Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 2 - பழமொழி

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ப பழமொழியைத் தெரிவு செய்க.


ஆயிரம் ஆசை வார்த்தைகள் கூறினாலும் பிறரை ஏமாற்றி வாழ நினைப்பது பாவம் என்ற கொள்கையைக் கொண்ட இரவி, தன் நண்பனின் திட்டத்திற்கு உடன்பட மறுத்தான்.

a)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

அடாது செய்பவன் படாது படுவான்

2.

பழமொழிக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை என்பதை உணர்ந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை இளம் வயது முதற்கொண்டே பல நடவடிக்கைகளில் ஈடுபடுத்திவருகின்றனர்.

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை உணர்ந்த சேகரன் மிருகக் காட்சி சாலையில் தன் பாதுகாப்பிலிருக்கும் புலிக்குப் புல்லை உணவாகக் கொடுப்பதில்லை.

c)

அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கு ஏற்பக் காவல் துறை அதிகாரியான அந்த இளைஞர் பலராலும் போற்றப்படுகிறார்.

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? என்பதை உணர்ந்த அன்பரசி தினமும் மறக்காமல் மாங்காய் சாப்பிடுவாள்.

3.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


வாழ்க்கையில் எவ்வளவு துன்பப்பட்டாலும் பொய் சொல்லக்கூடாது என்ற தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தார் மன்னர் அரிச்சந்திரன்.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

அடாது செய்பவன் படாது படுவான்

d)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை

4.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அப்போதே அப்பா படி,படி என்று தலைப்பாடாய் அடித்துக் கொண்டார். கேட்டால்தானே! ம்ம்ம்... இப்போது ஐந்துக்கும் பத்துக்கும் மாடாய்த் தேய வேண்டியிருக்கு.

a)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

b)

அடாது செய்பவன் படாது படுவான்

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

d)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை

5.

பழமொழி மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை என்பதற்கேற்ப இளமாறன் வயதில் மூத்தோரை மதிக்கும் பண்பைக் கொண்டவன்.

b)

அடாது செய்பவன் படாது படுவான் என்பதுபோல மலர்வதி, பிறரின் நற்செயல்களைப் பாராட்டத் தயங்குவதில்லை.

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? என்பதற்கொப்ப நீலன் வெறுமனே இருக்காமல் தன் இலட்சிய வீட்டைக் கட்ட இப்போதே அதற்கான முயற்சியைத் தொடங்கிவிட்டான்.

d)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதையுணர்ந்த மதியரசன் தன் வீட்டைச் சுற்றி புற்களை வளர்த்தான்.

6.

பழமொழியைச் சரியாக நிறைவு செய்க.


ஆலும் வேலும் ____________ நாலும் இரண்டும் _____________

a)

காலுக்குறுதி , பல்லுக்குறுதி

b)

வாய்க்குறுதி , வயிற்றுக்குறுதி

c)

பல்லுக்குறுதி , சொல்லுக்குறுதி

d)

மண்ணுக்குறுதி , மனதுக்குறுதி

7.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


"மாணவர்களே, இது உங்கள் பொன்னான காலம். இக்காலத்தில் சோம்பேறியாக இருக்காமல் நன்கு கற்க வேண்டும். இல்லையேல், பிற்காலத்தில் அதன் பலனை அனுபவிப்பீர்கள். ஆகவே, சோம்பலை விரட்டுங்கள்."

a)

லடாது செய்பவன் படாது படுவான்

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை

8.

படங்களுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

மந்திரத்தால் மாங்காய் பழுத்திடுமா?

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

மந்திரத்தால் மாங்காய் புளித்திடுமா?

d)

மந்திரத்தால் மாங்காய் இனித்திடுமா?

9.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அப்பா, உதவி தேவைப்படுவோருக்குப் பணம் கொடுத்து உதவி செய்வாரே அன்றி அவர்களுக்குக் கடன் கொடுத்து உதவவே மாட்டார். 'கடன் உறவை முறிக்கும்' என்பதால் கடன் கேட்கவும் கூடாது; கொடுக்கவும் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

d)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

10.

பழமொழி மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தித் தெரிவு செய்க.

a)

வேலவன், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதுபோல சில வேளைகளில் மரக்கறி உணவுகளை உண்ணவே மாட்டான்.

b)

அடாது செய்பவன் படாது படுவான் என்ற பழமொழிக்கேற்ப கால்பந்து விளையாட்டின்போது வெற்றிமாறனின் தலை கோல் கம்பத்தில் மோதியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

c)

முதுமையில் துன்பத்திலும் வறுமையிலும் வாடும் குணா இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை என்ற பழமொழிக்கேற்ப தன் இளமை காலத்தை உழைக்காமல் வீணடித்ததை எண்ணி வருந்தினார்.

d)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பதற்கேற்ப புகழ்வேந்தன் சிறுவயதிலிருந்தே பல நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருகிறான்.

11.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


காந்தியடிகள், அயல்நாட்டிற்குச் சென்றால் தீயப் பழக்க வழக்கங்கள் வந்துவிடும் எனப் பயந்த தாயிடம், மது அருந்த மாட்டேன், புலால் உண்ண மாட்டேன், பிற பெண்களைத் தாய், சகோதரிக்குச் சமமாகப் பாவிப்பேன் என சத்தியம் செய்தார். தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தைச் சிறிதும் மீறாமல், காந்தியடிகள் சட்டத்துறையில் பட்டம் பெற்று நாடு திரும்பினார்.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

12.

