wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Online Batch Model Test 5 - 7th Tamil 4, 5, 6 Units

Total questions: 65

Worksheet time: 16hrs 15mins

Name
Class
Date
1.

சென்னி என்பதன் பொருள்

a)

கடல்

b)

உச்சி

c)

பாடல்

d)

விலங்கு

2.

பட்டினப்பாலை என்னும் நூலை இயற்றியவர்

a)

கண்ணகனார்

b)

இளந்திரையன்

c)

உருத்திரங்கண்ணனார்

d)

இளநாகனார்

3.

வங்கூழ் என்பதன் பொருள்

a)

நாவாய்

b)

கடல்

c)

காற்று

d)

மணல்

4.

நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்

a)

குறுந்தொகை

b)

கலித்தொகை

c)

அகநானூறு

d)

புறநானூறு

5.

'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்' என பெரிய கப்பலை குறிப்பிடும் நூல்

a)

பட்டினபாலை

b)

அகநானூறு

c)

புறநானூறு

d)

குறுந்தொகை

6.

பலவகையான கப்பல்களின் பெயர்களைக் குறிப்பிடும் நூல்

a)

அகநானூறு

b)

திருக்குறள்

c)

நாலடியார்

d)

சேந்தன் திவாகரம்

7.

எட்டுத்தொகை நூல்களுள் தவறானது

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பட்டினப்பாலை

d)

பரிபாடல்

8.

மருதன் இளநாகனார் கலித்தொகையின் மருதத் திணையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை

a)

42

b)

32

c)

45

d)

35

9.

கப்பல் கட்டும் கலைஞர்களை கம்மியர் என அழைக்கப்படுவதற்கான சான்று இடம் பெற்றுள்ள நூல்

a)

ராமாயணம்

b)

மணிமேகலை

c)

சிலப்பதிகாரம்

d)

அகநானூறு

10.

தவறானதை தேர்ந்தெடு

a)

கலம்

b)

வங்கம்

c)

புணை

d)

நாவாய்

11.

வேயா மாடம் எனப்படுவது

a)

வைக்கோலால் வேயப்படுவது

b)

சாந்தின் பூசப்படுவது

c)

ஓலையால் வேயப்படுவது

d)

துணியால் மூடப்படுவது

12.

தூண் என்னும் பொருள் தரும் சொல்

a)

ஞெகிழி

b)

சென்னி

c)

ஏணி

d)

மதலை

13.

தவறானவை தேர்ந்தெடு

a)

உரு - கலங்கரை

b)

எல் - பகல்

c)

வங்கம் - கப்பல்

d)

வங்கூழ் - காற்று

14.

கடல் பயணத்தை முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடும் நூல்

a)

குறுந்தொகை

b)

அகத்தியம்

c)

தொல்காப்பியம்

d)

நற்றினை

15.

'அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்' என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

a)

திருக்குறள்

b)

அகநானூறு

c)

பதிற்றுப்பத்து

d)

நாலடியார்

16.

'மாட ஒள்ளேரி' என்பது

a)

கலங்கரை விளக்கம்

b)

புலால் நாற்றம்

c)

பெரிய கடல்

d)

நீர்பரப்பு

17.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்

a)

உருத்திரங்கண்ணனார்

b)

இளந்திரையன்

c)

இளநாகனார்

d)

மருதனார்

18.

கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பல் கருவி

a)

எரா

b)

சுக்கன்

c)

நங்கூரம்

d)

சமுக்கு

19.

இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

சமுக்கு

b)

கண்ணடை

c)

தச்சுமுழம்

d)

தொகுதி

20.

உரவு நீர் என்பதன் பொருள்

a)

சிறு நீர் பரப்பு

b)

பெரும் நீர்ப்பரப்பு

c)

மரக்கலன்

d)

பெரும் நிலப்பரப்பு

21.

பொருத்தமானதை தேர்ந்தெடு

1. கண்ணடை - உருவங்கள்

2. தச்சு முழம் - நீட்ட அளவை

3. தொகுதி - இரும்பு ஆணிகள்

a)

1,2 மட்டும் சரி

b)

1, 3 மட்டும் சரி

c)

1,2,3 சரி

d)

2,3 மட்டும் சரி

22.

