Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய தேசிய இயக்கம் - 5

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த இடம்

a)

போர்பந்தர்

b)

பரோடா

c)

வதோதரா

d)

சூரத்

2.

யாருடைய அறிவுரையை ஏற்று காந்தியடிகள் இந்தியா திரும்பினார்?

a)

திலகர்

b)

கோகலே

c)

பிபின் சந்திர பால்

d)

தில்லையாடி வள்ளியம்மை

3.

காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய இடம்

a)

காந்திநகர்

b)

சூரத்

c)

போர்பந்தர்

d)

அகமதாபாத்

4.

காந்தியடிகள் முதலில் பங்கேற்ற போராட்டம்

a)

கேதா இயக்கம்

b)

அகமதாபாத் ஆலை தொழிலாளர் போராட்டம்

c)

சம்பரான் இயக்கம்

d)

அவுரி கலகம்

5.

சம்பரான் சத்தியாகிரகம் நடைப்பெற்ற ஆண்டு

a)

1915

b)

1916

c)

1917

d)

1918

6.

கேதா சத்தியாகிரகப் போராட்டம் நடைப்பெற்ற ஆண்டு

a)

1915

b)

1916

c)

1917

d)

1918

7.

1905இல் இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர்

a)

கோபாலகிருஷ்ண கோகலே

b)

காந்தியடிகள்

c)

வல்லபாய் படேல்

d)

விதல்பாய் படேல்

8.

இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் அமைந்திருந்த இடம்

a)

மும்பை

b)

பூனா

c)

சென்னை

d)

நாக்பூர்

9.

மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு

a)

1909

b)

1915

c)

1919

d)

1918

10.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

1)இச்சீர்த்திருத்தங்கள் இந்திய கவுன்சில்கள் சட்டம் 1919 என்று அழைக்கப்பட்டது

2) மாகாண சட்டப்பேரவைகளைப் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் விரிவுப்படுத்த இச்சட்டம் வகைசெய்தது

3) இரட்டை ஆட்சியின் கீழ் மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிகப் பங்கு வழங்கப்பட்டது

a)

1,2 மட்டும் சரி

b)

2,3 மட்டும் சரி

c)

1,3 மட்டும் சரி

d)

அனைத்தும் சரி

11.

1918இல் மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் பற்றி விவாதிக்க இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு அமர்வு நடத்தப்பட்ட இடம்

a)

பூனா

b)

நாக்பூர்

c)

மும்பை

d)

சூரத்

12.

பொருத்துக:

1) கிழக்கு - சத்யசோதக் இயக்கம்

2) வடமேற்கு - திராவிட இயக்கம்

3) மேற்கு - நாமசூத்ரா இயக்கம்

4) தெற்கு - ஆதிதர்மா இயக்கம்

a)

4 3 1 2

b)

1 3 4 2

c)

3 4 1 2

d)

4 1 3 2

13.

ஜோதிராவ் பூலேவின் குலாம்கிரி என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு

a)

1871

b)

1872

c)

1873

d)

1874

14.

ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, மாதம்

a)

1919, ஜனவரி

b)

1919, பிப்ரவரி

c)

1919, மார்ச்

d)

1919, ஏப்ரல்

15.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள்

a)

1919 ஏப்ரல் 11

b)

1919 ஏப்ரல் 12

c)

1919 ஏப்ரல் 13

d)

1919 ஏப்ரல் 14

16.

யாருடைய கைதிற்கு எதிராக ஜாலியன் வாலாபாக்கில் போராட்டம் நடைப்பெற்றது

a)

லாலா லஜபதிராய், லாலா ஹர்தயாள்

b)

சத்தியபால், சாய்புதீன் கிச்லு

c)

ரவீந்திரநாத் தாகூர், காந்தி

d)

பகத்சிங், உத்தம் சிங்

17.

கூற்றுகளை ஆராய்க:

கூற்று 1: கிலாபத், பஞ்சாப் கொடுமை ஆகிய இரண்டு காரணங்களால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது

கூற்று 2: துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனிதத் தலங்கள் தொடர்பானது.

கூற்று 3: ஜாலியன் வாலாபாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை எனப்பட்டது

a)

கூற்று 1, 3 சரி

b)

கூற்று 2,3 சரி

c)

கூற்று 1, 2 சரி

d)

அனைத்தும் சரி

18.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக மைக்கேல் ஓ டையரை படுகொலை செய்தவர்

a)

பகத் சிங்

b)

சத்தியபால்

c)

சாய்புதீன் கிச்லு

d)

உத்தம் சிங்

19.

காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்ட நாள்

a)

1920 ஜூலை 31

b)

1920 ஆகஸ்டு 31

c)

1920 செப்டம்பர் 31

d)

1930 அக்டோபர் 31

20.

தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களில் பொருந்தாதவர் யார்?

a)

இராஜாஜி

b)

சத்தியமூர்த்தி

c)

பெரியார்

d)

காமராஜர்

21.

கூற்று: 1922இல் பர்தோலியில் நடைப்பெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது.

காரணம்: செளரி சௌரா நிகழ்வின் காரணமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடும் கோரிக்கையை வைத்தார்

a)

கூற்று சரி காரணம் தவறு

b)

கூற்று, காரணம் சரி; காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

c)

கூற்று, காரணம் சரி; காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

d)

கூற்று தவறு, காரணம் சரி

22.

1923இல் மோதிலால் நேரு மற்றும் சி. ஆர்.தாஸ் -ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சி

a)

கதார் கட்சி

b)

சுயராஜ்ய கட்சி

c)

சுதந்திரா கட்சி

d)

கம்யூனிஸ்ட் கட்சி

23.

சுயராஜ்ய கட்சியோடு இணைந்து செயல்பட்டவர்

a)

சத்தியமூர்த்தி

b)

இராஜாஜி

c)

இராஜேந்திர பிரசாத்

d)

வல்லபாய் படேல்

24.

சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

a)

சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை

b)

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை

c)

அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை

d)

அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை

25.

1928இல் கல்கத்தாவில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்

a)

மோதிலால் நேரு

b)

ஜவஹர்லால் நேரு

c)

நேதாஜி

d)

இராஜேந்திர பிரசாத்