wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் - படிவம் 5

Total questions: 24

Worksheet time: 2hrs 0mins

Name
Class
Date
1.

திருடன் __________________ அந்த குழந்தையை ஏமாற்றினான்

a)

அ. ஓய்து ஒழித்து

b)

ஆ. ஒத்து பாடி

c)

இ. இனிப்புக் காட்டி

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

2.

கீழ்காணும் மோன்மிக்கு ஏற்ற படத்தை கண்டுப்பிடிக்கவும்.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டி

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

3.

பாலன் தன் குடும்பத்திற்காக ______________________ இன்றி உழைத்தார்.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

4.

ராமு என்ன சொன்னாலும் சீதா _______________________ அதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

5.

கணக்குப் பாடத்தின் _______________________ தெரிந்ததால், கோமதியால் முழு மதிப்பெண்கள் பெற முடிந்தது.

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

6.

ஏமாற்றுதல் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?

a)

அ. ஓய்து ஒழிச்சல்

b)

ஆ. ஒத்து பாடுதல்

c)

இ. இனிப்புக் காட்டுதல்

d)

ஈ. நெளிவு சுழிவு

e)

உ. வெள்ளிடைமலை

7.

"இந்த உலகம் பொல்லாதது. நாம் இருப்பது கொஞ்ச காலம் . நமக்கு ஏண்டா வம்பு ? நீங்க சொல்லறது சரிதான்னு போக வேண்டியது தானே!"

a)

இனிப்புக் காட்டுதல்

b)

ஒத்துப்பாடுதல்

c)

கைக் கூடுதல்

d)

இரண்டுங் கெட்டான்

8.

'வெள்ளிடைமலை' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

மிகவும் வெளிப்படையாகத் தெரிவது/ தெளிவாகப் புலனாவது

b)

ஆசை வார்த்தை கூறுவது

c)

பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்

d)

நுணுக்கங்கள் / யுத்தி

9.

'இனிப்புக் காட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

மிகவும் வெளிப்படையாகத் தெரிவது/ தெளிவாகப் புலனாவது

b)

ஆசை வார்த்தை கூறுவது

c)

பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்

d)

நுணுக்கங்கள் / யுத்தி

10.

'ஒத்துப் பாடுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

மிகவும் வெளிப்படையாகத் தெரிவது/ தெளிவாகப் புலனாவது

b)

ஆசை வார்த்தை கூறுவது

c)

பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்

d)

நுணுக்கங்கள் / யுத்தி

11.

'நெளிவு சுளிவு' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

மிகவும் வெளிப்படையாகத் தெரிவது/ தெளிவாகப் புலனாவது

b)

ஆசை வார்த்தை கூறுவது

c)

பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்

d)

நுணுக்கங்கள் / யுத்தி

12.

'ஓய்வு ஒழிச்சல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

மிகக் குறைந்த நேர ஓய்வு

b)

ஆசை வார்த்தை கூறுவது

c)

பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்

d)

நுணுக்கங்கள் / யுத்தி

13.

குறைந்த வட்டிக்குப் பணம் இரவளாக தருகிறேன் என்று குமார் பொது மக்களிடம்  ______________________________ ஏமாற்றுவதைக் கண்டுப்பிடித்த காவல் அதிகாரி ரவி, குமாரின் மீது தக்க நடவடிக்கை எடுத்தார்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

14.

நீண்ட நாட்களாக தனது மோட்டார் வண்டியின் தவணைப் பணத்தைக் கட்டுவதாகக் கூறி கண்ணன் வங்கி அதிகாரியிடம் ____________________________.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

15.

இலக்கண இலக்கிய வழிகாட்டி புத்தகத்தை நன்கு __________________ அறிந்து அண்மையில் மாநில அளவில் நடந்தேறிய புதிர் போட்டியில் கீதா தங்கம் வென்றாள்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

16.

நம் மலேசிய நாடு இத்தகைய வளர்ச்சியடைவதற்கு எல்லா இன மக்களின் உழைப்பே காரணம் என்பது ____________ ஆகும்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

17.

அம்மாதுவிடம் தான் விற்கும் பொருளை வாங்கினால் ரிம1000 வரை ரொக்கப் பணத்தை வெல்லலாம் என்று __________ அதனை அவரிடம் விற்றுவிட்டாள் அவ்விளம் பெண்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

18.

தன் அரசியல் தலைவரின் தவறான செயலுக்கெல்லாம் ________ வாழ்க்கையில் பல இலட்சங்களைச் சம்பாதித்த துரை, இன்று அவருடன் சேர்ந்து ஊழல் புரிந்த குற்றத்திற்காகச் சிறை தண்டனை அனுபவித்து வருகிறான்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

19.

மாடு வளர்ப்பதில் உள்ள _________ எல்லாம் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட கோமதி இன்று மாட்டுப் பண்ணை தொடங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாள்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

20.

சந்திரன் தான் __________ இல்லாமல் உழைத்துச் சேர்த்து வைத்த பணத்தை இன்று, நோய்வாய்ப்பட்டு மருத்துவத்துக்குச் செலவு செய்துகொண்டிருக்கிறான்.

a)

ஓய்வு ஒழிச்சல்

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

21.

இன்று நடைபெறவிருக்கும் நாட்டியப் போட்டியில் வெல்லப்போவது மலர் என்பது சிறு பிள்ளையைக் கேட்டால் கூடச் சொல்லிவிடுமே! பின்பு ஏன்தான் போட்டியை நடத்துகிறார்களோ தெரியவில்லை.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

22.

சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆகவேண்டும் என்று விரும்பினாள் வளர்மதி. எனவே, அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்றுகொள்ள நம் நாட்டுச் சிறந்த எழுத்தாளர் திரு. ஆதிபகவன் அவர்களை நாடினாள். அவர் அவளுக்கு சிறுகதை எழுதும் யுக்திகளை நல்ல முறையில் கற்றுக் கொடுத்தார்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

23.

கோமதிக்கு ஒரே மகள். அவளைச் சிறந்த கல்வியாளராக விளங்கச் செய்ய வேண்டும் என்பதே அவளின் எண்ணமாக இருந்தது. அதற்காக அவளும் அவள் கணவனும் இரவு பகல் பாராமல் உழைத்துத் தேவையான பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமிக்கத் தொடங்கினர். தன் பெற்றோர் தனக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுவதை உணர்ந்த மகளும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற உறுதி கொண்டாள்.

a)

ஓய்வு ஒழிச்சல்

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

24.

தான் கொண்டுவரும் திட்டங்களை ஆதரிப்பவர்களுக்கே அப்பணியகத்தில் பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் பரிந்துரைபார் தலைமையதிகாரி மகாதேவன். தன் சொல்லுக்குக் கட்டுப்படாதவர்களைப் பலவகையில் தொல்லைக்குட்படுத்துவார். இதற்கு பயந்தே பணியாளர்கள் பலர் அவருக்கு ஏற்றாற்போல் பேசுவார்கள்.

a)

ஓய்வு ஒழிச்சல்

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு