wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 3 (ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?)

Total questions: 10

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

இன்று படித்த பழமொழி என்ன?

a)

மூன்றில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

c)

நான்கில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

2.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

b)

எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.

3.

சரியாக நிறைவு செய்க. ____________ வளையாதது ஐம்பதில் வளையுமா?

a)

மூன்றில்

b)

நான்கில்

c)

ஐந்தில்

d)

ஆறில்

4.

சரியாக நிறைவு செய்க. ஐந்தில் வலையாதது _________________ வளையுமா?

a)

முப்பதில்

b)

நாற்பதில்

c)

ஐம்பதில்

d)

அறுவதில்

5.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - என்ற பழமொழிக்கு ஏற்ற சூழல் எது?

a)

கோமதி பல கலைகளில் சிறந்து விளங்குவதனால் பேரும் புகழுடன் வாழ்கின்றாள்.

b)

கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.

c)

கவிதா சிறுவயதில் பாடல் பாடுவதில் திறனை வளர்த்துக்கொண்டதால் இன்று சிறந்த பாடகியாகத் திகழ்கின்றாள்.

6.

பழமொழியின் பொருளைச் சரியாக நிறைவு செய்க. எதையும் ....................... எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; ................... அவ்வாறு செய்ய இயலாது.

a)

இளமையில், முதுமையில்

b)

இளமையில், இளமையில்

c)

முதுமையில், முதுமையில்

7.

ஏன் இளமையில் கற்றுக்கொண்டால் எளிமையாக இருக்கும்?

a)

கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ளலாம்

b)

கற்றுக்கொண்டதை மறந்திடலாம்

c)

கற்றுக்கொண்டதை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம்

8.

சிறுவயதிலேயே நாம் நம் தவற்றைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?

a)

நாம் புகழோடு வாழலாம்

b)

ஒன்றும் நடக்காது

c)

வருங்காலத்தில் மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்

9.

சரியாக நிறைவு செய்க. எதையும் இளமையில் .................... கற்றுக்கொள்ளலாம்.

a)

எளிமையாகவும் விரைவாகவும்

b)

கடினமாகவும் விரைவாகவும்

10.

மாலா சிறு வயதிலிருந்தே நன்றாக படிப்பாள். தேர்வில் சிறந்த மதிப்பெண்களை வாங்குவாள். இன்று பட்டதாரியாகவும் மருத்துவராகவும் வாழ்கின்றாள்.

சரியானப் பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்