NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி & வெற்றி வேற்கை
Total questions: 18
Worksheet time: 9mins
கல்யாணி வீட்டுப்பாடங்களை _____ எனச் செய்துவிட்டுப் பூப்பந்து விளையாடச் சென்றாள்.
மள மள
கிடு கிடு
சுறு சுறு
சிறுமியைக் கடத்த முயன்றவனைக் கையும் களவுமாய்ப் பிடித்த பொது மக்கள் அவனைச் சாலையில் _______ எனக் காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்..
மள மள
தர தர
தட தட
ஆசிரியரின் முகம் ______ என இருப்பதைப் பார்த்த மாணவர்கள் அமைதியாகக் கொடுத்த பாடங்களைச் செய்தனர்.
பள பள
தக தக
கடு கடு
குதிரை வீரன் விரைந்து ஓடச் செய்ய, தன் குதிரையைச் சாட்டையால் _______ என அடித்தான்.
பளார் பளார்
பளீர் பளீர்
வெளு வெளு
ஓடை நீர் _______ என ஓடியது.
சல சல
பள பள
மள மள
திரு விஜயன் கூறிய வசைமொழிகளைக் கேட்ட சேகரன் தன் பற்களை _______ வெனக் கடித்தான்.
கல கல
தற தற
நற நற
அதிவிரைவு இரயில் மின் தண்டவாளத்தில் ______ என விரைந்து ஓடி மறைந்தது.
குடு குடு
தட தட
மள மள
எங்கள் குடும்பமும் ,பெரியப்பாவின் குடும்பமும் சிறப்பாக வாழ, பணக்காரரான என் சிற்றப்பாகவே காரணம்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
நண்பர்கள்
உறவினர்கள்
சகோதரர்கள்
பணக்காரர்கள்
அறிவியல் துறையில் சாதனைகள் பல புரிந்த திரு. குபேரன் அவர்களின் அறிவுத்திறனைக் கண்டு பல நாடுகள் அவரைத் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தன.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
எவ்வளவு மிகப் பெரிய பணக்காரராக இருந்தாலும் திரு. டரேஷ் தம் வீட்டிற்கு வரும் உறவினர்களை முகமலர வரவேற்பார்.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விருப்புவர்; அறிவாளியை விரும்பாதவர் எவருமிலர்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
பவித்ரா _______ வென எரிந்த நெருப்பிற்கு அருகில் சென்றாள்.
"குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்" எனும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி எது?
நசநச
கடகட
கிடுகிடு
வெடவெட
படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
பளபள
சரசர
கடுகடு
படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
பளபள
சரசர
கடுகடு
நிலச் சரிவு ஏற்பட்டதால், மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் ______வெனச் சரிந்து விழுந்தன
தட தட
மட மட
விறு விறு