சிறிய நீர் நிலைகளை கடக்க பயன்படுத்துவதில் தவறானது

a)

ஓடம்

b)

தோணி

c)

படகு

d)

கலம்

23.

இலக்கண வகைச் சொற்களின் வகைகளில் தவறானது

a)

பெயர்ச்சொல்

b)

இடைச்சொல்

c)

இயற்சொல்

d)

வினைச்சொல்

24.

கடல் எனும் பொருள் தரும் சொல்

a)

மதலை

b)

சென்னி

c)

உரவுநீர்

d)

அழுவம்

25.

சரியானதை தேர்ந்தெடு

1. எரா என்பது திசை காட்டும் கருவி

2. பருமல் என்பது குறுக்கு மரம்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1,2 தவறு

26.

பெற்றம் என்பது எவ்வகை இலக்கியச் சொல்

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

27.

பல பொருள் தரும் ஒரு சொல் என்பது

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

28.

சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்

a)

அழகின் சிரிப்பு

b)

கண்ணகி புரட்சிக்காப்பியம்

c)

பிசிராந்தையார்

d)

பாண்டியன் பரிசு

29.

'விச்சை மாற்று அல்ல பிற' என்பதில் விச்சை என்பதன் பொருள்

a)

பெருமை

b)

செல்வம்

c)

கல்வி

d)

அரசர்

30.

'கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

பட்டினப்பாலை

d)

மணிமேகலை

31.

'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

மணிமேகலை

d)

பதிற்றுப்பத்து

32.

பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல்

a)

சாரியை

b)

சந்தி

c)

விகாரம்

d)

இடைநிலை

33.

ஓரெழுத்து சொல்லில் நோ என்பதன் பொருள்

a)

அன்பு

b)

வறுமை

c)

நோய்

d)

இழிவு

34.

நன்னூல் என்னும் நூலின் ஆசிரியர்

a)

பவணந்தி முனிவர்

b)

வீரமாமுனிவர்

c)

குமரகுருபரர்

d)

அகத்தியர்

35.

'தண்ணீர் யுத்தம்' என்னும் நூலின் ஆசிரியர்

a)

சுப்ரபாரதிமணியன்

b)

சுப்பிரமணிய சிவா

c)

சுப்ரமணிய பாரதியார்

d)

சுப்புரத்தினதாசன்

36.

"இளமையில் கல்", என்பது யாருடைய கூற்று

a)

ஔவையார்

b)

கம்பர்

c)

கபிலர்

d)

புகழேந்திப் புலவர்

37.

வெறுபு என்னும் சொல்லின் பொருள்

a)

மலை

b)

வயல்

c)

சமம்

d)

மேகம்

38.

'வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நாலடியார்

b)

இனியவை நாற்பது

c)

தனிப்பாடல் திரட்டு

d)

பழமொழி நானூறு

39.

'கனவு' என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர்

a)

சுப்ரபாரதிமணியன்

b)

சுப்பிரமணிய சிவா

c)

சுப்ரமணிய பாரதியார்

d)

சுப்புரத்தினதாசன்

40.

பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்

a)

4

b)

5

c)

6

d)

7

41.

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை

a)

32

b)

42

c)

52

d)

62

42.

'வள்ளுவர் காட்டிய வழி' என்னும் நூலின் ஆசிரியர்

a)

வீ முனுசாமி

b)

ஞானக்கூத்தன்

c)

ஈரோடு தமிழன்பன்

d)

ஜெயகாந்தன்

43.

ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை நெடில் எழுத்துக்கள் அமைந்தவை

a)

2

b)

40

c)

42

d)

30

44.

சரியானதை தேர்ந்தெடுக்கவும்

1. தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றை காட்டாது

2. தொழிற்பெயர் படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

45.

சரியானதை தேர்ந்தெடு

1. தருமிக்கு பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய காட்சி இடம் பெற்றுள்ள நூல் திருவிளையாடல் புராணம்

2. தருமிக்கு பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய காட்சி இடம் பெற்றுள்ள நூல்பெரியபுராணம்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

46.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் பீடத்தின் உயரம்

a)

38 அடி

b)

70 அடி

c)

25 அடி

d)

95 அடி

47.

