NEW
Font size
Worksheetsவிஞ்ஞானம் - தரம் 07.
Total questions: 20
Worksheet time: 10mins
வெப்பநிலையின் சர்வதேச நியம அலகு எது?
கெல்வின்
செல்சியஸ்
பரனைற்று
யூல்
அருவிக்கோட்டு வடிவத்தைக் காட்டும் அங்கிக் கூட்டம் எது?
பறவை, நுண்ணங்கி
மீன், பறவை
நகருயிர், பூச்சிகள்
பாலூட்டிகள், பறவை
தரப்பட்ட இழையத்தின் பெயர் என்ன?
குருதி இழையம்
மேற்றோல் இழையம்
இதையத்தசை இழையம்
நரம்பிழையம்
மீளப்புதுப்பிக்கக் கூடிய சக்தி முதல்களைக் கொண்ட கூட்டம் யாது?
அணுக்கருச்சக்தி, இயற்கை வாயு, காற்றுச்சக்தி
உயிர்த்திணிவு, கற்கரி, இயற்கை வாயு
உயிர்த்திணிவு, புவிவெப்பச்சக்தி, காற்றுச்சக்தி
அணுக்கருச்சக்தி, கனிய எண்ணெய், கற்கரி
தரப்பட்டுள்ளவற்றில் கொள்ளளவியின் குறியீடாக அமைவது யாது?
நீரின் குளிர்த்தும் இயல்பு பயன்படுவது,
வாகனக்கதிர்த்திகளில்
திரவ யாக்கு
மீன்கள் உயிர்வாழ்வதற்கு
பனிக்கட்டி உருவாதல்
அப்பற்றைற்று அதிகளவு காணப்படும் பிரதேசம் எது?
யாழ்ப்பாணம்
புல்மோட்டை
தல்கொட
எப்பாவல
தரப்பட்ட பழம்/ வித்து பரம்பலடையும் முறை யாது?
நீரினால் பரம்பலடைக்கிறது.
காற்றினால் பரம்பலடைக்கிறது.
விலங்கால் பரம்பலடைக்கிறது.
அதிர்ந்து வெடிக்கும் பொறிமுறையால் பரம்பலடைக்கிறது.
தரப்பட்டுள்ள இசைக்கருவிகளில் ஒலி உற்பத்தியாகும் முறைகளின் சரியான ஒழுங்கு யாது?
A - இழை அதிர்வதால்
B - வளி அதிர்வதால்
A, B இரண்டும் இழை அதிர்வதால்
A, B இரண்டும் வளி அதிர்வதால்
A - வளி அதிர்வதால்
B - மென்சவ்வு அதிர்வதால்
உயிர்த்திணிவுக்கு உதாரணமாக அமைவது யாது?
பெற்றோல்
உயிர்வாயு
விறகு
நீர்
ஈமோகுளோபின் நிறப்பொருள் உற்பத்திக்குத் தேவையான கனியுப்பு யாது?
இரும்பு
கல்சியம்
சோடியம்
அயடின்
டைனமோவில் நடைபெறும் சக்தி மாற்றம் யாது?
மின்சக்தி →இயக்கசக்தி
இயக்கசக்தி→மின்சக்தி
காந்தசக்தி →ஒளிச்சக்தி
இயக்கசக்தி→ஒளிச்சக்தி
வளிமண்டலத்தில் எப்படையில் ஓசோன் படை அமைந்துள்ளது?
மாறன் மண்டலம்
படை மண்டலம்
இடை மண்டலம்
வெப்ப மண்டலம்
தரப்பட்ட பொருளின் உருச்சிறுத்த தலைகீழான விம்பம் திரையில் A எனும் ஆடிக்கு பெறப்பட்டது. இங்கு ஆடியாக இருக்கக் கூடியது யாது?
தளவாடி
குழிவாடி
குழிவாடி, குவிவாடி
குவிவாடி
அகணியில் அடங்கியுள்ள மூலகங்களில் சரியானவை யாவை?
சிலிக்கன், மக்னீசியம்
இரும்பு, நிக்கல்
சிலிக்கன், அலுமினியம்
மக்னீசியம், அலுமினியம்
நீரில் நன்கு கரையக் கூடிய கூட்டம் யாது?
A, B
B, C
A, D
C,D
பின்வருவனவற்றுள் காரங்களை கொண்ட சரியான கூட்டம் யாது?
வினாகிரி, சாம்பல், சவர்க்காரம்
சுண்ணாம்பு, உப்புக் கரைசல், வினாகிரி
சுண்ணாம்பு, சவர்க்காரம், சோடியம் ஐதரொட்சைட்டு
வினாகிரி, எலுமிச்சைச்சாறு, சவர்க்காரம்
ஒரு வித்திலைத் தாவரத்தின் இயல்பாக அமைவது யாது?
ஆணிவேரைக் கொண்டது.
இலை வலையுரு நரம்பமைப்பைக் கொண்டது.
தண்டு கிளைகளைக் கொண்டது.
பூவிதழ்கள் மூன்று அல்லது மூன்றின் மடங்காகக் காணப்படும்.
கூட்டு நுணுக்குக்காட்டியில் பொருளுக்கு வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவது எது?
ஆடி
ஒடுக்கி
பொருளி
நுண்செப்பமாக்கி
காவலிடப்பட்ட செப்புக்கம்பிச் சுருளினுள் சாட்டக்காந்தம் அசைக்கப்பட்டது. தரப்பட்ட கூற்றுக்களில் பொய்யானது எது?
காந்தத்தை சுருளினுள் உள்நோக்கி அசைக்கும் போது கல்வனோமானியின் காட்டி திரும்பும்.
காந்தத்தை சுருளில் இருந்து வெளியே எடுக்கும்போது காட்டி முதல் திரும்பிய திசைக்கு எதிர்த்திசையில் திரும்பும்.
சுருளை காந்தத்தை நோக்கி அசைக்கும்போது காட்டி திரும்பும்.
காந்தத்தை சுருளினுள் வைத்து சேர்த்து அசைக்கும் போது காட்டி திரும்பும்.
