wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் படிவம் 5

Total questions: 52

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற பொழுது நம்மைக் காத்து நிற்கும்.

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

தர்மம் தலை காக்கும்

2.

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

தர்மம் தலை காக்கும்

3.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

a)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

தர்மம் தலை காக்கும்

4.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

d)

தர்மம் தலை காக்கும்

5.

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

6.

முன்னர் நாம் செய்த செயலின் பயனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும். தீமை செய்யின் தீமை விளையும்.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

7.

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

8.

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால், அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது.

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

துணை போனாலும் பிணை போகாதே

9.

செய்கையைக் கொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ ஒருவரின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்துகொள்ள முடியாதவர் எதையும் அறிந்துகொள்ள முடியாதவரே ஆவார்.

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

துணை போனாலும் பிணை போகாதே

10.

கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது. ஆகவே, மனக்கவலை உடையவர் வலுவிழந்தவராகவே கருதப்படுவார்.

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

கெடுவான் கேடு நினைப்பான்.

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

மனக்கவலை பலக் குறைவு

11.

................................ மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

a)

நேடுநீர்

b)

நெடுநிர்

c)

நெடுநீர்

d)

நெடுநீரர்

12.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன் எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

காலம் நீட்டிக்காமல் , மறதி சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

b)

காலம் நீட்டித்தல் , மறதி இல்லாமை , சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

c)

காலம் நீட்டித்தல் , மறதி சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

d)

காலம் நீட்டித்தல் , மறதி சோம்பல், ஆகிய மூன்றும் மட்டுமே கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலாம்.

13.

நகுதற் பொருட்டன்று நட்ட மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, தீமையைஇடித்துக்கூறாது.

b)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் நட்பாகும்; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

c)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

d)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் நன்மை செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

14.

.......................... பொருட்டன்று நட்ட மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

a)

நகூதற்

b)

நகுதற்

c)

நகுதாற்

d)

நகுதர்

15.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்தோ சால்பு

எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் துன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை

b)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை

c)

தமக்குத் இன்பமே செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை

d)

தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற சிறுங்குணம் இருந்தும் பயனில்லை

16.

இன்னாசெய் தார்க்கும் இனியவே

............................................

என்ன பயத்தோ சால்பு

a)

செய்யாக்கல்

b)

செய்யாக்கால்

c)

செய்யக்கால்

d)

செய்யாகால்

17.

கீழ்க்காணும் சூழலில் எது

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்தோ சால்பு

எனும் திருக்குறளை விளக்குகிறது?

a)

மங்கை தனது பேராற்றாலால் சிவாவுக்கு பணச் சீக்கலை உண்டாக்கிளாள்.

b)

மாறன் தனக்கு துன்பம் கொடுத்த குமரனுக்கு, அவன் கஷ்டத்தில் இருக்கும் வேளையில் உதவினான்.

c)

மதியழகன் தன் குடும்பத்தாருக்குத் தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்தார்.

d)

சங்கரன் தனது குழந்தைகளைத் தீங்கு விளைவித்த மாறனை பழிக்குப் பழி வாங்கினான்.

18.

கீழ்க்காணும் சூழலில் எது

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

எனும் திருக்குறளை விளக்குகிறது?

a)

ரவி தனது தங்கைக்குப் புத்தகம் வாங்கி கொடுத்தான்.

b)

மாலதி தனது நண்பர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தாள்.

c)

மாறன் தனது தோழன் செய்யும் அனைத்திற்கும் செவி சாய்ப்பான்.

d)

செல்வி தனது தோழி கவிதாவுக்கு தேவையான ஆலோசனைகளைக் கூறி அவள் தவறான பாதைக்குச் செல்லும் போது அதனைக் கண்டித்துக் கூறுவாள்.

19.

கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற சூழல் யாது?

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

a)

மாறனுடைய காலத் தாமதம் , மறதி, சோம்பல், அதிகத் தூக்கம் ஆகிய பண்புகள் அவனை வெற்றியின் உச்சிக்கு சென்றடையவிட்டது.

b)

கவிதா நன்றாக தனது தேர்வில் விடையளித்தாள்

c)

மோகன் அவனின் காலத் தாமதம் , மறதி, சோம்பல், அதிகத் தூக்கம் ஆகிய பண்புகள் அவனை பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற செய்யவில்லை.

d)

மங்கை தூக்கம் இல்லாமல் அன்று முழுவதும் தனது வீட்டுப்பாடங்களைச் செய்து முடித்தாள்.

20.

சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைக் கண்டுபிடி.

நமது மாமன்னர் அரியணை ஏறியது முதல் இன்று வரை பல்வேறு தரப்பினருக்குப் பல லட்சம் வெள்ளியைத் தர்மமாக கொடுத்துள்ளார்.

a)

ஆசாரக் கள்ளன்

b)

கருணைக் கடல்

c)

ஈவிரக்கம்

d)

விழலுக்கு இறைத்தல்

21.

