WorksheetsPU1H1TL - Idioms
Total questions: 11
Worksheet time: 6mins
உயர்தரம் 1 தமிழ்மொழி பாடத்திட்டத்தில் மொத்தம் எத்தனை மரபுத்தொடர்கள் உள்ளன?
முப்பது
பதினைந்து
முப்பத்து ஐந்து
நாற்பது
வியாபாரத்தில் முன்பின் அனுபவமற்ற ரவி _____________ தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் இழந்து தவிக்கிறான்.
கண்ணைக் கசக்கி
அகலக்கால் வைத்து
அலைக்கழித்து
காதில் பூச்சுற்றி
ராமு விளையாட்டுப் போட்டியில் ____________ விளையாடியதால் அந்த அணியே தோல்வி அடைந்தது.
.
அரை மனதோடு
ஆட்டங்கண்டு
கரைபுரண்டு
கண்ணாயிருந்து
ரகு தனக்குக் கடன் கொடுத்தவரிடம் பணத்தை உடனே திருப்பித் தராது அவரை இன்று நாளை என்று _____________ வந்தான்.
.
காதில் வாங்கி
ஆட்டங்கண்டு
கண்ணை உறுத்தி
அலைக்கழித்து
குமாரசாமியின் திடீர் மரணத்தால் அவரது குடும்பத் தொழில் ____________.
.
கரைபுரண்டது
ஆட்டங்கண்டது
கண்ணை உறுத்தியது
அலைக்கழித்தது
தன்னைச் சுற்றி என்ன குழப்பம் நடந்தாலும் சரி அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரவி தன் வேலையில் ________________.
கண்ணாய் இருப்பான்
ஆட்டங்கண்டு விடுவான்
கண்ணை கசக்குவான்
அலைக்கழிப்பான்
முருகன் விலை உயர்ந்த வாகனத்தில் பள்ளிக்கு வருவது பலர் _____________.
ஆட்டாங் காணுகிறது
கண்களை உறுத்துகிறது
கரைபுரளுகிறது
அலைக்கழிக்கிறது
தமிழகத்தில் விவசாயிகள் தமது தொழிலில் அதிகமாக இழப்பு ஏற்பட்டாலும் அதற்காகக் _____________ கொண்டு நிற்காமல் வங்கியில் கடன் வாங்கியாவது மீண்டும் விவசாயம் செய்கின்றனர்.
ஆட்டாங் கண்டு
கண்ணைக் கசக்கி
கரைபுரண்டு
அரைமனம்
நம்முடைய மதியுரை அமைச்சர் திரு.லீயின் சொற்பொழிவைக் கேட்க மக்கள் ____________ வெள்ளமெனத் திரண்டு வந்தனர்
ஆட்டாங் கண்டு
கண்ணைக் கசக்கி
கரைபுரண்ட
அரைமனம்
பெரியோரின் இன்னுரைகளைக் ____________ தன் மனம்போன போக்கில் நடப்பது நல்லதல்ல.
காதில் வாங்காது
அலைக்கழித்து
அகலக்கால் வைத்து
அரைமனதோடு
பல நாடுகளில் நேர்மையற்ற தலைவர்கள் மக்களின் ___________, தேர்தலில் ஓட்டு வாங்கி விடுகின்றனர்.
காதில் வாங்காது
அலைக்கழித்து
அகலக்கால் வைத்து
காதில் பூச்சுற்றி
