wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 1 - இணைமொழி

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

2.

கீழ்க்காணும் இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


அகமும் புறமும்

a)

மன உணர்வும் வஞ்சக எண்ணமும்

b)

பாகுபாடும் வெளித்தோற்றமும்

c)

பாகுபாடும் வஞ்சக எண்ணமும்

d)

மன உணர்வும் வெளித்தோற்றமும்

3.

நீர்த்தூய்மைக் கேட்டினால் ஏற்பட்ட குடிநீர் விநியோகத்தடையைச் சீர் செய்தபின் மக்களுக்கு நீர்விநியோகம் __________________ இன்றி கிடைக்கும் என்றார் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

தங்கு தடை

d)

கள்ளங் கபடு

4.

கொடுக்கப்பட்ட படத்திற்கும் அதன் விளக்கத்திற்கும் ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

தங்கு தடை

b)

அகமும் புறமும்

c)

கள்ளங் கபடு

d)

உயர்வு தாழ்வு

5.

கோடிட்ட இடத்தை நிரப்ப ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


தமிழ்மொழிக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த சொர்போர் நிகழ்ச்சி ______________ இன்றி சிறப்புற நடந்து முடிந்தது.

a)

தங்கு தடை

b)

உயர்வு தாழ்வு

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

6.

அமுதனின் பிறந்தநாளன்று தாத்தா பாட்டி அவனை _______________ இன்றி நீண்டகாலம் வாழுமாறு வாழ்த்தினர்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

7.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


சந்திரன் : அந்த ஏழை முதியவரைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் அருவறுப்பாய் உள்ளது கோகுலா.


கோகுலன் : நீ சொல்வது தவறு சந்திரா. நாம் ஒருவரிடம் பழகும்போது எவ்விதப் பாகுபாடும் பார்க்கக் கூடாது.

a)

உயர்வு தாழ்வு

b)

அகமும் புறமும்

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

8.

நாட்டின் 2020 தூரநோக்கு கொள்கை, இடையில் ஏற்பட்ட ஒரு சில ____________ முழுமையடையாமல் போய்விடுமோவென அஞ்சப்படுகிறது.

a)

நோய் நொடிகளால்

b)

உயர்வு தாழ்வுகளால்

c)

தங்கு தடைகளால்

d)

கள்ளங் கபடுகளால்

9.

உணவு, உடற்பயிற்சி மற்றும் அளவான உறக்கம் நாம் ______________ இன்றி வாழ வழி வகுக்கும்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

10.

குழந்தைகள் எப்பொழுதும் எவ்விதக் கவலையும் இல்லாமல் __________ மலர சிரித்து மகிழ்ந்து இருப்பர்.

a)

உயர்வு தாழ்வு

b)

அகமும் புறமும்

c)

கள்ளங் கபடு

d)

தங்கு தடை

11.

தன் மகளின் திருமணம் எந்தவொரு ____________________ இன்றி நடந்து முடிந்ததை எண்ணி அப்பெரியவர் மனமகிழ்ச்சி அடைந்தார்.

a)

உயர்வு தாழ்வு

b)

நோய் நொடி

c)

தங்கு தடை

d)

அகமும் புறமும்

12.

நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால்தான் நம்மால் ____________ இன்றி வாழ முடிகிறது.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

13.

கருமையாக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


அண்டை அயலாரிடம் புரிந்துணர்வுடன் வாழ நாம் அவர்களுடன் எவ்வித வேறுபாடின்றி சிரித்த முகத்துடன் பழக வேண்டும்.

a)

உயர்வு தாழ்வு

b)

அகமும் புறமும்

c)

கள்ளங் கபடு

d)

நோய் நொடி

14.

_________________ நிறைந்த வஞ்சக எண்ணத்தினர் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

தங்கு தடை

d)

கள்ளங் கபடு

15.

அமுதனின் பிறந்தநாள் விழா எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற அவன் தாத்தா பாட்டி எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து முடித்திருந்தனர்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

நோய் நொடி

d)

கள்ளங் கபடு

16.

