NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடைத்தேர்வு பகுதி1
Total questions: 40
Worksheet time: 10hrs 0mins
Name
Class
Date
1.
தமிழில் உள்ள உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?
a)
9
b)
8
c)
7
d)
5
2.
வல்லின மெய் எழுத்துகள் எவை?
a)
ங் ஞ் ண் ந் ம் ன்
b)
க் ச் ட் வ் ழ் ள்
c)
க் ச் ட் த் ப் ற்
d)
ய் ர் ல் வ் ழ் ள
3.
இடையின உயிர்மெய் எழுத்து எது?
a)
ர
b)
பி
c)
கா
d)
ன
4.
வினா எழுத்து அல்லாதது எது?
a)
எ
b)
ம
c)
ஆ
d)
யா
5.
அஃறிணைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு எது?
a)
மக்கள்
b)
புலி
c)
முருகன்
d)
குழந்தை
6.
பின்வருவனவற்றுள் காரணப் பெயர் எது?
a)
நிலம்
b)
வீடு
c)
வானம்
d)
அணி
7.
பின்வருனவற்றில் பெயர்ச் சொல் எது?
a)
ஆதலால்
b)
சால
c)
நாடு
d)
மிகவும்
8.
பின்வருவனவற்றுள் வினைச் சொல் எது?
a)
வன்னி
b)
சால
c)
எழும்பு
d)
மிகவும்
9.
முதல் எழுத்துகளில் அடங்குபவவை எவை?
a)
உயிர் எழுத்துகள் மட்டும்
b)
மெய் எழுத்துகள் மட்டும்
c)
உயிர் மற்றும் மெய் எழுத்துகள்
d)
உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துகள்
10.
சுட்டெழுத்து அல்லாதது எது?
a)
அ
b)
இ
c)
எ
d)
உ
11.
உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
a)
5
b)
6
c)
7
d)
8
12.
பின்வருவனவற்றுள் பெயராகவும் வினையாகவும் வரும் சொல் எது?
a)
நிலம்
b)
நாடு
c)
வீடு
d)
கடல்
13.
மெல்லின மெய் வரும் சொல் எது?
a)
அன்பு
b)
கழுத்து
c)
அக்கா
d)
ஈட்டி
14.
இடையின மெய் வரும் சொல் எது?
a)
தமக்கை
b)
வட்டம்
c)
சுடர்
d)
தொடங்கு
15.
உயர்திணைப் பன்மைச் சொல் எது?
a)
புலிகள்
b)
குழந்தை
c)
முருகன்
d)
அவர்கள்
16.
தமிழர் மிகக் கூடுதலாக வாழும் நாடு எது?
a)
இலங்கை
b)
இந்தியா
c)
மலேசியா
d)
கனடா
17.
தமிழ் ஆட்சி மொழியாக இல்லாத நாடு எது?
a)
இலங்கை
b)
சுவீடன்
c)
இந்தியா
d)
சிங்கப்பூர்
18.
முருகக் கடவுளோடு தொடர்புடைய ஆட்டம் எது?
a)
கும்மி ஆட்டம்
b)
புலி ஆட்டம்
c)
பாம்பு ஆட்டம்
d)
காவடி ஆட்டம்
19.
கரகாட்டம் எக்கடவுள் வழிபாட்டோடு தொடங்கியது?
a)
அம்மன்
b)
திருமால்
c)
முருகன்
d)
சிவன்
20.
தனது அரங்கேற்றத்தின் பொழுது 'குடக்கூத்து' ஆடியவர் யார்?
a)
உமையாள்
b)
பார்வதி
c)
மாதவி
d)
ஆண்டாள்
21.
பின்வருவனவற்றுள் நாட்டுப்புறக்கலை எது?
a)
காவடி ஆட்டம்
b)
கரகாட்டம்
c)
பொய்க்கால் குதிரை ஆட்டம்
d)
மேற்கூறப்பட்ட அனைத்தும்
22.
திருகோணமலை எங்கே அமைந்துள்ளது?
a)
இலங்கைத் தீவின் மேற்குக் கரையில்
b)
இலங்கைத் தீவின் கிழக்குக் கரையில்
c)
இலங்கைத் தீவின் தெற்குக் கரையில்
d)
இலங்கைத் தீவின் வடக்குக் கரையில்
23.
திருக்கோணேசுவரத்தைக் கட்டியவர் யார்?
a)
எல்லாளன்
b)
சங்கிலியன்
c)
குளக்கோட்டன்
d)
பண்டாரவன்னியன்
24.
வெந்நீர் ஊற்று எங்கே அமைந்துள்ளது?
a)
வெருகல்
b)
கனகராயன்குளம்
c)
கன்னியாய்
d)
பன்குளம்
25.
தீவு என்பதன் ஆங்கில வடிவம் யாது?
a)
Village
b)
Ocean
c)
Island
d)
Peninsula
26.
'Harbour' என்பதன் தமிழ் வடிவம் யாது?
a)
மாவட்டம்
b)
எல்லை
c)
துறைமுகம்
d)
கூட்டு
27.
சிவகங்கை என்னும் நகர் எங்கே அமைந்துள்ளது?
a)
தமிழ் ஈழம்
b)
தமிழ் நாடு
28.
மருதுபாண்டியர் யாருக்கு எதிராகப் போராடினார்கள்?
a)
போர்த்துக்கேயர்
b)
ஆங்கிலேயர்
29.
பாடம் என்பதன் பன்மைச் சொல் எது?
a)
பாடக்கள்
b)
பாடங்கள்
c)
பாடம்கள்
d)
பாடன்கள்
30.
அறநூல்களில் முதன்மையானது எது?
a)
நாலடியார்
b)
ஆத்திசூடி
c)
திருக்குறள்
d)
சிலப்பதிகாரம்
31.
பேரிலயக்கியங்களில் ஒன்று:
a)
திருக்குறள்
b)
புறநானூறு
c)
நாலடியார்
d)
மணிமேகலை
32.
சோமசுந்தரப் புலவர் எந்த ஊரில் பிறந்தார்?
a)
பருத்தித்துறை
b)
நவாலி
c)
மன்னார்
d)
மட்டக்களப்பு
33.
மணிமேகலையை எழுதியவர் யார்?
a)
ஒளவையார்
b)
இளங்கோ
c)
சாத்தனார்
d)
வள்ளுவர்
34.
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
a)
133
b)
1000
c)
1001
d)
1330
35.
ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தவர் யார்?
a)
எல்லாளன்
b)
அதியமான்
c)
பாரி
d)
பேகன்
36.
“தோழன்“ என்பதற்குரிய ஒத்த சொல் எது?
a)
அண்ணன்
b)
நண்பன்
c)
தந்தை
d)
தமையன்
37.
“செயற்கை“ என்பதன் எதிர்ச் சொல் எது?
a)
பிறப்பு
b)
ஆக்கல்
c)
இயற்கை
d)
இறப்பு
38.
“பற்கள்“ என்பதன் ஒருமை வடிவம் எது?
a)
பற்
b)
பல்
c)
பர்
d)
பல
39.
தமிழ் இலக்கியத்தில் புகழ் கொண்ட பெண் புலவர் யார்?`வள்ளுவர்
a)
கம்பர்
b)
ஔவையார்
c)
சுந்தரர்
d)
காரைக்கால் அம்மையார்
40.
அவன் என்பது:
a)
அகச்சுட்டு
b)
புறச்சுட்டு
Reset
