NEW
Font size
S
M
L
XL
Worksheets25th ABC 1.0 Grand Finale - Category 3 - Tamil
Total questions: 40
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
பேதுரு 1: 1 இல் பேதுரு கடவுளின் மக்களை என்ன சொல்லி அழைக்கிறார்?
a)
நாடுகடத்தப்பட்டவர்கள்
b)
நாட்டினர்
c)
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
d)
கிறிஸ்தவர்கள்
2.
பேதுருவின் கூற்றுப்படி, நமது விசுவாசத்தின் உண்மையான தன்மை எதை விட விலை மதிப்பற்றது?
a)
விலைமதிப்பற்ற கற்களை
b)
தங்கத்தை
c)
வாழ்க்கையை
d)
அன்பை
3.
1 பேதுரு 2: 4-6 இல் இயேசுவையும் அவருடைய சீடர்களையும் விவரிக்கப் பேதுரு எந்தக் கட்டுமானப் பொருளைப் பயன்படுத்துகிறார்?
a)
ஜீவனுள்ள கற்கள்
b)
அடித்தளங்கள்
c)
சிமெண்ட்
d)
கூரை
4.
ஒரு பெண்ணின் உண்மையான அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறாதது எது?
a)
சிறந்த ஆடை
b)
விரிவான சிகை அலங்காரங்கள்
c)
தங்க நகைகள்
d)
விலையுயர்ந்த காலணிகள்
5.
நமது பாவங்களிலிருந்து நாம் எவ்வாறு காப்பாற்றப்பட்டோம்?
a)
விலையுயர்ந்த தங்கத்தாலும் வெள்ளியாலும்
b)
கர்த்தரிடமிருந்து பெற்ற அன்பினாலும் இரக்கத்தினாலும்
c)
தண்டிக்கப்படுவதால்
d)
கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால்
6.
கிறிஸ்தவர்களாக இருப்பதற்குப் பபாடுபட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு ஊக்குவிக்கிறார்?
a)
பிரார்த்தனை செய்ய
b)
ஒளிந்துகொள்ள
c)
ஆண்டவரைத் துதிக்க
d)
அழ
7.
பேதுருவின் கூற்றுப்படி, கணவர்கள் தங்கள் மனைவிகளை எப்படி நடத்த வேண்டும்?
a)
கருணையுடனும் வீரத்துடனும்
b)
அன்புடனும் பக்தியுடனும்
c)
விசுவாசத்துடனும் தைரியத்துடனும்
d)
புரிதலுடனும் கனத்துடனும்
8.
மனைவிகள் தங்கள் கணவர்களுக்குத் தங்களை அர்ப்பணிக்கப் பேதுரு யாரை உதாரணமாகப் பயன்படுத்தினார்?
a)
மரியாள் மற்றும் ஜோசப்
b)
சாராள் மற்றும் ஆபிரகாம்
c)
எலிசபெத் மற்றும் சகரியா
d)
ரெபேக்காள் மற்றும் ஐசக்
9.
தீமையை எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பேதுரு நமக்குக் கற்பிக்கிறார்?
a)
புகழ்ந்து பாடி
b)
ஆசீர்வதித்து
c)
அழுதும் பற்களைக் கடித்தும்
d)
தீமை செய்து
10.
1 பேதுரு 2:25 இல், பேதுரு இயேசு கிறிஸ்துவை எப்படி விவரிக்கிறார்?
a)
மேய்ப்பர் மற்றும் மேற்பார்வையாளர்
b)
மேசியா மற்றும் இரட்சகர்
c)
நீதிபதி மற்றும் ஜூரி
d)
ஊழியர் மற்றும் வேலைக்காரன்
11.
"இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ______ பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
a)
எதிர்காலத்தில்
b)
பரலோக இராஜ்யத்தில்
c)
ஆவியில்
d)
மேலே உள்ள எதுவும் இல்லை
12.
