NEW
Font size
Worksheetsமரபுச் சொற்கள் 1
Total questions: 30
Worksheet time: 15mins
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ அப்பொருளை அச் சொல்லால் அவ்வாறே நாமும் வழங்குவது----
மரபு
கடமை
விலங்குகள் எழுப்பும் சத்தம் அல்லது ஓசை---
வினை மரபு
ஒலி மரபு
'குரங்கு அலப்பும்' என்பது-----
வினை மரபு
ஒலி மரபு
ஒலி மரபிற்கு ஓர் எடுத்துக்காட்டு---
நரி ஊளையிடும்
நரிக்குட்டி
பாம்பு---
சீறும்
கத்தும்
குயில்----
அகவும்
கூவும்
வண்டு----
கத்தும்
முரலும்
ஆந்தை----
குனுகும்
அலறும்
மயில்---
கூவும்
அகவும்
எலி---
கத்தும்
கீச்சிடும்
கோழி----
கூவும்
கொக்கரிக்கும்
யானை----
பிளிறும்
கத்தும்
'சிங்கம் கர்ச்சிக்கும்' என்பது----
ஒலி மரபு
வினை மரபு
"அம்பு எய்தான்" என்பது ----
ஒலி மரபு
வினை மரபு
'புலி உறுமும் 'என்பது----
ஒலி மரபு
இருப்பிடமரபு
'புலிப்பறழ் 'என்பது---
வினை மரபு
இளமைப் பெயர் மரபு
'முருங்கைக்கீரை' என்பது----
இளமைப் பெயர் மரபு
உறுப்புப்பெயர் மரபு
'முறுக்குத் தின்றான்' என்பது---
இருப்பிடமரபு
வினை மரபு
மாத்திரை----
விழுங்கினான்
சாப்பிட்டான்
சுவர்----
எழுப்பினான்
கட்டினான்
பாய் பின்னினான் என்பது---
ஒலி மரபு
வினை மரபு
கூடை----
முடைந்தான்
பின்னினாள்
ஓவியம்----
புனைந்தான்
எழுதினான்
கீழ்க்கண்டவற்றுள் வினை மரபு எது?
கூரை வேய்ந்தார்
புலி உறுமும்
'பனையோலை 'என்பது---
உறுப்புப் பெயர் மரபு
இளமைப் பெயர் மரபு
கீழ்க்கண்டவற்றுள் உறுப்பு பெயர் மரபுச் சொல் எது?
மாங்கன்று
மாவிலை
'மரக்கன்று' என்பது---
இளமைப் பெயர் மரபு
உறுப்பு பெயர் மரபு
சிங்கத்தின் இளமைப் பெயர் மரபு----
குருளை
பறழ்
யானையின் இருப்பிடமரபு---
கூட்டம்
கூடம்
மரபின் வேறு பெயர்---
வழக்கு
மயங்கொலி
