அவன்' என்பது,
தன்மை
முன்னிலை
படர்க்கை
கண்களில் இருந்து கண்ணீர் ...............
கசிந்தது
கசிந்தன
கசிந்தான்
பூவின் மணம் மனத்திற்கு இன்பம் தரும். இதில் வந்துள்ள வல்லின மெய் எழுத்து,
ன்
ற்
ம்
உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?
பன்னிரண்டு
பதினெட்டு
இருநூற்றுப்பதினாறு
மீன்+இனம் என்பதைச் சேர்த்தெழுதினால் வருவது?
மீனம்
மீனினம்
மீன்இனம்
நேற்று மாமாவும் தம்பியும் கண்டியில் இருந்து ......................
வந்தார்கள்
வருவார்கள்
வருகிறார்கள்
இலைகளும் தளிர்களும் முறிந்தும் துவண்டும் .................
கிடந்தது
கிடந்தன
கிடந்தார்கள்
ப.....வை ம......த்தில் கூடு கட்டியது.
ர,ற
ற,ர
ற,ரி
புலி உறுமும் என்பது போல யானை,
கனைக்கும்
பிளிறும்
அலறும்
கற்றாளையின் உள்ளீட்டு மரபுப் பெயர் யாது?
சோறு
சதை
அரிசி
தாளைக் கொடுத்தால் உண்ணும்:தண்ணீர் கொடுத்தால் மடியும்.அது என்ன?
நெருப்பு
வெடி
மத்தாப்பு
காலம் எத்தனை வகைப்படும்?
2
4
3
உயிர் எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் சொல் எது?
அம்மா
பசு
கிழக்கு
கணவன் என்பதன் எதிர்ப்பாற் சொல்,
கணவி
மனைவி
மாதினி
"நூலகம்" என்ற சொல்லில் உள்ள உயிர்க்குறி யாது?
மடக்கேறு
மடக்கேறும் சுழியும்
மடக்கேறும் அரவும்
"கோதை புத்தகம் வாங்கினாள்" இதில் உள்ள செயப்படுபொருள்,
கோதை
வாங்கினாள்
புத்தகம்
"அது" என்ற ஒருமைச் சொல்லின் பன்மை வடிவம்,
அதுகள்
அவை
இது
"இங்குள்ள மலர்களைப் பறிக்காதீர்கள்" என்பது ஓர்......
அறிவித்தல்
அறிவுறுத்தல்
அறிவுரை
கடிதம் எழுதும் போது ஒழுங்கு சரியான முறையில் அமைதல் வேண்டும். அதைக் காட்டும் சரியான ஒழுங்குமுறை எது?
விலாசம்-செய்தி-விளிப்பு-முடிவு
செய்தி-முகவரி-விளிப்பு-முடிவு
விலாசம்-விளிப்பு-செய்தி-முடிவு
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதன் கருத்து,
நன்றியை உடனே மறந்துவிட வேண்டும்.
உணவளித்து உதவியவரை இறக்கும் வரை மறக்கக் கூடாது.
உப்பினை உற்பத்தி உய்தவரை மறக்கக் கூடாது.
ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான சொல்,
உழவன்
ஆசிரியை
அகதி
தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?
247
216
245
ஒருமை, பன்மை என்பவற்றுக்கு பொதுவான சொல் எது?
மாணவர்கள்
கிளைகள்
அரிசி
பின்வருவனவற்றுள் பன்மை அஃறிணைச் சொல் எது?
பெண்கள்
புத்தகங்கள்
ஆண்கள்
நம்ப முடியாத கதை,
நவல் கதை
கட்டுக்கதை
காவல் கதை
உயர்திணை ஒருமைப் பெயர்ச் சொல் ஒன்று,
ஆசிரியர்
கண்கள்
மாடு
வீண் செலவு செய்பவன்,
ஊதாரி
வள்ளல்
சகபாடி
"கணனி" இச் சொல்லில் ஒரு எழுத்தை நீக்கினால் வரும் உணவு,
கணி
கனி
கநி
