Font size
Worksheetsமூன்றாம் வகுப்பு-A முதல் பருவத் தேர்வு-2021
Total questions: 40
Worksheet time: 1hrs 24mins
1. பின்வரும் பத்தியைப் படித்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் மல்லி.விளையாடுவதற்காக தன் தோழி மாலதி வீட்டிற்க்குச் சென்றாள்.வழியில் இரண்டு சிறுவர்கள் ஓணானை அடிப்பதற்குக் குறிப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மல்லி ஓணானை அடிக்காதீர்கள்,உங்களை அடித்தால் வலிக்கும் அல்லவா? அது போல அதற்க்கும் வலிக்கும்.எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள்.
1. பள்ளி முடிந்து எங்கு வந்தாள் மல்லி.
காட்டிற்கு
தோட்டத்திற்கு
வீட்டிற்கு
கடைக்கு
2. மல்லி விளையாடுவதற்காக யார் வீட்டிற்குச் சென்றாள்?
அத்தை
தோழி
தாத்தா
ஆசிரியர்
3. மல்லி வழியில் எத்தனை சிறுவர்களைப் பார்த்தாள்?
4. சிறுவர்கள் அடிக்கப்போகும் உயிரினத்தின் பெயர் என்ன?
நாய்
குரங்கு
பல்லி
ஓணான்
5. மல்லி கூறும் நற்கருத்து என்ன?
நூல் பல கல்.
மற்றவருக்கு உதவி செய்.
உயிர்களை துன்புறுத்தக் கூடாது.
ஒற்றுமையாக இரு
6. கதைப்பாடல் வழியாக கருத்தைக் கூறும் பாடத்தலைப்பை தேர்வு செய்க.
இனியவை நாற்பது
உண்மையே உயர்வு
நூலகம்
கல்வி கண் போன்றது
7. உலக அறிவைப் பெறுவதற்கு நாம் ---------- படிக்க வேண்டும்
நூல்களைப்
கதைகளை எழுத
திருக்குறள்
பாடல்
8. நூலக தினம் கொண்டாடப்படும் நாள்-------
மார்ச் 7
செப்டம்பர் 20
ஜூன் 10
ஆகஸ்டு 12
9. நூலக தினத்தன்று குழந்தைகளுக்கு எதன் மூலமாக போட்டிகள் நடத்தப்படும்?
வாசகர் முனை
வாசகர் சதுரம்
வாசகர் வட்டம்
வாசகர் பலகை
10. கழுதை முதுகில் சுமந்து வந்த மூட்டை எது?
உப்பு மூட்டை
துணி மூட்டை
பஞ்சு மூட்டை
அரிசி மூட்டை
11. வாழ்க்கையில் உயர்வைத் தருவது எது?
தாழ்வு
உயர்வு
உழைப்பு
சிறப்பு
12. நூல்களை சேமித்து வைத்திருக்கும் இடம்?
பள்ளிக்கூடம்
நூலகம்
தபால் நிலையம்
அலுவலகம்
13. காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன நடந்தது?
நடனம்
விவாதம்
போட்டி
பாடல்
14. விலங்குகள் ________ நோக்கிச் சென்றன.
காடு
நகரம்
பாலைவனம்
கடல்
15. விலங்குகள் இல்லாத காட்டிற்குள் ---------- புகுந்தன .
பறவைகள்
மனிதர்கள்
கடவுள்கள்
உயிரினங்கள்
16. நூல் + அகம் =-------- சேர்த்து எழுதக் கிடைப்பது
நூல் அகம்
நூல்கம்
நூலகம்
நூஅகம்
17. எனக்கு எந்த காயும் , கிழங்கும் கிடைக்கவில்லையே என்று கூறியது யார்?
18. அறியாமையின் இருளைப் போக்குவது -----------
பணம்
பதவி
தங்கம்
கல்வி
19. ஈ என்ற சொல்லுக்கான பன்மைச் சொல்லைக் கண்டுபிடி?
ஈட்கள்
ஈக்கள்
ஈகள்
ஈங்கள்
20. கையிலே அடங்கும் பிள்ளை கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?
21. படத்திற்கு ஏற்ற சரியான வினைச்சொல்லைத் தேர்வு செய்க.
ஓடினார்கள்
ஏறினார்கள்
இழுத்தனர்
அமர்ந்தார்கள்
22. படர்ந்து +இருந்தது இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்---------
படர்ந்திருந்தது
படர்ந்து இருந்தது
படர்ந்து திருந்தது
படர்ந்ருந்தது
23. தட்டு என்ற சொல்லுக்கான பன்மைச் சொல்லைக் கண்டுபிடி?
தட்டுகள்
தட்டு
வட்டி
தட்கள்
24. பாதுகாப்பு தேடிச் செல்லும் இடம் எது?
25. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள் என்ன?
26. இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.அனைவரும் சமமானவர்களே! எல்லாரும் ஒற்றுமையாக வாழ்வோம்.இக்கருத்தைக் கூறும் பாடம் எது?
தமிழ் அமுது
மாணவர்கள் நினைத்தால்
இனியவை நாற்பது
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
27. பொன்வண்ணன் -----------பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார்
மிதிவண்டி
புகைவண்டி
பேருந்து
கணினி
28. பூமியைக் கெடுக்கும் பூதம் ——------என்று அழைக்கப்படுகிறது .
குப்பை
சாக்கடை
நெகிழி
மரம்
29. ள்/ழ/ந்/கு/தை/க எழுத்துகளை முறைப்படுத்தி புதிய சொல் உருவாக்குக
குழந்தை
கள்குழந்தை
குழந்தைகள்
குழகள்ந்தை
30. ஆறையும் ஐந்தையும் கூட்டினால் வரும் பழம்-------
31. இளமதியும் மணவாளனும் யார்? வீட்டிற்குச் சென்றனர்?
அத்தை
தாத்தா
சித்தப்பா
நண்பர்
32. குழுவில் சேராத சொல்லை எடுத்து எழுதுக
கத்தரி, வெண்டை , தக்காளி , தென்னை , மிளகாய்
வெண்டை
மிளகாய்
தக்காளி
தென்னை
33. இளமதியும் மணவாளனும் எந்த வண்டியில் அத்தை வீட்டிற்குச் சென்றனர்?
34. கிராமசபைக் கூட்டத்தை நடத்துபவர் யார்?
நகராட்சி தலைவர்
ஊராட்சி மன்றத் தலைவர்
மாவட்ட ஆட்சியர்
குடும்பத் தலைவர்
35. ஆராச்சி என்ற பேச்சு வழக்கு செல்லிற்கு இணையான எழுத்து வழக்கு சொல்லைக் கண்டுபிடி
ஆராய்ச்சி
ஆராய்சி
ஆராய்சி
ஆராச்சி
36. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் பெயர்ச்சொல்லைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
நேற்று தமிழ்ச்செல்வி கோழிகளுக்கு இரை போட்டாள்.
நேற்று
இரை
போட்டாள்.
தமிழ்ச்செல்வி
37. ஒத்துக்கொள்கிறோம் -இச்சொல்லின் பொருள் ------
நடந்து கொள்கிறோம்
விலகிக் கொள்கிறோம்
ஏற்றுக் கொள்கிறோம்
மாற்றிக் கொள்கிறோம்
38. public - இச்சொல்லிற்கான தமிழாக்கத்தைக் கண்டறிக
மக்கள்
பொதுமக்கள்
முனைவர்
தலைவர்
39. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன?
40. ஆறுகள் சென்று சேரும் இடம்--------
குளம்
கிணறு
குட்டை
கடல்
