Worksheetsதமிழ் மொழி இரட்டைக்கிளவி ஆண்டு 6
Total questions: 21
Worksheet time: 10mins
அத்தொழிற்சாலையின் முதலாளி மிகவும் நல்லவர்.இருப்பினும்,சில வேளைகளில் கோபப்பட்டு வேலையாட்களிடம் _____________என எரிந்து விழுவர்.
கல கல
கடு கடு
மள மள
சிடு சிடு
காய்ந்து கொட்டிய இலைகளினூடே சாரை பாம்பொன்று _____________வென ஊர்ந்து சென்றது.
கிடு கிடு
பள பள
மட மட
சர சர
சாரணர் இயக்க மாணவர்கள் _____________வென ஓடும் அருவியில் _____________வென சிரித்து மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கல கல/சல சல
சர சர/கல கல
சல சல/கிலு கிலு
சல சல/கல கல
எப்பொழுதும் பணியாளர்களைத் திட்டிக்கொண்டே இருக்கும் திரு.கதிர்,இன்று ஒரு அறைந்து விட்டார்.
பளீர் பளீர்
பளார் பளார்
மட மட
சிடு சிடு
அர்ச்சண நிலைபேழையிலிருந்து _______________எனச் சரிந்து விழுந்த புத்தங்களை ___________________என அடுக்கி வைத்தாள்.
மள மள/மட மட
தட தட/மள மள
தட தட/மட மட
மட மட/மள மள
பணப் பட்டுவாடா இயந்திரத்தைத் திருட முயற்சித்த வேலையில் தகவல் கிடைக்கப்பெற்று சம்பவ இடத்திற்கு __________________என விரைந்த காவல் துறையினர் திருடர்களை வளைத்துப் பிடித்துத்_______________வென இழுத்துச் சென்றனர்.
மட மட/தட தட
மட மட/தர தர
தட தட/மள மள
மள மள/தர தர
சாரணர் முகாமில் கனிமொழி கூடரத்திலிருந்தே வானில் ______________த்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை இரசித்தாள்.
பள பள
மினு மினு
தக தக
பளார் பளார்
காலையிலேயே தன் முதலாளியின் முகம் _________________என இருப்பதைக் கண்ட தோட்டக்காரன் அமைதியாய் தன் வேலையைக் கவனித்தான்.
தக தக
கடு கடு
சிடு சிடு
கிலு கிலு
சாலி சாப்லின் செய்த நகைச்சுவையைப் பார்த்த சிறுவர்கள் _______________வென சிரித்தார்கள்.
மட மட
கல கல
குடு குடு
பள பள
தூக்க முடியாத அந்தச் சீனி மூட்டைகளை அம்முதியவர் ______________வென இழுத்து
வந்தார்.
தர தர
கிடு கிடு
மட மட
மள மள
வீட்டுக் கதவை யாரோ _______________வெனத் தட்டும் ஓசையைக் கேட்டு நர்மதா பயந்து
போனாள்.
தட தட
கல கல
கடு கடு
நற நற
நிலநடுக்கத்தால்
வீடுகள் ________________என சரிந்து
விழுந்தன.
சிடு சிடு
கிடு கிடு
மட மட
சல சல
பலமுறை கூறியும் காது கேளாதவள் போல் நின்று கொண்டிருந்த காந்தியை ______________என அரைந்தார் அம்மா.
பள பள
பளீர் பளீர்
பளார் பளார்
கல கல
அம்மாவின் குரல் கேட்டதும்,தம்பி ____________என ஓடி வந்தான்.
மட மட
தட தட
கிடு கிடு
குடு குடு
கடையில் ________________என
மின்னிக்கொண்டிருந்த தங்கச் சங்கலியைத் திருடிய முத்த பயத்தால் _______________என விழித்தான்.
பள பள,திரு திரு
திரு திரு,மினு மினு
மினு மினு,திரு திரு
பள பள,கிடு கிடு
பாசமாக வளர்த்த தன் குதிரையைச் சாட்டையால் __________என அடித்த வேலைக்காரனை, முதலாளி கன்னத்தில் அறைந்தார்.
சிடு சிடு
கடு கடு
பளார் பளார்
பளீர் பளீர்
வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த சிறு சிறு மணிகள் காற்றில் அசைந்தபடி _______________என ஒலித்தன.
சல சல
கிலு கிலு
மினு மினு
கல கல
வீட்டில் குழந்தைகள் அப்பாவின் முகம் _______________என இருப்பதைக் கண்டு அமைதியாக தமிழ்மொழி வீட்டுப்பாடத்தை அமைதியாக செய்தனர்.
பள பள
கடு கடு
சிடு சிடு
தக தக
கார்த்திகேயன் மீது கோபம் கொண்ட குணசீலன் தன் பற்களை ________________வெனக் கடித்தான்.
நற நற
கடு கடு
சிடு சிடு
கல கல
சங்கீதா காலைக் கதிரவனின் ஒளிபட்டு கடல் நீரின் மேற்பரப்பு __________காட்சியளிப்பதை இமைக்கொட்டாமல் இரசித்தாள்.
கிலு கிலு
பள பள
தக தக
கல கல
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நிர்மலா தன் வீட்டு வேலைகளை மடமடவென முடித்துக் கொண்டு கலை நிகழ்ச்சிக்குப் புறப்பட்டாள்.
காவல் அதிகாரியிடம் கையும் கலவுமாய் பிடிபட்ட திருடன் திருதிரு என விழித்தான்.
இரவு வேளையில் வானத்தில் விண்மீன்கள் பளபளத்துக் கொண்டிருந்தன.
தொலைக்காட்சியில் நாடகத்தைப் பார்த்த சரண்யா சலசல என சிரித்தாள்.
