wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 2 - இணைமொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட சூழலில் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் விடுபட்டுள்ள இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

நாணிக் கோணி

b)

வாடி வதங்கி

c)

உள்ளும் புறமும்

d)

சட்ட திட்டம்

2.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியான இடங்களுக்குப் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


வீட்டின் _________________ எப்பொழுதும் தூய்மையாக இருந்தால் நம்மை ___________________ அண்டாது.

a)

நோய் நொடி / உள்ளும் புறமும்

b)

சட்ட திட்டம் / உயர்வு தாழ்வு

c)

உள்ளும் புறமும் / நோய் நொடி

d)

சட்ட திட்டம் / வாடி வதங்கி

3.

இணைமொழியும் அதன் பொருளும் தவறாக இருக்கும் இணையைத் தெரிவு செய்க.

a)

ஆடிப்பாடி - களிப்புடன்

b)

வாடி வதங்கி - உலர்ந்து

c)

நாணிக் கோணி - மிகவும் வெட்கப்பட்டு

d)

சட்ட திட்டம் - நலக்கேடு

4.

விடுபட்ட இடத்தில் ஏற்புடைய இணைமொழியைத் தெரிவு செய்க.


குழுவில் உள்ளவர் எல்லாரும் ________________ மகிழ்ந்திருக்க மதுமிதா மட்டும் ________________ வெட்கப்பட்டு ஒதுங்கி நின்றாள்.

a)

வாடி வதங்கி / உள்ளும் புறமும்

b)

ஆடிப்பாடி / நாணிக் கோணி

c)

நாணிக் கோணி / வாடி வதங்கி

d)

உள்ளும் புறமும் / ஆடிப்பாடி

5.

பல நாள்களாக மழை பெய்யாததால் செடி கொடிகள் _______________ காணப்பட்டன.

a)

வாடி வதங்கி

b)

ஆடிப்பாடி

c)

உள்ளும் புறமும்

d)

நாணிக் கோணி

6.

பாட்டி நட்ட தக்காளிச் செடிகள் ______________ இருப்பதைப் பார்த்த குமுதா காலையும் மாலையும் நீர் பாய்ச்சினாள்.

a)

ஆடிப்பாடி

b)

நாணிக் கோணி

c)

வாடி வதங்கி

d)

உள்ளும் புறமும்

7.

தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிப் பெற்றதை அறிந்த தொண்டர்கள் ________________ தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

a)

வாடி வதங்கி

b)

நாணிக் கோணி

c)

ஆடிப்பாடி

d)

உள்ளும் புறமும்

8.

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் முன் என் அக்காள் _________________ நின்றார்.

a)

சட்ட திட்டம்

b)

நாணிக் கோணி

c)

உள்ளும் புறமும்

d)

ஆடிப்பாடி

9.

குழந்தைகள் எப்பொழுதும் எவ்விதக் கவலையும் இல்லாமல் _____________ மகிழ்ந்து இருப்பர்.

a)

வாடி வதங்கி

b)

நாணிக் கோணி

c)

உள்ளும் புறமும்

d)

ஆடிப்பாடி

10.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

வாடி வதங்கி

b)

நாணிக் கோணி

c)

சட்ட திட்டம்

d)

உள்ளும் புறமும்

11.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கேற்ற இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.

a)

களிப்புடன்

b)

விதிமுறைகள்

c)

வெட்கப்பட்டு

d)

எண்ணத்திலும் செயலிலும்

12.

கீழ்க்காணும் பத்திரிகை செய்திக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


கோலாலம்பூர், மார்ச் 26:- நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளை மீறியதற்காக 53 தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

a)

வாடி வதங்கி

b)

சட்ட திட்டம்

c)

உள்ளூம் புறமும்

d)

நாணிக் கோணி

13.

ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இளமாறன், நலமடைந்த பின் தம் தோட்டத்திற்குச் சென்று ___________ இருந்த பயிர்களைக் கண்டு கண் கலங்கினார்.

a)

நாணிக் கோணி

b)

ஆடிப்பாடி

c)

வாடி வதங்கி

d)

உள்ளும் புறமும்

14.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இணைமொழி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பல நாள்கள் உணவும் நீருமின்றி சோர்ந்து இருக்கும் அகதிகளுக்குத் தொண்டீழியர்கள் வாடி வதங்கி உணவும் நீரும் வழங்கினர்.

b)

வெப்ப வானிலை காரணமாக வறண்ட சூழ்நிலை நிலவியதால் நீரில்லாமல் பயிர்கள் வாடி வதங்கி காட்சியளித்தன.

c)

தேர்வுக்காக வாடி வதங்கி ஓய்வின்றிப் படித்த ம் மதுமலர் தேர்வு எழுதும்போது சோர்ந்து உறங்கிவிட்டாள்.

d)

முதன்முறையாக மேடையில் பாடல் பாட வந்த தேன்மலர் வெட்கத்தால் வாடி வதங்கி நின்றாள்.

15.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலிலிருந்த காலத்தில் அதன் _____________ மதிக்காத பொது மக்களைப் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

a)

வாடி வதங்கி

b)

சட்ட திட்டம்

c)

உள்ளும் புறமும்

d)

நாணிக் கோணி