கீழ்க்காணும் பழமொழியை நிறைவு செய்க.


ஆலும் வேலும் பல்லுக்குறுதி _____________________________

a)

இரண்டும் நாலும் சொல்லுக்குறுதி

b)

மூன்றும் ஆறும் ஆயுளுக்குறுதி

c)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

d)

ஆறும் மூன்றும் ஆயுளுக்குறுதி

13.

"அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும் என்று நீ காத்திருப்பது வீண் கனவு. உழைக்காமல் இங்கு எதுவும் நடக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்!" என்று மாலனுக்கு அறிவுறுத்தினான் வேலய்யன்.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

14.

பழமொழி மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை என்பதற்கேற்ப இளமாறன் தன் இளவயதிலிருந்தே மூத்தோரை மதிக்கும் பண்புள்ளவன்.

b)

அடாது செய்பவன் படாது படுவான் என்பதை உணர்ந்த மலர்மதி தன் எதிர்கால நன்மைக்காகச் சுயத்தொழில் ஒன்றைத் தொடங்கினாள்.

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? என்பதை உணர்ந்துள்ள மலையரசன் தன் இலட்சியத்தை அடைய பலவித முயற்சிகளை இப்போதே மேற்கொண்டு வருகிறான்.

d)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதால் மணாளன் புல்வெளிகள் நிறைந்த இடத்தில் தன் இலட்சிய வீட்டைக் கட்டி வாழ எண்ணினான்.

15.

கீழ்க்காணும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


அடாது செய்பவன் படாது படுவான்.

a)

தகாத செயல்கள் செய்பவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றே தீருவர்.

b)

உயர்ந்த பண்புள்ளவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையில் இருந்து மாற மாட்டார்கள்.

c)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய முயற்சி ஒன்றே வழி.

d)

இளமையில் சோம்பல் கொண்டால் முதுமையில் வறுமையில் வாட நேரிடும்.

16.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


குமரன் : என்ன ஹேமா? திருக்குறளைக் கரைத்துக் குடிக்கிறாய்போல் தெரிகிறது!

ஹேமா : ஆமாம் குமரன். ________________________ என்பது போல் தினமும் திருக்குறளைப் படித்து வந்தால் நம் சொல்வன்மை பெருகும் என்ற பெரியோர்களின் வாக்கை மெய்யாக்கலாம் என்று முயற்சிக்கிறேன்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

அடாது செய்பவன் படாது படுவான்

17.

இளமையில் உணர்ச்சிக்கு அடிமையாகி ஆடாத ஆட்டம் ஆடிய சந்திரன் பின்னர் தொழுநோய்க்கு ஆளாகி மிகவும் துன்பப்பட்டான்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

அடாது செய்பவன் படாது படுவான்

18.

கல்லூரியில் சேர்ந்த குழந்தைவேலைப் புகைப்பிடிக்கவும் புலால் உண்ணவும் நண்பர்கள் வற்புறுத்தியும் அவன் அவற்றைத் தொடவேயில்லை.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

னாலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

19.

சாமியாரிடம் வாங்கியத் தாயத்தைக் கட்டினால் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிட முடியும் என்ற மாலனின் நம்பிக்கை தவறு என்றும் முழு முயற்சியுடன் படித்தால் மட்டுமே நல்ல தேர்ச்சியைப் பெற முடியும் என்று எடுத்துரைத்தான் வேலய்யன்.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

அடாது செய்பவன் படாது படுவான்

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

20.

கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

21.

__________________________ என்ற பழமொழியின் பொருளை உணர்ந்த தானப்பன், பெருஞ் செல்வாக்குடையவனாக ஆகும் தன் இலட்சியத்தை அடைய இளம் வயதிலிருந்தே உறுதியுடன் செயல்பட்டான்.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

22.

ஊருக்குத் திரும்பி வந்தால் செல்வமும் செல்வாக்கும் கொண்டவனாகத்தான் வரவேண்டும் என்றும் அம்முடிவிலிருந்து கிஞ்சிற்றும் மாறப்போவதில்லை என்றும் உறுதியாகக் கூறினான் தானப்பன்.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

மந்திரத்தால் மாங்காய் விடுந்திடுமா?

23.

மருத்துவ குணங்கொண்ட ஆலங்குச்சியும் வேப்பங்குச்சியும் பற்களை உறுதிசெய்யும் அதுபோல் நன்னெறி நூல்களான நாலடியாரும் திருக்குறளும் நம் வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

d)

அடாது செய்பவன் படாது படுவான்

24.

மூடநம்பிக்கைகளால் நமக்கு எந்தப் பயன்களும் விளையாது என்பதை உணராமல் இந்நவீன காலத்திலும் பலர் போலிச்சாமியார்களை நம்பிப் பணத்தையும் வாழ்வையும் பாழாக்குகிறார்கள்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

d)

அடாது செய்பவன் படாது படுவான்

25.

இளையோர் தங்கள் இளம் பருவத்தில் நன்முறையில் தொய்வின்றிச் செயலாற்றினால், அவர்கள் எதிர்காலத்தில் துன்பப்பட நேரிடுமோ என அச்சப்பட வேண்டியதில்லை.

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?