2019 ஆண்டு மலேசியாவின் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லாவண்யாவுக்கு அரசாங்கத்தின் உபகாரச்சம்பளமும் கிடைத்தது.அவளது அப்பா மகிழ்ந்தார். மரபுத்தொடர்?

a)

இனிப்புக் காட்டுதல்

b)

கைக்கூடுதல்

c)

வெள்ளிடைமலை

d)

உச்சிக் குளிர்தல்

22.

2020 ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிந்ததும் ஜனவரியில் ஐரோப்பா சுற்றிப்பார்க்க எண்ணியிருந்த நவமியின் ஆசை தேர்வு 2021 ஒத்திப்போனதால் சிதைந்தது. மரபுத்தொடர்?

a)

கயிறு திரித்தல்

b)

கைக்கூடுதல்

c)

கானல் நீர்

d)

முட்டுக்கட்டை

23.

"இந்த உலகம் பொல்லாதது. நாம் இருப்பது கொஞ்ச காலம் . நமக்கு ஏண்டா வம்பு ? நீங்க சொல்லறது சரிதான்னு போக வேண்டியது தானே!"

a)

இனிப்புக் காட்டுதல்

b)

ஒத்துப்பாடுதல்

c)

கைக் கூடுதல்

d)

இரண்டுங் கெட்டான்

24.

"ரொம்ப நாளுக்குப் பிறகு எங்க அக்காவுக்கு இப்பதான் மாப்பிள்ளை கிடைத்தார். அனேகமாக தையில் திருமணம் நடந்துவிடும்."

a)

கைக்கூடுதல்

b)

கைநனைத்தல்

c)

இனிப்புக்காட்டுதல்

d)

உச்சிக்குளிர்தல்

25.

வினா 6 - 10 வரை உவமைத்தொடரைக் கண்டறி.

"என் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு நான் நொந்துவிட்டேன். வேலை இல்லை, விபத்து,மனைவி ஓடிவிட்டாள்..............

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

b)

இலவு காத்த கிளி போல

c)

தீயும் பயிருக்கு பெய்யும் மழை போல

d)

சிறகு இழந்த பறவை போல

26.

"நீங்க எல்லாரும் நல்லா தானே இருந்தீங்க. அந்தப் புது மாணவியின் வருகையால் நட்பு உடைந்ததோ! "

a)

மாலுமி இல்லாத கப்பல் போல

b)

சிறகு இழந்த பறவை போல

c)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

d)

தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல

27.

மணி: ஏன் அவன் இவ்வளவு சோகமா இருக்கான்

குமார்: அவன் பாவம். அத்தை மகள் ஏமாற்றி விட்டாள். கூட படித்தவனைத் திருமணம் செய்துகிட்டா!

a)

நீரு பூத்த நெருப்பு போல

b)

கொழு கொம்பற்ற கொடி போல

c)

இலவு காத்த கிளி போல

d)

சிறகு இழந்த பறவை போல

28.

இலக்கிய வகுப்பு எல்லாவற்றிற்கும் வந்தும் பரீட்சையில் அவன் தோல்வி அடைந்தான்.அவன் நாவலைப்படிக்கவில்லை, நாடகத்தையும் படிக்கவில்லை.

a)

நுனிப்புல் மேய்ந்தாற்போல

b)

விழலுக்கு இறைத்த நீர் போல

c)

ஊமை கண்ட கனா போல

d)

பசுமரத்தாணி போல

29.

என் வரலாற்று ஆசிரியர் ஆரம்பப்பள்ளியில் கொலம்பஸ் என்ற மாலுமியைப்பற்றி கூறினார். அது தான் இன்று என் நேர்முகத்தேர்வுக்கு உதவியது.

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல

c)

தாயைக் கண்ட சேயைப்போல

d)

பசுமரத்தாணி போல

30.

இலக்கணம். வினா 11- 15 வரை. எழுத்துபிழை அறி

பண்றிக்கு நான்கு கால்கள். நமக்கு இரண்டு கால்களே!

a)

நாண்கு

b)

பன்றி

c)

காள்கள்

d)

இரன்டு

31.

பண்ணாட்டு அறிஞர்கள் அந்த அரங்கில் கூடியுள்ளனர்.

a)

அரிஞர்கள்

b)

அறங்கில்

c)

பன்னாட்டு

d)

கூடுயுல்லனர்

32.

விழலுக்கு .............................. நீர் போல

a)

இறைந்த்

b)

இறைத்த

c)

இரைத்த

d)

இறைத்தத

33.

கொழு கொம்பற்ற கொடி போல எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

தடி இல்லாத நிலை

b)

செயல் இழந்து நிற்கும் நிலை

c)

ஆதரவு இல்லாத நிலை

d)

முறையான வழிகாட்டல் இல்லாமை

34.

