WorksheetsTamil grade 06
Total questions: 50
Worksheet time: 8hrs 20mins
தந்தை கூறியதைப் பற்றி மகன் யோசிக்கத் தொடங்கினான். மகன் என்பதன் ஒத்தகருத்துச் சொல்,
புத்திரன்
மகள்
சகோதரன்
மாதா
மகாவலிகங்கை நீண்ட நதி ஆகும். நதி என்பதன் ஒத்த பதம்,
குளம்
சுனை
ஆறு
ஓடை
எனது அம்மா கோபம் கொண்டார். இங்கு கோபம் என்பதன் ஒத்த பதம்,
வெகுளி
துன்பம்
வெறுப்பு
மூர்க்கம்
இலங்கை இயற்கை வளம் மிக்க நாடாகும்.இங்கு இயற்கை என்பதன் எதிர்ப்பதம்,
தூய்மை
செம்மை
இனிமை
செயற்கை
வகுப்பில் மிக உயரமான மாணவன் குமரன். இங்கு உயரமான என்பதன் எதிர்ப்பதம்,
நீளமான
மெலிவான
கட்டையான
அகலமான
பாடகனுக்கு பாடகி என்பது போல குறவன் என்பதன் எதிர்ப்பால்,
குருத்தி
குறத்தி
குமரி
குருபத்தினி
நான் பாடத்தை ஆர்வத்தோடு கற்றேன். இவ்வாக்கியத்தின் பயனிலை,
நான்
பாடத்தை
கற்றேன்
ஆர்வத்தோடு
நாங்கள் இயற்கைக் காட்சிகளைக் கண்டு இரசித்தோம்.இதில் வந்துள்ள இரசித்தோம் என்பது,
நிகழ்காலம்
எதிர்காலம்
கோடைகாலம்
இறந்தகாலம்
கந்தன் மரத்தை ஓங்கி வெட்டினான். இதில் வந்துள்ள செயற்படுபொருள்,
மரம்
கந்தன்
ஓங்கி
வெட்டினான்
பின்வருவனவற்றுள் தன்மை பன்மையாக அமையும் சொல்,
நான்
நாம்
அவர்கள்
அவை
முற்றும் துறந்தவர் எனக் குறிப்பிடப்படுபவர்,
ஞானி
ஆத்திகன்
நாத்திகன்
பிரமச்சரியன்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
நெடில்
மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை,
12
18
30
216
பறவைகள் பலவிதம் எனும் பாட அலகின் ஆசிரியர்,
செ.கணேசலிங்கம்
நாவலியூர் சோமசுந்தரப்புலவர்
கோகிலா மகேந்திரன்
பேராசிரியர் சோதி
உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் இணையும் போது உருவாகும் எழுத்து,
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
ஓர் எழுவாயும் ஒரு பயனிலையும் கொண்ட வாக்கியம்,
கலப்பு வாக்கிகியம்
ஏவல் வாக்கியம்
தொடர் வாக்கியம்
தனி வாக்கியம்
பசுக்கள் புல் மேய்ந்தன. இங்கு பசுக்கள் என்பது,
பலவின்பால்
ஒன்றன்பால்
பொதுப்பால்
பலர்பால்
குயில் கூவும் என்பது போல ஆந்தை,
அலறும்
கத்தும்
கூவும்
அகவும்
ஐயோ பாவம் இவன் நல்லவனாயிற்றே இவ்வாக்கியத்தில் இட வேண்டிய நிறுத்தற் குறியீடு,
மேற்கோட்குறி
முற்றுப்புள்ளி
வினாக்குறி
வியப்புக்குறி
'அடிசில் சமைப்பதற்கு அடுப்புக்குதவிடுவேன்' 'அடிசில்' என்பதன் பொருள்,
உணவு
இறைச்சி
விறகு
சாதம்
'இளைத்தல் இகழ்ச்சி' இதில் 'இகழ்ச்சி' என்பதன் எதிர்ப்பதம்,
தூற்றுதல்
வணங்குதல்
புகழ்ச்சி
களைத்தல்
வெள்ளைப் பூனை நீண்ட வாலை ஆட்டியது. இதிலுள்ள எழுவாய்,
வால்
பூனை
ஆட்டியது
ஆட்டும்
அவன் வெளிநாடு செல்கின்றான். இங்கு 'அவன்' என்பது,
முன்னிலை
பயனிலை
தன்மை
படர்க்கை
'ஆறுவது சினம்' இதில் 'சினம்' என்பதன் ஒத்தசொல்,
கோபம்
மகிழ்ச்சி
குணம்
மனம்
செங்கோலாட்சி நடைபெறும் நாடு எது? இங்கே இறுதியில் வந்துள்ள குறியீடு,
காற்புள்ளி
வினாக்குறி
மேற்கோட்குறி
வியப்புக்குறி
பின்வருவனவற்றுள் அஃறிணைச் சொல் அல்லாதது,
பந்து
குருவிகள்
புலவர்
கூடை
அவன் இல்லற வாழ்வை இனிது நடத்தினான். இங்கு 'இல்லறம்' என்பதன் எதிர்க்கருத்து,
நல்வாழ்வு
இல்வாழ்வு
