wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலம் பறக்குதடா

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

காலம் பறக்குதடா எனும் கவிதையின் மையக்கரு என்ன?

a)

தமிழர்களின் இன்றைய வாழ்வு

b)

தமிழர் முன்னேற்றம்

c)

தமிழர் போராட்டம்

d)

தமிழர் சமுதாயம்

2.

தமிழர்கள் இன்றைய சூழலில் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அவர்கள் தன் வாழ்வில் உயரலாம் என்று கவிஞர் காலம் பறக்குதடா எனும் கவிதையில் குறிப்பிடுகிறார்.


இக்கூற்றுச் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

3.

காலம் பறக்குதடா - தமிழா

வாழப் பறந்திடடா!


எனும் கவிதை வரியின் பொருளைத் தெரிவு செய்க.

a)

காலத்திற்கு ஏற்ப வாழ வேண்டும்.

b)

காலம் வேகமாகச் செல்கிறது.

c)

தமிழர்கள் இக்கால மாற்றத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும்.

4.

இன்றைய தமிழர்கள் தொல்காலத்தில் இருந்த பழம்பெருமையையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனும் கருத்தைக் கவிஞர் எந்த கண்ணியில் குறிப்பிட்டுள்ளார்?

a)

கண்ணி 1

b)

கண்ணி 2

c)

கண்ணி 3

d)

கண்ணி 4

5.

நாளும் நடவடிக்கையிலே - புதுமை

நாடிப் பெருகுதடா!


மோனையைத் தெரிவு செய்க.

a)

நா - பெ

b)

நா - நா

c)

நா - பு

6.

காலம் பறக்குதடா! எனும் கவிதையின் பாடுபொருளைத் தெரிவு செய்க.

a)

சமுதாயம்

b)

வாழ்வியல்

c)

பண்பாடு

d)

பொருளாதாரம்

7.

வாழும் வகைகளிலே - வளங்கள்

வந்து குவியுதடா!


கவிஞர் 'வளங்கள்' என்பதை எதனைக் குறிக்கிறார்?

a)

செல்வம்

b)

பணம்

c)

அறிவு

d)

வசதிகள்

8.

நீயேன் ஆழக் கிணற்றிலுள்ளாய்? எனும் கவிதை வரியின் பொருளை எழுதுக.

4 lines
9.

மீளும் வகைமொழிவார் தம்மொடும்

மோதிக் கெடுத்திடுவாய்!


எனும் கவிதை வரியின் பொருளை எழுதுக.

4 lines
10.

தமிழர்களுக்குக் கவிஞர் கூறவரும் அறிவுரை என்ன? ஒன்றனை எழுதுக

4 lines
11.

'காலம் பறக்குதடா' கவிதையை இயற்றியவர் யார்?

a)

சீனீ நைனா முகமது

b)

வைரமுத்து

c)

கரு. திருவரசு

12.

காலம் பறக்குதடா என்ற கவிதையில் கவிஞர் குறிப்பிடும் சிக்கல்களுக்குரியவர்கள் யார்?

a)

இந்தியர்கள்

b)

ஆங்கிலேயர்கள்

c)

தமிழர்கள்

d)

மலேசியர்கள்

13.

காலம் பறக்குதடா என்ற கவிதையில் எது கவிஞர் சுட்டிக் காட்டும் தமிழர்களின் சிக்கல் அல்ல?

a)

முன்னேறாமல் பின்தங்கியிருத்தல்

b)

ஒற்றுமையின்மை

c)

காலத்திற்கேற்ப வாழும்நிலை அறியாமை

d)

வன்முறை

14.

இரண்டாவது கண்ணியில் இடம்பெற்றிருக்கும் நேற்று - ஊற்று - காற்று சொற்கள் என்ன அணி?

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

பின்வருநிலை அணி

d)

திரிபு அணி

15.

கோளம் - கோலம் என்ற சொற்களின் முதல் எழுத்து எவ்வகை ஓசைநயம்?

a)

இயைபு

b)

சந்தம்

c)

மோனை

d)

எதுகை

16.

இரண்டாவது கண்ணியில் 'நீயேன் ஆழக் கிணற்றிலுள்ளாய்' என்பது எதனைக் குறிக்கிறது?

a)

தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிடரை

b)

தமிழர்களின் பின்தங்கிய நிலை

c)

தமிழர்கள் கிணற்றில் விழுந்து விட்டதை

d)

தமிழர்கள் ஏமாந்து போனதை

17.

காலப் பயனறியாய்! - உய்வைக் காணும் கடன் மறந்தாய் (கண்ணி 3) என்ற அடி உணர்த்தும் கருத்து யாது?

a)

காலம் காலமாய் கடன் வாங்கி துன்பப்பட்டது

b)

வாழ வழித் தெரியாமல் கடன் பெற்றது

c)

காலத்திற்கேற்ப வாழவேண்டும் என்ற கடமையை மறந்தது.

d)

காலத்திற்கேற்ப வாழ இயலாமல் பின் தங்கியது

18.

கோலம் புனையுதடா! (கண்ணி 1) என்பது என்ன அணி

a)

உருவக அணி

b)

உவமை அணி

c)

திரிபு அணி

d)

பின்வருநிலை அணி

19.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.


ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்!

a)

திரிபு அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

20.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.


ஒன்றிச் செயல்புரிந்தால் - நாம்

உச்சிக் குயர்வோமென

ஒன்றி முறைவகுப்பாய்! - சின்னாள்

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

21.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.


நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்!

காற்றுக் கிடையினிலே - அலை

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

22.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.


கோளம் வலம்வரவே - உலகம்

கோலம் புனையுதடா!

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

23.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.


நாளும் முழங்குகின்றாய் - அந்த

நாளில் இருந்ததெல்லாம்!

காலப் பயனறியாய்!- உய்வைக்

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

24.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


சீர்களில் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருவது

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

25.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


ஒரு கவிதையில் முன்னர் வந்த சொல்லே திரும்பவரினும் அல்லது முன்னர் வந்த பொருளே பின்னர்த் திரும்ப வருதல்

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

26.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


உவமையைப் பொருளும் வேற்றுமை இன்றி ஒன்றென கொள்வது. முதலில் உவமைப்படுப்பொருளும் அடுத்து உவமையும் வருதல்.

a)

திரிபு அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

27.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


ஒன்றன் பண்பு, தொழில், பயன் ஆகியவை நன்கு விளங்குமாறு ஒத்ததை ஒப்பிட்டுக் கூறுவது. இதில் முதலில் உவமையும் அடுத்து உவமைப்படுபொருளும் வரும்.

a)

திரிபு அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

28.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


கவிஞர், ஓர் அஃறிணைப் பொருளை உயர்திணையாக உருவகம் செய்து தன் குறிப்பினையும் கருத்தையும் அதன்மேல் ஏற்றிக் கூறுதல்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

29.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


ஒன்றன் தன்மையை அப்படியே இயல்பாக அழகுபட நவில்வது.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

30.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.


ஒன்றன் தன்மையை அப்படியே இயல்பாக அழகுபட நவில்வது.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

31.

நாளை நமதே எனும் கவிதையை எழுதியவர் யார்?

4 lines