கொடுக்கப்பட்டுளனவற்றுள் இணைமொழி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தெய்வத்திற்கு ஈடான கள்ளங் கபடு அற்ற பிள்ளைகள் தீயவழியில் செல்லாதிருக்க பெற்றோர் அன்பைப் பொழிய வேண்டும்.

b)

மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள கள்ளங் கபடு நிறைந்த அப்பாதை வழிப் போக்கர்களுக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தியது.

c)

இளமதி கள்ளங் கபடு இன்றி அனைவரிடமும் பழகுவதால் ஊரார் அவளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

d)

கள்ளங் கபடு நிறைந்த பாலன், தன் பக்கத்துக் கடைக்காரரின் முன்னேற்றத்தைத் தடுக்கப் பல சதி வேலைகளைச் செய்தான்.

17.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள இடங்களுக்கு மிகப் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


குழந்தைகள் மந்தில் எவ்வித ______i______ இல்லாததால் அவர்கள் தங்கள் நண்பர்களிடத்தில் ______ii_______ பார்ப்பதில்லை.

a)

நோய் நொடி , கள்ளங் கபடு

b)

கள்ளங் கபடு , நோய் நொடி

c)

தங்கு தடை , அகமும் புறமும்

d)

கள்ளங் கபடு , உயர்வு தாழ்வு

18.

______________ தூய்மையானதாக இருக்கும் மனிதனின் உள்ளத்தில்தான் இறைவன் குடி கொண்டிருப்பதாகச் சான்றோர்கள் மொழிகின்றனர்.

a)

உயர்வு தாழ்வு

b)

அகமும் புறமும்

c)

தங்கு தடை

d)

நோய் நொடி

19.

நாம் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை _______________ மலர வரவேற்று உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

a)

உயர்வு தாழ்வு

b)

அகமும் புறமும்

c)

நோய் நொடி

d)

சீரும் சிறப்பும்

20.

______________ இல்லாமல் பழகும் பிள்ளைகளை நாம் தெய்வமாகப் போற்றுகின்றோம்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

தங்கு தடை

d)

கள்ளங் கபடு

21.

தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிப் பெற்றதை அறிந்த தொண்டர்கள் _________ மலர தங்கள் மகிழ்ச்சியை லட்டுக் கொடுத்து வெளிப்படுத்தினர்.

a)

கள்ளங் கபடு

b)

உயர்வு தாழ்வு

c)

நோய் நொடி

d)

அகமும் புறமும்

22.

திருமதி தமிழரசி _______________ இன்றி தூய்மையான எண்ணங்கள் கொண்டவராகவும் நல்ல செய்ல்களையே செய்து வருபவராகவும் இருப்பதால் மக்கள் அவரைப் போற்றுகின்றனர்.

a)

நோய் நொடி

b)

அகமும் புறமும்

c)

தங்கு தடை

d)

கள்ளங் கபடு

23.

நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரும் இனம், மொழி, மதம் போன்ற வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமை உணர்வோடு ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

a)

உயர்வு தாழ்வு

b)

கள்ளங் கபடு

c)

நோய் நொடி

d)

அகமும் புறமும்

24.

நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் 'கோவிட் 19' பெருந்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

தங்கு தடை

d)

கள்ளங் கபடு

25.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் மிகப் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாடு வளர்ப்புத் திட்டத்திற்குப் பணம் இருந்ததால் இராமசாமி கள்ளங் கபடுடன் பொருளகத்தில் கடன் பெறத் தீர்மானித்தார்.

b)

முதன் முறையாகக் கோலாலம்பூருக்குச் சென்ற இளவரசு, அங்குள்ள கட்டடங்களை நோய் நொடியுடன் பார்த்து வியந்து போனான்.

c)

மூவின மக்கள் உயர்வு தாழ்வின்றி ஒற்றுமையாக வாழப் பாடுபட்ட துன் டாக்டர் மகாதீர் முகமது, உலக நாடுகளிடையே புகழ்பெற்று விளங்குகிறார்.

d)

அவர், பல நாள்களாக நீர் ஊற்றாமல் இருக்கும் பயிர்களை அகமும் புறமும் கவனித்துக் கொள்ள புகழ்மொழியனைப் பணிக்கு நியமித்தார்.