Worksheetsஎச்சம் - பெயரெச்சம்
Total questions: 8
Worksheet time: 4mins
கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
மாலை வேளையில் வீசிய காற்று இதமாக இருந்ததால், யாமினி அதிக நேரம் கடற்கரையோரமாக நடந்தாள். *
மாலை வேளையில்
இதமாக இருந்ததால்
வீசிய காற்று
பள்ளி பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ மாணவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
பாடிய
பாடினான்
பாடல்
எச்சம் எத்தனை வகைப்படும்?
3
4
2
கீழ்க்காண்பனவற்றுள் எது பெயரெச்ச வாக்கியமாகும்?
வாணி பூச்சரத்தைக் கட்டி முடித்தாள்.
தாய் பசுவைப் பிரிந்த கன்று கத்தித் தவித்தது.
நீர் வீழ்ச்சியில் சிறுவர்கள் நீந்தி விளையாடினர்.
அந்தத் தோட்டக்காரர் தன் தோட்டத்தில் நட்ட வெண்டைச் செடிக்கு நீர் ஊற்றாததால், வாடியது.
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையடை
பெயரடை
வானில் _______________ பட்டத்தைக் கண்டு யாழினி இரசித்தாள்
இருந்த
பறந்த
நின்ற
பின்வரு வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொல் யாது?
சட்டியில் கடைந்த தயிர் குடிக்கச் சுவையாக உள்ளது
சட்டியில்
கடைந்த
தயிர்
கண்ணன் தன் தோட்டத்தில் ___________________ திராட்சைப் பழங்களை மன்னனுக்கு வழங்க அரசவைக்கு வந்தான்.
விளைந்த
விளையும்
விளைந்து
