Font size
WorksheetsExodus 1-5
Total questions: 87
Worksheet time: 1hrs 20mins
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய் யார் தங்களை சந்தித்ததாக சொன்னார்கள் ?
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்
ஆபிரகாமின் தேவன்
எபிரெயருடைய தேவன்
தேவனாகிய கர்த்தர்
(More than one correct answer)எத்தனை நாட்கள்?வனாந்தரத்தில் பிரயாணம்போய், தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும் என்று மோசேயும் ஆரோனும் சொன்னார்கள் ? போகாதிருந்தால், தங்களுக்கு என்ன நேரும் ?
மூன்றுநாள்
இரண்டுநாள் பிரயாணம்போய் மூன்றாம் நாள் பலியிட வேண்டும்
வனாந்தரத்தில்
தீங்கு வரப்பண்ணுவார்
கொள்ளைநோயும் பட்டயமும் வரப்பண்ணுவார்
யார் மோசேயும் ஆரோனையும் நோக்கி ,நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? என்று சொன்னார் ?
(a)
எதை சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்துதேசம் எங்கும் சிதறிப்போனார்கள்?
கற்களை
தாளடிகளை
வைக்கோல்
மண்
மோசே பார்வோனிடத்தில் திரும்பிப்போய்: இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப்பண்ணினதென்ன? இந்த ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
(True/False)
True
False
வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று யார் ஜனங்களை துரிதப்படுத்தினார்கள்?
ஆளோட்டிகள்
பார்வோன்
தலைவர்கள்
எகிப்தின் ராஜா
பார்வோனுடைய ஆளோட்டிகள் யாரை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்?
இஸ்ரவேல் புத்திரரை
ஜனங்களை
இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை
எதினால் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்?
முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும் என்று சொன்னதினாலே
சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்று பார்வோன்
சொன்னதினாலே
அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும் என்று சொல்லப்பட்டதினாலே
ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே
கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்று யார், யாரை பார்த்து சொன்னது ?
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் - பார்வோனிடத்தில் போய்ச் சொன்னது
மோசேயும் ஆரோனும் - பார்வோனிடத்தில் போய்ச் சொன்னது
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் - பார்வோனுடைய ஆளோட்டிகளை நோக்கி சொன்னது
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் -மோசேக்கும் ஆரோனுக்கும் சொன்னது
பார்வோன் யாரை அறியேன் என்று மோசேக்கும் ஆரோனுக்கும் சொன்னான் ?
நதியில் ஸ்நானம்பண்ண வந்தது யார் ?
தாதிகள்
தோழிகள்
லேவியின் குமாரத்தி
பார்வோனுடைய குமாரத்தி
நதியோரத்தில் உலாவினவர்கள் யார் ?
தோழிகள்
தாதிகள்
பார்வோனுடைய குமாரத்தி
லேவியின் குமாரத்தி
பார்வோனுடைய குமாரத்தி எங்கு இருந்த பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள்?
நதியில்
நாணலுக்கு அருகில்
நதியோரத்தில்
நாணலுக்குள்ளே
எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன, வரிசைப்படுத்துக :
ரூபன், சிமியோன்,லேவி
யூதா
இசக்கார், செபுலோன்
பென்யமீன், தாண்
நப்தலி, காத், ஆசேர்
மருத்துவச்சிகள், யாருக்கு பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யவில்லை ?
புதிய ராஜன்
பார்வோன்
இஸ்ரவேல் புத்திரர்
தேவன்
தேவன் எதற்காக மருத்துவச்சிகளுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்?
தேவனுக்குப் பயந்ததினால்
எகிப்தின் ராஜா கட்டளைப்படி செய்யாததினால்
எபிரெய ஸ்திரீகளுக்கு தீங்கு செய்யாததினால்
இஸ்ரவேல் புத்திரருக்கு பயந்ததினால்
(Select more than one answer)எந்த வேலையினால் , இஸ்ரவேல் புத்திரரின் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்?
சாந்தும் செங்கலும் செய்யும் வேலை
எல்லா வேலை
சுமைசுமக்கிற வேலையினால்
வயலில் செய்யும் சகலவித வேலை
யார் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள்.?
விசாரணைக்காரர்கள்
எகிப்தின் ராஜா
தலைவர்கள்
எகிப்தியர்
எந்த வேலையினால் ஒடுக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்
சுமைசுமக்கிற வேலை
சாந்தும் செங்கலும் செய்யும் வேலை
வயலில் செய்யும் சகலவித வேலை
எல்லா வேலை
(select all the right answers)புதிய ராஜன் எதற்காகவெல்லாம் ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.?
