wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7ம் வகுப்பு - தமிழ் - பருவம் - இயல் -1

Total questions: 36

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

வெ. இராமலிங்கனார்

d)

கவிமணி

2.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் பதவியேற்ற ஆண்டு

a)

1941

b)

1942

c)

1943

d)

1944

3.

நாமக்கல் கவிஞரின் எந்த நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது

a)

அவனும் அவளும்

b)

சங்கொலி

c)

தமிழன் இதயம்

d)

மலைக்கள்ளன்

4.

பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்

a)

உலா

b)

பரணி

c)

தூது

d)

கலம்பகம்

5.

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

a)

மருதகாசி

b)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

c)

புலமைப் பித்தன்

d)

உடுமலை நாராயண கவி

6.

புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்

a)

பாரி

b)

ஓரி

c)

காரி

d)

குமணன்

7.

பிரித்து எழுதுக: தந்துதவும்

a)

தந்து + தவும்

b)

தந்து + உதவும்

c)

தா + உதவும்

d)

தந்த + உதவும்

8.

தோற்றோரால் பெயர் பெறும் ஒரே சிற்றிலக்கியம்

a)

கலம்பகம்

b)

பரணி

c)

உலா

d)

தூது

9.

"எண்ணப்படுவது, நினைக்கப்டுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்" - என்றவர்

a)

மு. வ

b)

திரு. வி. க.

c)

கவிமணி

d)

நாமக்கல் கவிஞர்

10.

'சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும்' என்று கூறும் இலக்கண நூல்

a)

இலக்கண விளக்கம்

b)

தண்டியலங்காரம்

c)

நன்னூல்

d)

புறப்பொருள் வெண்பா மாலை

11.

மொழியின் இரண்டாம் நிலை

a)

பேசுவதும் கேட்பதும்

b)

பேசுவதும் எழுதப்படுவதும்

c)

கேட்பதும் பேசுவதும்

d)

எழுதப்படுவதும் படிக்கப்படுவதும்

12.

'இருக்கிறது' - என்ற சொல்லின் வட்டார மொழி சொல் அல்லாதது எது?

a)

இருக்கு

b)

உள்ளது

c)

இருக்குது

d)

கீது

13.

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உள்ள மொழி

a)

உலக வழக்கு மொழி

b)

செய்யுள் வழக்கு மொழி

c)

இரட்டை வழக்கு மொழி

d)

வேற்று வழக்கு மொழி

14.

தமிழின் கிளை மொழிகளில் ஒன்று

a)

உருது

b)

இந்தி

c)

தெலுங்கு

d)

ஆங்கிலம்

15.

பேச்சுமொழியை வேறு எவ்வாறு அழைக்கலாம்

a)

இலக்கிய வழக்கு

b)

உலக வழக்கு

c)

நூல் வழக்கு

d)

மொழி வழக்கு

16.

'அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது' - என்ற பழமொழி உணர்த்தும் செய்தி

a)

காலம் சென்றால் திரும்பாது

b)

வெள்ளம் வடிந்தால் வராது

c)

படிப்பு சென்றால் வராது

d)

கோபம் கொள்ளக் கூடாது

17.

சரியான சொல்லால் நிரப்புக: பாடிப்பாடிக் குத்தினாலும் ___ அரிசி ஆகுமா?

a)

பதரு

b)

நெல்

c)

உமி

d)

தவுடு

18.

சரியான சொல்லால் பழமொழியை நிரப்புக:

அகழியில் விழுந்த ___ க்கு அதுவே சொர்க்கம்

a)

முயல்

b)

ஆமை

c)

முதலை

d)

எலி

19.

'ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்' - என்ற பழமொழி உணர்த்தும் செய்தி

a)

சிறத்தல்

b)

கெடுதல்

c)

ஓடுதல்

d)

தீருதல்

20.

வல்லின உகரங்களின் எண்ணிக்கை

a)

4

b)

5

c)

6

d)

8

21.

வல்லின உகரம் அல்லாதது

a)

கு

b)

சு

c)

வு

d)

று

22.

குற்றியலுகரம் எனப்படுவது

a)

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம்

b)

தனக்குரிய ஓசையில் ஒலிக்கும் உகரம்

c)

தனக்குரிய ஓசையில் அதிகரித்து ஒலிக்கும்

d)

நெடில் எழுத்துடன் சேர்ந்து ஒலிக்கும் உகரம்

23.

ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும் உகரங்கள் எங்கு வரும்?

a)

தனி நெடிலை அடுத்து வரும்

b)

ஆய்த எழுத்தை அடுத்து வரும்

c)

உயிர்மெய்யை அடுத்து வரும்

d)

தனிக்குறிலை அடுத்து வரும்

24.

ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் உகரங்கள்

a)

நெடில்தொடர்பாக குற்றியலுகரம்

b)

முற்றியலுகரம்

c)

வன்தொடர்க குற்றியலுகரம்

d)

மென்தொடர்க் குற்றியலுகரம்

25.

தமிழ் எழுத்துகள் குறிக்கப் பயன்படும் அசைச் சொற்களோடு பொருத்துக:

1) குறில் - கான்

2) நெடில் - கேனம்

3) ஆய்தம் - காரம்

4) குறில், நெடில் - கரம்

a)

4 2 1 3

b)

2 4 3 1

c)

1 4 3 2

d)

4 1 2 3

26.

பின்வருவனவற்றுள் முற்றியலுகரம் அல்லாதது

a)

பாட்டு

b)

வறு

c)

புகு

d)

ஏழு

27.

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு எத்தனை வகைப்படும்

a)

4

b)

5

c)

6

d)

8

28.

உப்பு - எந்த வகை குற்றியலுகரம்?

a)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

c)

மென்தொடர்க் குற்றியலுகரம்

d)

உயிர்தொடர்க் குற்றியலுகரம்

29.

பொருத்துக:

1) அரசு - நெடில்தொடர்க் குற்றியலுகரம்

2) மூழ்கு - முற்றியலுகரம்

3) ஆறு - இடைத்தொடர்க் குற்றியலுகரம்

4) விடு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

a)

3 4 2 1

b)

1 4 2 3

c)

4 1 3 2

d)

4 3 1 2

30.

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்

a)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

b)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

c)

வன்தொடர்க் குற்றியலுகரம்

d)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

31.

எந்த எழுத்தைத் தொடர்ந்து குற்றியலுகரச் சொற்கள் இல்லை

a)

ப்

b)

ண்

c)

வ்

d)

ம்

32.

இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களில் இறுதியாக அமையாத குற்றியலுகரங்கள்

a)

கு, சு, பு

b)

சு, டு, று

c)

கு, து, பு

d)

து, சு, று

33.

குற்றியலிகரம் எனப்படுவது

a)

தன் ஒரு மாத்திரை அளவில் நீண்டு ஒலிக்கும் இகரம்

b)

தன் ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும் இகரம்

c)

தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் உகரம்

d)

தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம்

34.

குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து எந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.

a)

தகரம்

b)

யகரம்

c)

உகரம்

d)

மகரம்

35.

மாத்திரை அளவைக் காண்க: ஒன்று

a)

2 1/2

b)

3 1/2

c)

3

d)

2

36.

பொருத்துக:

1) எழுத்திலக்கணம் - Phonology

2) ஒலியியல் - Magazine

3) இதழியல் - Orthography

4) பருவ இதழ் - Journalism

a)

1 3 2 4

b)

2 1 4 3

c)

3 1 4 2

d)

1 2 4 3