NEW
Font size
Worksheetsதமிழோடு விளையாடு
Total questions: 25
Worksheet time: 19mins
தமிழ்மொழியை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்?
ஐந்தமிழ்
இரண்டு தமிழ்
முத்தமிழ்
நான்கு தமிழ்
தமிழ்மொழியில் எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?
பன்னிரெண்டு
பதினெட்டு
இருநூற்று நாற்பத்தேழு
முப்பது
தமிழ்மொழிக்கே உரிய சிறப்பு எழுத்து எது?
ஃ
அ
ஔ
ழ
தமிழ்’ எனும் சொல்லின் பொருள் _____________ என்பதாகும்
புதுமை
இனிமை
எளிமை
தூய்மை
இயல், இசை, ______________ ஆகிய மூன்றும் முத்தமிழ் எனப்படும்
பாடல்
ஆடல்
நாடகம்
நடிப்பு
தமிழர்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறுவதற்காகக் கொண்டாடும் திருவிழா எது?
சித்திரை புத்தாண்டு
தீபாவளித் திருவிழா
ஆடிப்பெருக்கு
பொங்கல் திருவிழா
குழந்தையைத் தூங்க வைக்க அம்மா பாடும் பாடல் என்ன பாடல்?
கும்மிப் பாட்டு
தாலாட்டுப் பாட்டு
ஒப்பாரிப் பாட்டு
கிராமியப் பாட்டு
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் மிக முக்கியமான பண்பு ___________
சேமிப்பு
உழைப்பு
சிந்தித்தல்
விருந்தோம்பல்
நல்ல காரியங்கள் நடைபெறும் நாள்களில் தமிழர்கள் _______ நிறத்தில் ஆடை அணிவதைத் தவிர்ப்பார்கள்.
கருப்பு
மஞ்சள்
வெள்ளை
சிவப்பு
தமிழர்களின் பாரம்பரிய நடனக் கலை வடிவம் ______________ ஆகும்
கரகாட்டம்
குச்சிப்புடி
கதகளி
ஒடிசி
கோவலன் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் நூல் ____________.
இராமயாணம்
மகாபாரதம்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
கம்பர்
பாரதிதாசன்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1030
1330
1230
1340
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று கூறியவர் _____________.
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
ஆத்திசூடி யார் எழுதிய நூல்?
கம்பர்
திருவள்ளுவர்
ஔவையார்
கண்ணதாசன்
சிங்கப்பூரின் தமிழ்முரசு நாளிதழை ஆரம்பித்தவர் யார்?
திரு கோ. சாரங்கபாணி
திரு கந்தசாமி
திரு எஸ் ஆர் நாதன்
திரு தேவன் நாயர்
சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி மாதம்
ஏப்ரல் மாதம்
மே மாதம்
டிசம்பர் மாதம்
தமிழில் உள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ____________.
தொல்காப்பியம்
திருக்குறள்
நாலடியார்
ஆத்திசூடி
தமிழில் சமஸ்கிருத மொழியை எழுத _________ பயன்படுகின்றன.
மெய் எழுத்துகள்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
பழங்காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேரன், சோழன், பாண்டியன் ஆகியோர் ____________ என்று அழைக்கப்பட்டனர்.
சிற்றரசர்கள்
மாவீரர்கள்
மூவேந்தர்கள்
பேரரசர்கள்
'App' என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் இவ்வாறு அழைப்போம்.
செயலி
மென்பொருள்
ஊடகம்
குறுந்தகடு
இந்தியச் சமூகத்தின் வரலாற்றை அறிய நாம் இங்குச் செல்ல வேண்டும்!
சிங்கப்பூர் இந்தியர் சங்கம்
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம்
இந்திய மரபுடைமை நிலையம்
இந்திய நுண்கலைக் கழகம்
'தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்னும் முழக்க வரியைக் கொண்ட நிகழ்ச்சி எது?
குடும்ப தின விழா
ஆசிரியர் தின விழா
தமிழ்மொழி விழா
தேசிய தின விழா
சிங்கப்பூரில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கும் தமிழ்த் தொலைக்காட்சி நிலையம் _____________.
வசந்தம்
சன் டிவி
விஜய் டிவி
சூரியா
சிங்கப்பூரின் தாய்மொழி குறித்த இலக்கு என்ன?
பேசும் மொழியாக வைத்தல்
வாழும் மொழியாக வைத்தல்
வளரும் மொழியாக வைத்தல்
உயர்ந்த மொழியாக வைத்தல்
