wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வன்தொடர்க் குற்றியலுகரம் ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வருவதாகும்.

a)

சரி

b)

தவறு

2.

கழுத்து + சங்கிலி =

a)

கழுத்துச் சங்கிலி

b)

கழுத்து சங்கிலி

3.

கீழே விழுந்த மூதாட்டியின் ___________ அமுதன் எடுத்துத் தந்தான்.

a)

மூக்கு கண்ணாடி

b)

மூக்குக் கண்ணாடி

c)

மூக்குகண்ணாடி

4.

கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் எது வன்தொடர்க் குற்றியலுகரமாகும்?

a)

பாக்கு

b)

காக்கி

c)

மூக்கு

d)

சுக்கு

5.

பார்வை தெளிவாக இல்லாததால், விருந்தாளிகளை _____________ தாத்தா.

a)

உற்று பார்த்தார்

b)

உற்றுப் பார்த்தார்

6.

"சாக்குப் போக்கு"

இச்சொற்றொடர் சரியாக வலிமிகுந்துள்ளதா?

a)

சரி

b)

தவறு

7.

பேச்சுப் போட்டியில் ____________ தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சுந்தரம்.

a)

தோற்று போன

b)

தோற்றுபோன

c)

தோற்றுப் போன

8.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தேர்தெடுக.

a)

குச்சுப் புடி

b)

நாக்குப் புண்

c)

பேச்சுத் திறன்

d)

கூட்டுச் சேர்ந்தனர்

9.

_______________________ மிகுந்த ஆர்வம் கொண்ட பூவரசன் தமிழ்த்தென்றல் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தான்.

a)

அச்சு தொழிலில்

b)

அச்சுதொழிலில்

c)

அச்சுத் தொழிலில்

10.

வீட்டின் ____________________ தொலைத்த அக்காள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டாள்.

a)

கொத்துச் சாவியைத்

b)

கொத்துச் சாவியை

c)

கொத்துசாவியைத்

11.

விவசாயி பழங்களைச் ____________ பைகளில் போட்டார்.

a)

பட்டுப்

b)

கட்டுப்

c)

சாக்குப்

d)

மூச்சுப்

12.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் ________ போட்டார்.

a)

பட்டுப்

b)

கட்டுப்

c)

சாக்குப்

d)

மூச்சுப்

13.

இன்றைய இளைஞர்கள் வெட்டிப் __________ பேசியே காலத்தை வீணே கழிக்கின்றனர்.

a)

வீட்டுப்

b)

மாற்றுப்

c)

மக்குப்

d)

பேச்சுப்

14.

அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி ____________ சென்றார்.

a)

பட்டுச்

b)

விட்டுச்

c)

கட்டுச்

d)

அச்சுச்

15.

அத்தைக்குப் ____________ புடவை என்றால் மிகவும் பிடிக்கும்.

a)

பட்டுப்

b)

விட்டுப்

c)

சாக்குப்

d)

நச்சுப்

16.

அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் _________ திணறல் ஏற்படலாம்.

a)

நச்சுத்

b)

நாக்குத்

c)

சாக்குத்

d)

மூச்சுத்

17.

பாட்டி ________ தோப்புக்குச் சென்று வந்தார்.

a)

நச்சுத்

b)

விட்டுத்

c)

பாக்குத்

d)

சாக்குத்

18.

மாமா சிறுவயதிலிருந்தே ___________ தொழிலில் ஈடுபட்டிள்ளார்.

a)

அச்சுத்

b)

கட்டுத்

c)

சாக்குத்

d)

மூச்சுத்

19.

கணினியைப் பயன்படுத்த அடம்பிடித்த தங்கைக்கு அண்ணன் _________ கொடுத்தார்.

a)

கட்டுக்

b)

அச்சுக்

c)

விட்டுக்

d)

பாக்குக்

20.

காலாவதியான உணவுப் பொருள்களில் _________ தன்மை இருக்கும்

a)

நச்சுத்

b)

அச்சுத்

c)

விட்டுத்

d)

கட்டுத்