கொழு ........................ கொடி போல

a)

கொம்பற்றி

b)

கோம்பற்ற

c)

கொம்பற்ற

d)

கொம்பற்றா

35.

விழலுக்கு இறைத்த நீர் போல எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

பயனற்ற உழைப்பு

b)

பயனுள்ளது

c)

பயனுள்ள தேவை

d)

வேண்டாத காரியம்

36.

சிறகு இழந்த பறவை போல எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

பயனற்ற உழைப்பு

b)

செயல் இழந்து நிற்கும் நிலை

c)

முறையான வழிகாட்டல் இல்லாமை

d)

செயல் இருக்கும் வரை போராடுதல்

37.

சிறகு ............................ பறவை போல

a)

இழந்த

b)

தாழ்ந்த

c)

கவிந்த

d)

இழத்த

38.

மாலுமி..................... கப்பல் போல

a)

பயனில்லாத

b)

இருக்கும்

c)

இல்லத

d)

இல்லாத

39.

மாலுமி இல்லாத கப்பல் போல எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

a)

முறையான வழிகாட்டல் இல்லாமை/ தலைமைத்துவம் இருத்தல்

b)

முறையான வழிகாட்டல் இல்லாமை/ தலைமைத்துவம் இல்லாமை

c)

முறையான வழிகாட்டல் இருத்தல்/ தலைமைத்துவம் இல்லாமை

d)

முறையான வழிகாட்டல் இல்லாமை/ தலைமைத்துவம் பயனில்லை

40.

நீறு பூத்த நெருப்புப் போல

a)

கோபத்தை உண்டாக்கி வெளிப்படுத்துதல்

b)

சினம், பகை போன்ற உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளுதல்

c)

சினம், பகை போன்ற உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமை

d)

சினம் போன்ற உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளுதல்

41.

நீறு ................ நெருப்புப் போல

a)

மித்த

b)

பொத்த

c)

பூத்த

d)

புத்த

42.

கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க:

நகுதற் பொருட்டன்று _______________ மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

a)

நாடுவது

b)

நாட்டல்

c)

நடுவது

d)

நட்டல்

43.

கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் ___________________

a)

பொருட்படுத்தல்

b)

பொருட்டு

c)

பொருள்

44.

கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

____________________ இடித்தற் பொருட்டு

a)

மேல்சென்று

b)

விண்சென்று

c)

மேற்சென்று

45.

கீழ்க்காணும் திருக்குறளின் சரியான கருத்தைத் தெரிவு செய்க:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

a)

தவறுகள் செய்வது உண்மையான நட்பு ஆகும்

b)

தவறு செய்ய காரணமாக இருப்பது உண்மையான நட்பு ஆகும்

c)

தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவது உண்மையான நட்பு ஆகும்

46.

கீழ்க்காணும் திருக்குறளின் பொருளை நிறைவு செய்க:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

a)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மட்டும் மகிழ்ந்து தவறுகளை இடித்துக்கூறி விளக்காததே நட்பு ஆகும்.

b)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மட்டும் பேசாமல், நண்பர் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது நட்பு ஆகும்

c)

ஒருவரோடு ஒருவர் சிரித்து மட்டும் பேசாமல் அவரோடு சேர்ந்து தவறுகள் செய்வது நட்பு ஆகும்

47.

உண்மையான நண்பனின் 2 கூறுகளைத் தேர்ந்தெடுக

a)

நம் தவற்றைத் திருத்துபவன்

b)

நம் தவற்றை இடித்துரைக்காதவன்

c)

நம்மிடம் இனிமையாகப் பழகுபவன்

d)

நம்முடன் சேர்ந்து தவறுகள் செய்பவன்

48.

சரியான அமைப்பில் உள்ள திருக்குறளைத் தெரிவு செய்க

a)

நகுதற் பொருட்டன்று மிகுதிக்கண் நட்டல்

இடித்தற் பொருட்டு மேற்சென்று

b)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

இடித்தற் மேற்சென்று பொருட்டு

c)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

d)

மேற்சென்று நகுதற் பொருட்டன்று நட்டல்

மிகுதிக்கண் இடித்தற் பொருட்டு

49.

'மிகுதிக்கண்' எனும் சொற்றொடரின் சரியான பொருள் யாது?

a)

நல்லது செய்தல்

b)

தவறு செய்ய முற்படும்போது

c)

தவற்றைச் சேர்ந்து செய்தல்

50.

'மிகுதிக்கண்' எனும் சொற்றொடரின் சரியான பொருள் யாது?

a)

நல்லது செய்தல்

b)

தவறு செய்ய முற்படும்போது

c)

தவற்றைச் சேர்ந்து செய்தல்

51.

'மேற்சென்று' எனும் சொல்லின் பொருள் யாது?

a)

மேலே செல்வது

b)

கண்டித்தல்

c)

பாராட்டு

52.

' நட்டல்' எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

நடுவது

b)

நட்புக் கொள்ளுதல்

c)

துணை நிற்றல்