ஜனங்கள் பெருகாதபடிக்கு
பகைஞரோடே கூடி, தமக்கு விரோதமாக யுத்தம் பண்ணாதபடிக்கு
தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கு
எபிரெய மருத்துவச்சிகள்(select more than one answer)
சிப்பிராள்
பூவாள்
சிப்போராள்
யாருடைய கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்?
யோசேப்பு
யாக்கோபு
இஸ்ரவேல்
பென்யமீன்
எகிப்தியர் ஏன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்
எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்
mark the places in exodus
ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தவள் யார் ?
எபிரெய ஸ்திரீ
லேவியின் குமாரத்தி
பார்வோனுடைய குமாரத்தி
ஆசாரியனின் குமாரத்தி
எதற்குப் பிசினும் கீலும் பூசப்பட்டது ?பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் எங்கு வைத்தாள்?
(answer both questions)
நாணற்பெட்டி
பெட்டிக்கு
நாணலுக்குள்ளே
நாணலுக்கு அருகில்
நதியோரத்தில்
பிள்ளைக்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படிக்கு தூரத்திலே நின்றுகொண்டிருந்தது யார்?
அதின் தாய்
தாதி
பார்வோனின் குமாரத்தி
அதின் தமக்கை
பிள்ளையைக் கண்டு ; அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றது யார் ?
பார்வோன்
பார்வோனுடைய குமாரத்தி
தாதி
எகிப்திய ஸ்திரீ
பிள்ளையின் தமக்கை பால்கொடுக்கிறதற்கு யாரை அழைத்துக்கொண்டு வந்தாள் ?
பிள்ளையின் தாயை
எபிரெய ஸ்திரீயை
எகிப்திய ஸ்திரீயை
எதுவுமில்லை
பார்வோனுடைய குமாரத்தி, அந்த ஸ்திரீயிடம் பிள்ளையை வளர்ப்பதற்கு என்ன கொடுக்கிறேன் என்றாள்?
சன்மானம்
பணம்
சம்பளம்
பொற்காசுகள்
மோசே யாருக்கு குமாரனானான்? அவனுக்கு பேரிட்டது யார் ?
பார்வோனுடைய குமாரத்தி
பிள்ளையின் தாய்
லேவியின் குமாரத்தி
எபிரெய ஸ்திரீ
பார்வோனுடைய குமாரத்தி ஏன் மோசே என்று பேரிட்டாள்?
ஜனத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி
ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி
நதியினின்று எடுத்தேன் என்று சொல்லி
நாணல் பெட்டியினின்று எடுத்தேன் என்று சொல்லி
எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? என்று கேட்டது யார் ?
எபிரெய மனுஷன்
சகோதரன்
தோழன்
அநியாயஞ்செய்கிறவன்
தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அந்த எகிப்தியனுக்கு மோசே என்ன செய்தான் ?
வெட்டி, அவனை புதைத்துப்போட்டான்
வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்
கொன்று, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
கொன்று, அவனை புதைத்துப்போட்டான்.
(Select more than one answer)மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினவன் யார் ? காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தவன் யார் ?
மோசே
எகிப்தியன்
பார்வோன்
எபிரெயன்
மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, எங்கு போய் உட்கார்ந்திருந்தான்?
எகிப்து தேசத்தில், ஒரு துரவண்டையிலே
மீதியான் தேசத்தில், ஒரு ஊற்றண்டையிலே
மீதியான் தேசத்தில், ஒரு தொட்டிக்கு அருகில்
மீதியான் தேசத்தில், ஒரு துரவண்டையிலே
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்:
7
5
6
3
யார் ? யாருடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்?
மீதியான் தேசத்து ஆசாரியனின் குமாரத்திகள்
ரெகுவேலின் குமாரத்திகள், தகப்பனுடைய ஆடுகளுக்கு
மேய்ப்பர்கள், தங்களுடைய ஆடுகளுக்கு
மோசே, ரெகுவேலின் ஆடுகளுக்கு
மோசே எழுந்திருந்து, யாருக்கு துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்?
மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு
ரெகுவேலின் குமாரர்களுக்கு
மேய்ப்பர்களுக்கு
ரெகுவேலின் குமாரத்திகளுக்கு
ரெகுவேலின் குமாரத்திகள், யார் தங்களை மேய்ப்பரின் கைகளுக்கு தப்புவித்ததாக சொன்னார்கள் ?
எபிரேயன்
மேய்ப்பன்
வழிப்போக்கன்
எகிப்தியன்
(Select all the correct answers)மோசே யாரிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான்?