கிறிஸ்துவுக்காக நாம் அவமதிக்கப்படும்போது நாம் ஏன் ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
a)
பரிசுத்த ஆவி நம்மீது தங்கியிருப்பதால்
b)
இயேசு நமக்காக போராடுவதால்
c)
கர்த்தர் அவர்களின் பாவங்களை மன்னிப்பதால்
d)
நாம் சரியாக இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவதால்
13.
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே ___________ தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
a)
அழுகை மற்றும் கூச்சல் இடுவது
b)
மற்றவர்களின் விமர்சனங்களைப் பெறுவது
c)
புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது
d)
எங்கள் எஜமானர்களின் உத்தரவுகளைப் பெறுவது
14.
மூப்பர்கள் மந்தையை எப்படி மேய்க்க வேண்டும் என்று பேதுரு அறிவுறுத்துகிறார்?
a)
அமைதியுடன்
b)
முயற்சியுடன்
c)
மகிழ்ச்சியுடன்
d)
ஆர்வத்துடன்
15.
__________ ஒருவருக்கொருவர் வாழ்த்துங்கள்.
a)
கைகளையடித்து மகிழ்ச்சியோடு
b)
இரண்டு முன்னங்கை விரல்களை மோதிக்கொண்டு
c)
கடவுளின் ஆசீர்வாதத்தோடு
d)
அன்பின் முத்தத்தோடு
16.
இயேசு பரலோகத்திற்குச் சென்ற பிறகு இப்போது எங்கே இருக்கிறார்?
a)
ஒரு மாளிகையில்
b)
கர்த்தரின் பாதுகாப்பில்
c)
கடவுளின் வலதுபாரிசத்தில்
d)
வேதாகமத்தில்
17.
பிசாசை எந்த விலங்குடன் விவரிக்கிறார்?
a)
கர்ஜிக்கும் சிங்கம்
b)
அமைதியான புறா
c)
பசிகொண்ட முதலை
d)
ஆறு தலை நாகம்
18.
"நீங்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் _______ அணிந்து கொள்ளுங்கள்" வாக்கியத்தை முடிக்கவும்.
a)
அன்பை
b)
மனத்தாழ்மையை
c)
பொறாமையை
d)
அமைதியை
19.
பேதுரு ________ என்றும் அழைக்கப்படுகிறார்?
a)
யோவான்
b)
சீமோன்
c)
மத்தேயு
d)
சகேயு
20.
இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே ______________, வாக்கியத்தை நிறைவு செய்யவும்.
a)
தைரியத்தையும்
b)
சந்தோஷத்தையும்
c)
பலத்தையும்
d)
அன்பையும்
21.
கள்ளத் தீர்க்கதரிசிகளின் முடிவு என்னவாக இருக்கும்?
a)
மகிழ்ச்சியான முடிவு
b)
அழியாத தன்மை
c)
நித்திய துன்பம்
d)
தீவிரமான அழிவு
22.
பேதுருவின் கூற்றுப்படி, அக்கிரமக்காரர்களின் தண்டனை எப்போது நிறுத்தப்படும்?
a)
அவர்கள் முற்றிலும் அழிக்கப்படும்போது
b)
நியாயத்தீர்ப்பு நாளில்
c)
3000 ஆண்டுகளுக்குப் பிறகு
d)
இறுதி காலங்களில்
23.
ஒரு திருடனைப் போல கர்த்தருடைய நாள் மீண்டும் வரும்போது, வானத்துக்கு என்ன நடக்கும்?
a)
வானங்கள் மடமட என்று அகன்று போகும்
b)
அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டுப் போகும்
c)
பூதங்கள் வெந்து உருகிப்போம்
d)
தூதர்களின் வாழுமிடமாகும்; அழிக்கப்பட்டுப் பின் உருவாக்கப்படும்
24.
