NEW
Font size
Worksheetsமுதல் இடைப்பருவத் தேர்வு எட்டாம் வகுப்பு
Total questions: 30
Worksheet time: 23mins
1. சால்பு_________ குற்றியலுகரம்.
அ. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
ஆ. மென்தொடர்க் குற்றியலுகரம்
இ. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஈ. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. குற்றியலுகரம்_ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________.
அ. குறுமை+ இயல்பு+உகரம்
ஆ. குறுமை+ இயல் +இகரம்
இ. குறுமை+ உகரம்
ஈ. குறுமை+ இகரம்
3. 'வந்து சென்றான்'_ இவை எவ்வகை தொடர் என தேர்வு செய்க.
அ. பெயரெச்சத் தொடர்
ஆ. எழுவாய்த்தொடர்
இ. வினையெச்சத் தொடர்
ஈ. வினைமுற்று
4. 'கால் கழுவி வந்தான்'_ இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழக்கு________.
அ. இயல்பு வழக்கு
ஆ. இலக்கணமு டையது.
இ. தகுதி வழக்கு
ஈ. பிரிவு வழக்கு
5. 'சாவி, சன்னல், பண்டிகை'_ இவை எவ்வகை சொல்_________.
அ. வடசொல்
ஆ. திசைச்சொல்
இ. திரிச்சொல்
ஈ. இயற்சொல்
6. "தஞ்சை பெரியக் கோயிலை இராசராசசோழன் கட்டினார்" _ இவை எவ்வகை வாக்கியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு?
அ. தன்வினை
ஆ.பிறவினை
இ. செய்வினை
ஈ. செயல்பாட்டு வினை
7. பிழையான தொடரை கண்டறிக.
அ. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
ஆ.காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
இ. காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
ஈ. நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கின
8. கீழ்காணும் சொற்றொடர்களில் அமைந்துள்ள ஆறுபெயரை தேர்வு செய்க.
"பள்ளியில் மாணவன் முதல் பரிசு பெற்றான்"
அ. சினையாகு பெயர்
ஆ. இடவாகுபெயர்
இ. காலவாகு பெயர்
ஈ.பொருளாகு பெயர்
9. 'எழு, தள்ளு, கதவு' இவற்றின் ஈற்றிலுள்ள இடையின உகரங்கள்__________.
அ. குற்றியலிகரம்
ஆ. குற்றியலுகரம்
இ. முற்றியலுகரம்
ஈ. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
10. 'மலையடிவாரம்' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு_________.
அ.5
ஆ.8
இ.6
ஈ.8½
11. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று___________.
அ. தன்மை இடத்தில் வராது
ஆ. தன்மை இடத்தில் வரும்
இ. முன்னிலை இடத்தில் வராது
ஈ. முன்னிலை இடத்தில் வரும்
12. பின்வருவனவற்றுள் குறிப்பு வினைமுற்றுச் சொல் தேர்வு செய்க.
அ. பாடுகிறான்
ஆ. ஓடு
இ.வாழ்க
ஈ. கண்ணன்
13. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்_________.
அ.க்,ங்
ஆ.ச்,ஞ்
இ.ட்,ண்
ஈ.ப்,ம்
14. 'படித்து வந்தான்'- இதில் படித்து என்பது_________ எச்சம்.
அ. வினை
ஆ. பெயர்
இ. உரிச்சொல்
ஈ. இடைச்சொல்
15. தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம்___________.
அ. குற்றியலுகரம்
ஆ. குற்றியலிகரம்
இ. இடையின உகரம்
ஈ. முற்றியலுகரம்
16. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது_________.
அ. ஆகுபெயர்
ஆ. வினைத்தொகை
இ. வேற்றுமை
ஈ. வழக்கு
17. செய்யுளுக்கே உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குதல்________.
அ. அசை
ஆ. யாப்பு
இ. தளை
ஈ. அடி
18. ஒரு சொல்லின் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து___________.
அ. மெல்லின உயிர்மெய்
ஆ. இடையின உயிர்மெய்
இ. வல்லின உயிர்மெய்
ஈ. வினைச்சொல்
19. "தேன் போன்ற மொழி" -இதிலுள்ள உவம உருபு________.
அ. தேன்
ஆ. போன்ற
இ. மொழி
ஈ. தேன் போன்ற
20. 'மாடு வயலில் புல்லை மேய்ந்தது'- இத்தொடரில் உள்ள வினைமுற்று____________.
அ. மாடு
ஆ. வயல்
இ. புல்
ஈ. மேய்ந்தது
21. கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம தேர்வு செய்க.
அ. படித்து
ஆ. எழுதி
இ. வந்து
ஈ. பார்த்த
22. "முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரிவான் முகிலனும் புகழ் படைத்த உபகாரி."
"இவ்வடிகளில் 'வள்ளல்' என்னும் பொருள் தரும் சொல்லின் பொருள் யாது"
அ. கொடுத்தான்
ஆ. உபகாரி
இ. முகில்
ஈ. வேல்பாரி
23. தற்போது உரைநடை வழக்கில் இல்லாத இலக்கணம் எது?
அ. குற்றியலுகரம்
ஆ. குற்றியலிகரம்
இ. முற்றியலுகரம்
ஈ. ஐகாரக் குறுக்கம்
24. "குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்"_இத்தொடரில் எவ்வகை பெயர் இடம்பெற்றுள்ளது?
அ. பால்
ஆ. இடப்பெயர்
இ. காலப்பெயர்
ஈ. திணைப் பெயர்
25. கீழ்க்காணும் தொடர் எவ்விடத்தை குறிக்கிறது என தேர்வு செய்க.
"அந்தப் பறவை பறந்தன"
அ. தன்மை
ஆ. முன்னிலை
இ. படர்க்கை
ஈ. செய்வினை
26. படிப்பறிவற்ற கிராம மக்கள் இன்றும் ____________அற்றவர்களாக இத்தொடருக்கு தகுந்த இணை மொழியை தேர்வு செய்க.
அ. தப்புத் தவறும்
ஆ. சரமாரியாய்
இ. உற்றார் உறவினர்
ஈ. கள்ளங்கபடு
27. கீழ்க்காணும் தொடரில் வரும் வேற்றுமை உருப்பை தேர்வு செய்க.
"விலங்குகளின் விந்தை உலகைக் காண்போமா"?
அ. முதல் வேற்றுமை
ஆ. விளி வேற்றுமை
இ. ஐந்தாம் வேற்றுமை
ஈ. மூன்றாம் வேற்றுமை
28. "வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்" _இத்தொடரில் உள்ள பெயர்ச்சொல்லை தேர்வு செய்க.
அ. வளவனும்
ஆ. மாநகரம்
இ. தங்கை
ஈ. பேருந்து
29.கீழ்க்காணும் தொடருக்கு சரியான அடுக்குமொழிச் சொற்களை தேர்வுசெய்க. "வினாத்தாள் எளிதாய் அமைந்திருப்பதைக் கண்டதும் பாரதியின் வாய் ____________என்று முணுமுணுத்தது.
அ. அழிப்போம் அழப்போம்
ஆ. பிடி பிடி பிடி
இ. வாழ்க! வாழ்க!
ஈ. அருமை! அருமை!
30. கீழ்க்காணும் தொடருக்கு பொருத்தமான உண்மையை தேர்வு செய்க "சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் ________என் மனதில் பதிந்தன.
அ கிணற்றுத் தவளை போல
ஆ. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
இ. பசுமரத்தாணி போல
ஈ. உள்ளங்கை நெல்லிக்கனி போல
