wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

physics11th uint 9

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

m நிறைகொண்ட பந்து ஒன்று u வேகத்துடன்

x அச்சைப்பொருத்து 60° கோணத்தில்

சென்று சுவரொன்றின் மீது மீட்சி மோதலை

ஏற்படுத்துகிறது. x மற்றும் y திசையில்

அப்பந்தின் உந்தமாறுபாடு என்ன?

a)

ΔPX=Mu,Δpy=0\Delta P_X=-Mu,\Delta p_y=0  

b)

Δpx=2mu,ΔPy=0\Delta p_x=-2mu,\Delta P_y=0  

c)

Δpx=0,ΔPy=mu\Delta p_x=0,\Delta P_y=mu  

d)

ΔPx=mu,Δpy=0\Delta P_x=mu,\Delta p_y=0  

2.

நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில்

உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன்

மதிப்பு சுழியாகும்?

a)

(a) rms வேகம்

b)

(b) சராசரி வேகம்

c)

(c) சராசரித் திசைவேகம்

d)

(d) மிகவும் சாத்தியமான வேகம்.

3.

3. மாறா அழுத்தத்திலுள்ள நல்லியல்பு வாயு

ஒன்றின் வெப்பநிலையை 100 K லிருந்து

10000 K க்கு உயர்த்தும்போது, அதன் சராசரி

இருமடிமூல வேகம் vrmsஎவ்வாறு மாறுபடும்?

a)

(a) 5 மடங்கு அதிகரிக்கும்

b)

(b) 10 மடங்கு அதிகரிக்கும்

c)

(c) மாறாது

d)

(d) 7 மடங்கு அதிகரிக்கும்

4.

ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட,

முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற

இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன

வசதியுள்ள A அறையின் வெப்பநிலை B

அறையைவிட 4°C (குறைவாக உள்ளது.

எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக

இருக்கும்?

a)

அறை A

b)

(b) அறை B

c)

(c) இரண்டு அறைகளிலும் ஒரே அளவுள்ள

காற்று இருக்கும்

d)

(d) கண்டறிய இயலாது

5.

வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு

இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச்

சார்ந்தது?

a)

(a) மோல்களின் எண்ணிக்கை மற்றும்

வெப்பநிலை

b)

(b) வெப்பநிலையை மட்டும்

c)

(c) அழுத்தம் மற்றும் வெப்பநிலை

d)

(d) அழுத்தத்தை மட்டும்.

6.

நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும்

பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால்,

அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?

a)

(a)இருமடங்காகும்

b)

(b) மாறாது

c)

(c) பாதியாகக் குறையும்

d)

(d) நான்கு மடங்கு அதிகரிக்கும்

7.

8 g ஹீலியம் மற்றும் 16 g ஆக்ஸிஜன் உள்ள

வாயுக்கலவையின் γ = cpcv\frac{c_p}{c_v}  

மதிப்பு என்ன?

a)

23/15

b)

15/23

c)

27/17

d)

17/27

8.

மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின்

எண்ணிக்கையும் f எனில், γ = cpcv\frac{c_p}{c_v}  

யின் மதிப்பு

என்ன?

a)

(a) f

b)

f2\frac{f}{2}  

c)

ff+2\frac{f}{f+2}  

d)

f+2f\frac{f+2}{f}  

9.

வாயு ஒன்றின் வெப்பநிலை மற்றும்

அழுத்தத்தை இருமடங்காக்கும்போது, அவ்வாயு

மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைத்தூரம்

எவ்வாறு மாறுபடும்?

a)

மாறாது

b)

இருமடங்காகும்

c)

மும்மடங்காகும்

d)

நான்கு மடங்காகும்.

10.

வாயுக்கலவை ஒன்று, μ1 மோல்கள் ஓரணு

மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு

மூலக்கூறுகளையும் மற்றும் μ3 மோல்கள்

நேர்க்கோட்டில் அமைந்த மூவணு

மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது.

இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில்

உள்ளபோது அதன் மொத்த சுதந்திர

இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?

a)

[3μ1 + 7( μ2 + μ3)] NA

b)

[3μ1 + 7 μ2 + 6μ3] NA

c)

[7μ1 + 3( μ2 + μ3)] NA

d)

[3μ1 + 6( μ2 + μ3)] NA

11.

ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம்

மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன்

மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே

spமற்றும் sv எனில் பின்வருவனவற்றுள் எது

மிகப் பொருத்தமானது?

a)

sp - sv = 28R

b)

sp- sv = R/28

c)

sp- sv = R/14

d)

sp - sv = R

12.

பின்வரும் வாயுக்களில், எவ்வாயு கொடுக்கப்பட்ட

வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல

வேகத்தைப் (vrms) பெற்றுள்ளது?

a)

ஹைட்ரஜன்

b)

நைட்ரஜன்

c)

ஆக்ஸிஜன்

d)

கார்பன் – டை- ஆக்ஸைடு

13.

மாறா வெப்பநிலையில், கொ டுக்கப்பட்ட வாயு

மூலக்கூறின் மேக்ஸ்வெல் – போல்ட்ஸ்மென்

வேகப்பகிர்வு வளைகோட்டின் பரப்பு

பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.

a)

pvkt\frac{pv}{kt}  

b)

kTPV\frac{kT}{PV}  

c)

PNKT\frac{P}{NKT}  

d)

PV

14.

T1மற்றும் T2என்ற இருவேறு வெப்பநிலைகளில்

உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின்

அழுத்தத்துடன் எண்அடர்த்தியின் தொடர்பு

பின்வரும் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவ்வரைபடத்திலிருந்து நாம் அறிவது.

a)

T1=T2

b)

T1 > T2

c)

T1 < T2

d)

எதனையும் அறிய இயலாது.