மீதியான் தேசத்து ஆசாரியன்
ரெகுவேலிடத்தில்
மேய்ப்பர்களிடத்தில்
எத்திரோவிடத்தில்
மோசேயின் மனைவி பெயர் ?
எலிசபாள்
சிப்போராள்
சிப்பிராள்
பூவாள்
அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, மோசே தன் குமாரனுக்கு என்ன பேரிட்டான்?
எலியேசர்
எலேயாசார்
கெர்சோம்
அபியூ
இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் எங்கு வந்து எட்டினது?
தேவனிடத்தில்
கர்த்தரிடத்தில்
தேவசந்நிதியில்
மோசேவினிடத்தில்
தேவன் ___________ கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
இஸ்ரவேல் புத்திரர் முறையிடும் சத்தம்
இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சை
இஸ்ரவேல் புத்திரரின் சத்தத்தை
இஸ்ரவேல் புத்திரர் முறையிட்டுக்கொண்டிருப்பதை
தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் _________ தேவன் அவர்களை _________ .
மோசே ஆடுகளை எங்கு பின்புறத்திலே ஓட்டினான் ?
தேவபர்வதத்தின்
வனாந்தரத்தின்
மலையின்
மீதியான் தேசத்தின்
தேவபர்வதம் எது ?
ஓரேப்
சீனாய்மலை
கன்மலை
மலையுச்சி
யார் மோசேக்கு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்?
கர்த்தர்
தேவன்
கர்த்தராகிய தேவன்
கர்த்தருடைய தூதனானவர்
முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், வெந்துபோகாதிருக்கிற அற்புதகாட்சியைப் பார்க்கும்படி மோசே கிட்ட வருகிறதை யார் கண்டார்?
கர்த்தர்
தேவன்
கர்த்தராகிய தேவன்
கர்த்தருடைய தூதனானவர்
முட்செடியின் நடுவிலிருந்து யார் மோசேயை கூப்பிட்டார்.?
கர்த்தர்
தேவன்
கர்த்தராகிய தேவன்
கர்த்தருடைய தூதனானவர்
(Select all the correct answers)முட்செடியின் நடுவிலிருந்து பேசிய தேவன், மோசேயிடம் என்ன சொன்னார் ?
இங்கே கிட்டிச் சேராயாக
கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு
நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி
உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்
மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால் என்ன செய்தான் ?
கண்களை மூடிக்கொண்டான்
பயந்து ஓடினான்
முகங்குப்புற விழுந்து வணங்கினான்
முகத்தை மூடிக்கொண்டான்
பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் யார் இருப்பதாக கர்த்தர் சொன்னார் ?
கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் எகிப்தியரும் ஏவியரும் எபூசியரும்
கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பாபிலோனியரும் ஏவியரும் எபூசியரும்
கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும்
கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் மீதியானியரும் எபூசியரும்
கர்த்தர், ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா - என்று யாரை அழைத்தார் ?
இஸ்ரவேல் புத்திரரை
மோசே
தன் ஜனத்தை
எகிப்தியனை
யார் இஸ்ரவேல் புத்திரரை ஒடுக்குகிறதை கர்த்தர் கண்டார் ? யார் நிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டார் ?
ஆளோட்டிகள், எகிப்தியர்
தலைவர்கள் , ஆளோட்டிகள்
எகிப்தியர், ஆளோட்டிகள்
ஆளோட்டிகள் , பார்வோன்
கர்த்தர் ,மோசேயிடம் நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு எது அடையாளம் என்றார்?
இந்த மலையில் தேவனை காண்பாய்
எகிப்தில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்
இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்
ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வருவாய்
தேவன், அவருடைய நாமம் என்ன என்று சொன்னார் ?
இருக்கிறவராக இருக்கிறேன்
இருக்கிறேன்
தேவன்
கர்த்தர்
மோசே, யார் தன்னை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கு அனுப்பினதாக சொல்லவேண்டும் ?
இருக்கிறவராக இருக்கிறேன்
இருக்கிறேன் என்பவர்
தேவன்
கர்த்தர்
எது கர்த்தருடைய நாமம், எது தலைமுறை தலைமுறைதோறும் அவருடைய என் பேர்ப்பிரஸ்தாபம்?