துறவறம்
மணவாழ்வு
கமுகின் இளையது பிள்ளை என்பது போல பலாவின் இளையது,
வடலி
கன்று
குஞ்சு
குட்டி
வைகறை,புலர்,விடியல் என்பவற்றைக் குறிக்கும் ஒரு சொல்,
மாலை
உதயம்
மதியம்
சாமம்
பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்துக்கள்,
ஜ,ஸ,ஷ,ஹ
ங,ஞ,ண,ம
ய,ர,ல,வ
க,ச,த,ப
பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி அல்லாதது,
அடிதடி
சிடுசிடு
கிசுகிசு
நெருநெரு
"அணிற் பாடல்" எனும் பாடலை இயற்றியவர்,
ஒளவையார்
பாரதியார்
அழவள்ளியப்பா
பாரதிதாசன்
பின்வருவனவற்றுள் பன்மையை உணர்த்தும் சொல்,
ஆடு
மரம்
மக்கள்
மண்வெட்டி
"ஒற்றுமையே பலமானது " என்பதை விளக்கும் பழமொழி,
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அற்ப ஆசை கோடி தரித்திரம்.
ஆழமறியாது காலை விடாதே.
நெற்வேக் (network) எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப்பதம்,
தரவுக்கோப்பு
இணைமொழி
வலையமைப்பு
இறுவட்டு
முனிவர்கள் வசிக்கும் இடம்,
முதியோர் இல்லம்
அகதி முகாம்
பிருந்தாவனம்
ஆச்சிரமம்
மாணவர்கள் ஆசிரியர்களோடு சுற்றுலா ............
சென்றார்
சென்றது
சென்றனர்
சென்றீர்கள்
நான் வீட்டில் நிண்டதால் வகுப்பறை வேலையில் ஈடுபடவில்லை. இதில் 'நிண்டதால்' என்ற சொல்லின் சரியான வடிவம்,
நின்றதால்
நிண்டு
நின்றதாலை
நிண்றதால்
பந்தியொன்றில் தவிர்க்கப்பட வேண்டியது,
கூறியது கூறல்
தலைமைப் பொருள்
துணைக் கருத்து
கருத்துத் தொடர்பு
பயனிலையோடு திணை,பால், எண்,இட உறவு கொண்டுள்ள பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
பயனிலை
எழுவாய்
அடைமொழி
செயப்படுபொருள்
பெயர்ச்சொற்களை பாலடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?
2
3
4
5
பின்வருவனவற்றுள் உயர்திணை ஒருமையாக அமைவது,
பசு மேய்ந்தது.
கமலா பாடினாள்.
அவர் படித்தார்கள்.
பசுக்கள் மேய்ந்தன.
கேட்போனைச் சுட்டும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
தன்மை
முன்னிலை
படர்க்கை
அஃறிணை
தம்பி கடைக்குப் போனான்.இவ்வாக்கியம் உணர்த்தும் காலம்,
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்க்காலம்
பருவகாலம்
ஒரு வாக்கியத்தின் முடிவைக் காட்டும் நிறுத்தற்குறி,
காற்புள்ளி
அரைப்புள்ளி
வினாக்குறி
முற்றுப்புள்ளி
"அறம் செய்ய விரும்பு" என்றார் ஒளவைப்பிராட்டியார். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ".........." என்ற குறியீட்டின் பெயர்,
காற்புள்ளி
மேற்கோட்குறி
வியப்புக்குறி
வினாக்குறி
பின்வருவனவற்றில் கடிதத்தின் உறுப்பாக அமைவது,
முகவரி
முகவுரை
முடிவுரை
தொடருரை
திருக்குறளில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை,
133
1330
13
1339
ஒருவர் தனது சிறுவயதுப் பழக்கத்தையே முதியவரானாலும் கடைப்பிடிப்பார் என்பதை உணர்த்தும் பழமொழி,
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா?
தொட்டியில் பழக்கம் சுடுகாடு வரை.
பின்வருவனவற்றில் அழைப்பிதழில் இடம்பெற வேண்டிய முக்கியம்சங்கள்,
தலைப்பு, காலம், நேரம், இடம்
தலைப்பு, விளக்கம், நன்றி, ஒப்பம்
தலைப்பு, முகவரி, விளிப்பு,நன்றி
தலைப்பு, விடயவிபரிப்பு,முடிப்பு,குறியீடுகள்