'வெள்ளை ரோஜா' என்னும் நூலின் ஆசிரியர்

a)

தேனரசன்

b)

முடியரசன்

c)

பாரதிதாசன்

d)

சுரதா

48.

'சரஸ்வதி மாலை' என்னும் நூலின் ஆசிரியர்

a)

கம்பர்

b)

கபிலர்

c)

காளமேகப்புலவர்

d)

குமரகுருபரர்

49.

தஞ்சை பெரிய கோயிலில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் யாருடைய ஓவியம் வாழ்க்கை வரலாறு சுவர் ஓவியமாக வரையப்பட்டுள்ளது

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

திருமூலர்

50.

கலம்காரி ஓவியங்கள் எவ்வகையில் வரையப்பட்டவை

a)

சுவற்றில் வரைய படுபவை

b)

ஓலைச்சுவடிகளில் வரையப்படுபவை

c)

செப்பேடுகளில் வரையப்படுபவை

d)

துணியில் வரையப்படுபவை

51.

தமிழில் முதன் முதலில் கருத்துப்பட ஓவியத்தை அறிமுகப்படுத்தியவர்

a)

திரு வி க

b)

பாரதியார்

c)

கண்ணதாசன்

d)

பாரதிதாசன்

52.

தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற நூலகம்

a)

உ வே சா நூலகம்

b)

கன்னிமாரா நூலகம்

c)

சரஸ்வதி மகால் நூலகம்

d)

கீழ்திசை நூலகம்

53.

தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

a)

1942

b)

1896

c)

1981

d)

1869

54.

உவேசா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1942

b)

1896

c)

1981

d)

1869

55.

பொருத்துக

1. ஓட்டம் - முதல்நிலை தொழில்பெயர் 1

2. பிடி - முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் 2

3. சூடு - விகுதி பெற்ற தொழில் பெயர் 3

a)

1 2 3

b)

3 2 1

c)

3 1 2

d)

2 1 3

56.

திருக்குறள் போன்று அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்ட நூல்

a)

இனியவை நாற்பது

b)

நாலடியார்

c)

ஏலாதி

d)

சிறுபஞ்சமூலம்

57.

பின்வருவனவற்றுள் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் எது

a)

நடு

b)

எழுதுதல்

c)

ஊறு

d)

விழு

58.

'திருவானைக்கா உலா' என்னும் நூலின் ஆசிரியர்

a)

காளமேகப் புலவர்

b)

குமரகுருபரர்

c)

தாயுமானவர்

d)

ராமலிங்க அடிகளார்

59.

சரியானதை தேர்ந்தெடு

1. 'புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்' என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் நெடுநல்வாடை

2. 'புனையா ஓவியம் புறம் போந்தன்ன' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மணிமேகலை

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1,2 தவறு

60.

கிளவி வல்லோன் எனக் குறிப்பிடப்படுபவர்கள்

a)

ஓவியர்கள்

b)

சிற்பிகள்

c)

பாடலாசிரியர்கள்

d)

பேச்சாளர்கள்

61.

கருத்துரு படத்தை பாரதியார் எந்த இதழில் அறிமுகப்படுத்தினார்

a)

சுதேசமித்திரன்

b)

சக்கரவர்த்தினி

c)

விஜயா

d)

இந்தியா

62.

பசார் பெயிண்டிங் எவ்வகை ஓவியங்களை குறிப்பிடுகிறது

a)

கண்ணாடி ஓவியங்கள்

b)

தந்த ஓவியங்கள்

c)

நாட்காட்டி ஓவியங்கள்

d)

செட்பேட்டு ஓவியங்கள்

63.

'வரதன்' என்னும் இயற்பெயர் கொண்ட புலவர்

a)

குமரகுருபரர்

b)

புகழேந்திபுலவர்

c)

காளமேகப்புலவர்

d)

ஒட்டக்கூத்தர்

64.

வட்டிகைச் செய்தி எதனைக் குறிப்பிடுகிறது

a)

சிற்பம்

b)

ஓவியம்

c)

ஓலைச்சுவடி

d)

செப்பேடு

65.

தொழில் பெயர் எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

5