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய ______ வானங்களும் புதிய ______ பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். வாக்கியத்தை நிறைவு செய்.
a)
பொம்மைகளும் கணினியும்
b)
நண்பர்களும் வீடும்
c)
வானங்களும் பூமியும்
d)
ஆசீர்வாதமும் இதயமும்
25.
பரலோகத்தில் கர்த்தருடன் இருக்கும் ஒரு நாள் பூமியில் எத்தனை வருஷங்களாய் இருக்கிறது?
a)
500 நாட்கள்
b)
1000 ஆண்டுகள்
c)
777 ஆண்டுகள்
d)
குறிப்பிடப்படவில்லை
26.
“நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது” என்ற பழமொழியின் பொருள் என்னவென்று நினைக்கிறாய்?
a)
விலங்குகள் எப்படி நடந்துகொள்கின்றன
b)
தூய்மையற்றது
c)
மிகவும் அசுத்தமானது
d)
மாறவில்லை
27.
ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் _______________ ஜாக்கிரதையாயிருங்கள். வாக்கியத்தை நிறைவு செய்யவும்.
a)
பெருமை பேசும்படி
b)
மறக்கும்படி
c)
உறுதியாக்கும்படி
d)
கீழ்ப்படியும்படி
28.
“தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்பதைப் பேதுரு எந்த உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறார்?
a)
கெத்செமனே தோட்டம்
b)
பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றது
c)
யெவீருவின் மகளைக் குணப்படுத்துதல்
d)
இயேசுவின் உயிர்த்தெழுதல்
29.
“இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்” இதில் பேதுரு எதைக் குறிப்பிடுகிறார்?
a)
அவர் சிறிது காலமே வாழப் போகிறார்
b)
அவர் ஒரு பணிக்காக வெகுதூரம் பயணம் செய்வார்
c)
அவர் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்
d)
அவர் வழக்குகளிலிருந்து தப்பிக்கப் போகிறார்
30.
இறைவன் நமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உடனே வராமல்___________ இருக்கிறார்.
a)
அன்போடு
b)
தாராளமாக
c)
மன்னிப்பு வழங்கி
d)
பொறுமையோடு
31.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற _____________ வளருங்கள்
a)
கீழ்ப்படிதலிலும்
b)
கருணையிலும்
c)
மரியாதையிலும்
d)
அறிவிலும்
32.
“அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பர்வதத்திலிருக்கையில் வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்” இதில் நாங்கள் என்பது யாரைக் குறிக்கிறது?
a)
பேதுரு, அந்திரேயா, யாக்கோபு
b)
யோவான்ஸ்நானகன், எலியா, மோசே
c)
பேதுரு, யாக்கோபு, யோவான்
d)
மரியாள், மார்த்தாள், லாசரு
33.
கடவுள் எந்த இரண்டு இடங்களைச் சாம்பலாக மாற்றினார்?
a)
கோஷென் மற்றும் ராம்சேஸ்
b)
சோதோம் மற்றும் கொமோரா
c)
நாசரேத் மற்றும் ஜெருசலேம்
d)
டெகாபோலிஸ் மற்றும் கப்பர்நாகூம்
34.
கழுதையால் யார் கண்டிக்கப்பட்டார்?
a)
பிலேயாம் தீர்க்கதரிசி
b)
தாவீது ராஜா
c)
அப்போஸ்தலனாகிய பேதுரு
d)
ஆசாரியன் ஏலி
35.
FCBH என்றால் என்ன? சரியான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
a)
ஆடியோ பைபிள் ஊழியம் (FCBH) உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கடவுளின் வார்த்தையை பதிவு செய்து அனைத்து மொழிகளிலும் குறைந்த கட்டணத்திற்கு வழங்கி வருகிறது.
b)
ஆடியோ பைபிள் ஊழியம் கடவுளின் வார்த்தையை ஆசிய கண்டத்தில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொரு மொழியிலும் இலவசமாகப் பதிவு செய்து வழங்கி வருகிறது.
c)
ஆடியோ பைபிள் ஊழியம் கடவுளின் வார்த்தையை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொரு மொழியிலும் இலவசமாகப் பதிவு செய்து வழங்கி வருகிறது.
d)
ஆடியோ பைபிள் ஊழியம் (FCBH) மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு கடவுளின் வார்த்தையை பதிவு செய்து அனைத்து மொழிகளிலும் குறைந்த கட்டணத்திற்கு வழங்கி வருகிறது.
