wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி அறிவியல் 12-ஆம் வகுப்பு - ஒரு மதிப்பெண் தோ்வு - 2

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதி _______.

a)

துணை நிரல்கள்

b)

கோப்புகள்

c)

செயற்கூறு

d)

தொகுதிகள்

2.

2. செயற்கூறை வரையறுப்பதற்கான தொடரியல்_____என்ற சிறப்புச் சொல்லோடு அறிமுகப்படுத்தப்படுகிறது.

a)

let

b)

let rec

c)

def

d)

def rec

3.

3. _____ மதிப்புகளைப் பெயருடன் பிணைக்கின்றன.

a)

செயற்கூறுகள்

b)

வரையறை

c)

துணைநிரல்கள்

d)

அளபுருக்கள்

4.

4. அனைத்து செயற்கூறுகளும் _______ வரையறையாகும்.

a)

dynamic

b)

static

c)

function

d)

classes

5.

5. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

துணைநிரல்கள்

b)

செயற்கூறு

c)

அளபுருக்கள்

d)

மாறிகள்

6.

6. விவரங்களை மறைத்து அவசியமானவற்றை மட்டும் வழங்கும் செயல்முறையை ________ என்கிறோம்.

a)

அருவமாக்கம்

b)

இனக்குழுக்கள்

c)

செயற்கூறு

d)

துணைநிரல்கள்

7.

7. _______ப் பயன்படுத்தி ADT செயல்படுத்தபடலாம்.

a)

ஒற்றை இணைப்பு பட்டியல்

b)

இரட்டை இணைப்பு பட்டியல்

c)

அ அல்லது ஆ

d)

அ இல்லை ஆ இல்லை

8.

8. -------- மற்றும் --------- ADT, List பயன்படுத்தி செயல்படுத்தபடலாம்.

a)

ஆக்கி, செலக்டார்ஸ்

b)

ஆக்கி, அழிப்பி

c)

அடுக்கு, வரிசை

d)

இவற்றில் ஏதுமில்லை

9.

9. செயல்திட்டம் என்பது எதைக் குறிக்கிறது?

a)

அருவமாக்கம்

b)

நிரல்

c)

ஆக்கி

d)

செலக்டார்

10.

10. ______செயல்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது.

a)

ஆக்கி

b)

செலக்டார்ஸ்

c)

நிரல்

d)

அழிப்பி

11.

11. எவை நூலகக் கோப்புகள் நிரலில் செயல்பட தொடங்கியவுடன் இறக்கப்படும்?

a)

உள்ளமை வரையெல்லை

b)

அடைக்கப்பட்ட வரையெல்லை

c)

உள்ளிணைந்த வரையெல்லை

d)

முழுதளாவிய வரையெல்லை

12.

12. மற்றொரு செயற்கூறு வரையறையை தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் அறிவிக்கப்படும் மாறி______

a)

உள்ளமை வரையெல்லை

b)

உள்ளிணைந்த வரையெல்லை

c)

அடைக்கப்பட்ட (அ) இணைக்கப்பட்ட வரையெல்லை

d)

முழுதளாவிய வரையெல்லை

13.

13. எத்தனை வகையான வரையெல்லை வகைகள் உள்ளன?

a)

4

b)

2

c)

3

d)

5

14.

14. நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் ______ எனப்படும்.

a)

உள்ளமை வரையெல்லை

b)

உள்ளிணைந்த வரையெல்லை

c)

அடைக்கப்பட்ட (அ) இணைக்கப்பட்ட வரையெல்லை

d)

முழுதளாவிய வரையெல்லை

15.

15. நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகள்-------எனப்படும்.

a)

உள்ளமை வரையெல்லை

b)

உள்ளிணைந்த வரையெல்லை

c)

அடைக்கப்பட்ட (அ) இணைக்கப்பட்ட வரையெல்லை

d)

முழுதளாவிய வரையெல்லை

16.

16. பின்வரும் எது நெறிமுறையின் பண்புக்கூறு அல்ல?

a)

உள்ளீடு

b)

நிரல்

c)

எல்லையுற்றது

d)

எளிமை

17.

17. கொடுக்கப்பட்ட ஒரு சிக்கலை தீர்ப்பதற்கான படிப்படியான செயல்முறைகள்_______

a)

நிரல்

b)

போலிக் குறிமுறை

c)

பாய்வுப்படம்

d)

நெறிமுறை

18.

18. ______ நெறிமுறையின் கோட்பாட்டு செயல்திறன் பகுப்பாய்வு ஆகும்.

a)

முன்னறிப்பு மதிப்பீடுகள் (Priori Estimates)

b)

பின்னிய சோதனை (Posteriori testing)

c)

இடக்காரணி (Space)

d)

நேரக்காரணி (Time)

19.

19. ______என்பது நெறிமுறையின் செயல்திறன் அளவிடுதல் ஆகும்.

a)

முன்னறிப்பு மதிப்பீடுகள் (Priori Estimates)

b)

பின்னிய சோதனை (Posteriori testing)

c)

நேரம் காரணி (Time)

d)

இட காரணி (Space)

20.

20. தகுதி வாய்ந்த உள்ளீட்டற்கு எதிர்பார்த்த வெளியீட்டை கொடுக்கும் நெறிமுறையே_______எனப்படும்.

a)

நிரல்

b)

நிரல் தீர்வு

c)

நெறிமுறைத் தீர்வு

d)

நிரல் நெறிமுறைத் தேர்வு

21.

21. பின்வரும் எந்த கூற்று அல்லது கூற்றுக்ள தவறானது?

1) பைத்தான் ஒரு பொது பயன்பாட்டு மொழியாகும். இதை அறிவியல் மற்றும் அறிவியல் அல்லாத நிரலாக்கத்திற்கு பயன்படுத்தலாம்.

2) பைத்தான் ஒரு குறிப்பிட்ட இயக்க முறைமையை சாராத மொழி.

3) பைத்தானில் எழுதப்பட்ட நிரல்களை படிப்பதும், புரிந்து கொள்வதும் கடினம்.

a)

கூற்று 1 மட்டும்

b)

கூற்று 1 மற்றும் கூற்று 2

c)

கூற்று 3 மட்டும்

d)

அனைத்து கூற்றுகளும்

22.

22. IDLE விரிவாக்கம்______.

a)

Integrated Developed Learned Environment

b)

Integrated Development Learning Environment

c)

Integrated Development Learned Environment

d)

intelligent Development Learning Environment

23.

23. பைத்தான் _____ கொண்டு நிரலின் தொகுப்புகளை குறிக்கிறது.

a)

இடம் மற்றும் நேரம்

b)

இடைவெளி மற்றும் தத்தல்கள்

c)

இடைவெளி மற்றும் நேரம்

d)

இடம் மற்றும் தத்தல்கள்

24.

24. பைத்தான் நிரலாக்கத்தில் எந்த நிரலாக்கம் கால்குலேட்டர் போல செயல்படும்?

a)

ஸ்கிரிப்ட் முறைமை

b)

ஊடாடும் முறைமை

c)

நிரல் முறைமை

d)

நெறிமுறை முறைமை

25.

25. கீழ்கண்டவற்றுள் சரியான குறிப்பெயரின் எடுத்துக்காட்டு எது?

a)

12Name

b)

total-mark

c)

name

d)

regno