NEW
Font size
Worksheetsஇணைமொழி - படிவம் 5
Total questions: 25
Worksheet time: 2hrs 5mins
''சீராட்டிப் பாராட்டி' என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
தொடக்கமும் முடிவும்
இரக்கம்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
"விருப்பு வெறுப்பு" என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல்
இரக்கம்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
" சண்டை சச்சரவு" என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல்
இரக்கம்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
" தயவு தாட்சணியம்" என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல்
இரக்கம்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
" ஆதி அந்தம்" என்ற இணைமொழிக்கு ஏற்ற விளக்கம் ___________.
பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல்
தொடக்கமும் முடிவும்
தகராறு / அடிதடி
போற்றிப் புகழ்ந்து
_______________ மின்றி செயல்படும் அச்சிறுவனுக்குத் தக்கத் தண்டனை வழங்க வேண்டும்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
ஆதி அந்தம்
எவ்வளவுதான் நண்பர்களுடன் பகை இருந்தாலும் பள்ளியில் ______________________________ களில் ஈடுபடாமல் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
ஆதி அந்தம்
________________________________ இல்லாப் பரம்பொருளாகிய இறைவனை நாம் தினமும் காலையும் மாலையும் வணங்க வேண்டும்.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
ஆதி அந்தம்
சிறு வயது முதல் நம்மைச் _______________________ வளர்த்த நம் தாயை என்றும் மறக்கக் கூடாது.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
சீராட்டிப் பாராட்டி
பகைவராக இருந்தாலும் துன்பம் வரும் போது _________________________ பாராமல் அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
சீராட்டிப் பாராட்டி
இறைவன் தம் பக்தர்களுக்கு ________ பார்க்காமல் அருள் புரிவான்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
சண்டை சச்சரவு
தயவு தாட்சணியம்
நண்பர்களிடையே ஏற்படும் வாக்கு வாதம் __________ மாறி நட்பிற்குப் பங்கம் விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
சண்டை சச்சரவு
தயவு தாட்சணியம்
கோவிட் 19 தாக்கத்தால் நாட்டில் பலர் வேலையிழந்து அவதிபடுவதால் அரசாங்கம் அவர்களிடம் ___________ காட்ட வேண்டும்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
சண்டை சச்சரவு
தயவு தாட்சணியம்
நம்மை ___________ வளர்த்த பெற்றோரை என்றும் மறக்காமல் பேணிக்காத்திட வேண்டும்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
சண்டை சச்சரவு
தயவு தாட்சணியம்
என் ___________ தெரிந்து கொள்ள நாடி சோதிடரை நாடிச் சென்றால் அவர் ஒவ்வொரு காலக் கட்டத்தையும் அறியத் தனித்தனியாக ஐம்பது ரிங்கிட்டைக் கேட்கிறார்.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
"பொதுமக்களுக்குத் தொண்டு செய்பவர்கள் தங்கள் சேவையை வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று பாகுபாடு பாராமல் எல்லாருக்கும் சரிசமமாக வழங்க வேண்டும்." எனும் சூழலுக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
"தாம் எழுதப்போகும் நாவலின் ஆரம்பப்பகுதியும் இறுதிப்பகுதியும் வாசகர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பிரபல எழுத்தாளர் தம் கற்பனைக் குதிரையைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்." எனும் சூழலுக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
"குழந்தைகளை நன்முறையில் பேணிக் காத்து வளர்ப்பதில் தாய்மார்களே மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்." எனும் சூழலுக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
"அத்திருடர்கள் திருடச் சென்ற வீட்டில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாராமல் எல்லாரையும் அடித்துக் கொடுமைபடுத்தி உள்ளார்கள்." எனும் சூழலுக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
"கணவன் மனைவி இருவரிடையே அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் செயல், அவர்களின் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் என்று மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர்." எனும் சூழலுக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், வீணே _________ ஈடுபட்டுப் பகைமையை வளர்ப்பதைவிட மனம்விட்டுப் பேசி உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
இராமலிங்கம் அடிகளாரின் அன்புநெறி உயிர்களிடத்தில் ________ காட்ட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது.
சண்டை சச்சரவு
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
நம் பெற்றோர் நம்மைச் ________ வளர்க்கும் அன்பினை நம் வாழ்க்கையில் என்றும் மறந்திடக்கூடாது.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
வன்முறையாளர்கள் ________ இன்றி அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும்போது, மனிதநேயம் கேள்விக் குறியாகிவிடுகிறது.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
நடந்த சம்பவத்தை _________ வரை முழுமையாக வழக்கறிஞர் விளக்கியபோதுதான் எழிலன் குற்றம் இழைக்கவில்லை என்று புரிந்தது.
சீராட்டிப் பாராட்டி
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