36.
வாய்மொழி பைபிள் மொழிபெயர்ப்பு (OBT) வார்த்தைகள்/எழுத்துக்கள் அல்லது எழுதப்பட்ட பைபிள் இல்லாத மொழிகளுக்கான சிறந்த கருவியாகும். ஏனென்றால் OBT ஆல் இரண்டு முறைகளை இணைக்க முடியும்: அவை
a)
மொழிபெயர்ப்பு + பதிவு செயல்முறை
b)
மொழிபெயர்ப்பு + படியெடுத்தல் செயல்முறை
c)
எழுதப்பட்ட + வாசிப்பு செயல்முறை
d)
எழுதப்பட்ட + படியெடுத்தல் செயல்முறை
37.
ஆடியோ பைபிள் பதிவு முடிந்தவுடன், faith comes by hearing (FCBH) இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் கேட்கும் நிகழ்வு தொடங்குகிறது. அவற்றின் பெயர்:
i. ஆடியோ பைபிள் ஆப்ஸ் (அதாவது: Bible.is ஆப்ஸ் மற்றும் குளோபல் பைபிள் ஆப்ஸ்)
ii. எஸ்டி(SD) கார்டுகள்
iii. ஆன்லைன் பதிவிறக்கங்கள்
iv. பிரகடனங்கள் (பின்னணி சாதனங்கள்)
v. நற்செய்தி திரைப்படங்கள் (வார்த்தைக்கு வார்த்தை வீடியோ பைபிள்கள்)
a)
i, ii மற்றும் iii மட்டும்.
b)
i, ii, iii மற்றும் v மட்டும்.
c)
i, iii மற்றும் v மட்டும்.
d)
மேலே உள்ள அனைத்தும்.
38.
ஸ்கிரிப்ச்சர் யூனியனின் (Scripture Union) என்ன வகையான ஊழியங்கள் கிடைக்கின்றன?
a)
உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஊழியங்கள் உள்ளூர் தேவாலயங்களுடன் கூட்டாக இணைந்து பரிசுத்த ஆவியை நடத்துதலினால் சீடர்களை உருவாக்க.
b)
நல்ல சமையல் வகுப்புகள்
c)
வெளிப்புற உயிர்வாழும் திறன்
d)
விளையாட்டு நிகழ்வுகள்
39.
ஸ்கிரிப்ச்சர் யூனியன்(Scripture Union) பின்வரும் எவ்வகை ஊழியப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது:
a)
இளம் தலைவர்களின் பயிற்சி மற்றும் வளர்ச்சி, அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் பக்திப் பொருட்களை வழங்குதல்
b)
கற்பித்தல் கலை
c)
ஆரோக்கியமான வாழ்க்கையை கற்பித்தல்
d)
வாசிப்பு/எழுதும் திறனை ஊக்குவித்தல்
40.
ஸ்கிரிப்ச்சர் யூனியன் (Scripture Union) எவற்றுடன் இணைந்து வேலை செய்கிறது?
a)
பண்பு அடிப்படையிலான மதிப்புகளை கற்பிக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்
b)
டிஜிட்டல் திறன்களை ஊக்குவிக்கும் பள்ளிகள்
c)
சமையல் திறனை ஊக்குவிக்க ஆரம்ப பள்ளிகள்
d)
விளையாட்டுகளை ஊக்குவிக்கின்ற மேல்நிலைப் பள்ளிகள்
Reset