இருக்கிறவராக இருக்கிறேன்
இருக்கிறேன்
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர்
உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர்
(Select all the correct answers)தேவன் மோசேயை நோக்கி: இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில் என்ன சொல்ல சொன்னார் :
உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் தரிசனமாகி
உங்களை நிச்சயமாய்ச் சந்திப்பார்
எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக்கண்டார்
உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்குவார்
பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுபோவேன்
எகிப்தின் ராஜா _________ கண்டாலொழிய, உங்களைப் போகவிடான்
கர்த்தரை
தேவனின் கரத்தை
யுத்தத்தை
வாதையை
கைவல்லமை
தேவன், எகிப்தின் நடுவில் தன் கையை நீட்டி, அதை எதினால் வாதிப்பேன் என்கிறார் ?
சகலவித வாதைகளினால்
சகலவித அற்புதங்களாலும்
கைவல்லமையினால்
வாதைகளினால்
(select all correct answers)ஸ்திரீகள், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், எதையெல்லாம் கேட்டுவாங்குவாள்?
வெள்ளியுடமைகளையும்
பொன்னுடைமைகளையும்
வெள்ளி ,பொன் ,பொருட்களையும்
வஸ்திரங்களையும்
இஸ்ரவேல் புத்திரர், யாரை கொள்ளையிடுவார்கள்? அவர்களுக்கு யாருடைய கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன் என்று தேவன் சொன்னார் ?
ஜனத்தை
பார்வோனை
ஆளோட்டிகளை
எகிப்தியரை
மோசேயின் கையிலிருந்தது என்ன? அதைத் தரையிலே போட்டபோது, அது என்னவாயிற்று?
ஒரு கோல், சர்ப்பம்
ஒரு கொம்பு , பாம்பு
துணி ,சர்ப்பம்
ஒரு கோல், கொம்பு
மோசே எதற்கு விலகி ஓடினான்?
பார்வோனுக்கு
எகிப்தியருக்கு
சர்ப்பத்திற்கு
தேவனுக்கு
Statement True or False? கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதை பிடி என்றார்; அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
True
False
மோசே தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. திரும்பத் தன் மடியிலே போட்டு,வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.
இது எத்தனையாவது அடையாளம் ?
முந்தின அடையாளம்
பிந்தின அடையாளம்
முதல் அடையாளம்
மூன்றாம் அடையாளம்
தேவன், மோசேக்கு கொடுத்த மூன்றாம் அடையாளம் என்ன ?
தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும்
வெண்குஷ்டம்
கோல் தரையிலே போட்டபோது, சர்ப்பமாயிற்று
நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும்
கர்த்தர் அடையாளங்களை மோசேக்கு கொடுத்தப்பின்,மோசே கர்த்தர் நோக்கி என்ன சொன்னான் ?
(Select all correct answer)
இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்
திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்
அவருடைய நாமம் என்ன என்று கேட்டால், என்ன சொல்லுவேன்
நான் வாக்குவல்லவன் அல்ல
நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.
4:12
3:12
2:12
5:12
லேவியன் ?(select all correct answers)
பல்லூ
எஸ்ரோன்
ஆரோன்
மோசே
நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு _________ .
உணர்த்துவேன்
போதிப்பேன்
பேசுவேன்
சொல்லுவேன்
கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி என்ன சொன்னார் ?
(select all correct answers)
உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் இறந்துபோனார்கள்
நீ எகிப்துக்குத் திரும்பிப் போ
நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்
நீ அடையாளங்களைச் செய்வாய்
நன்றாய்ப் பேசுகிறவன் யார் ? அவன் யாரை காணும்போது அவன் இருதயம் மகிழும்.?
(answer both questions)
மோசே
எத்திரோ
ஆரோன்
எகிப்தியன்
அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். அவன் யார் ?
மோசே
எத்திரோ
ஆரோன்
எகிப்தியன்
மோசேயின் மாமன் ?
மோசே
எத்திரோ
ஆரோன்
எகிப்தியன்
சுகமாய்ப் போய்வாரும் என்று சொன்னவன் ?
மோசே
எத்திரோ
ஆரோன்
எகிப்தியன்
யாருடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன் என்று கர்த்தர் சொன்னார் ? யாருடைய சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் ?
எத்திரோ
பார்வோன்
ஆரோன்
எகிப்தியர்
கர்த்தர் யாரை கொல்லப்பார்த்தார்.?
எலியேசர்
சிப்போராள்
மோசே
கெர்சோம்
சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, யாருடைய நுனித்தோலை அறுத்து, மோசே கால்களுக்கு முன்பாக எறிந்தாள் ?
எலியேசர்
தன் புத்திரனுடைய
மோசே
கெர்சோம்
ஆரோன் , மோசேக்கு எதிர்கொண்டுபோய், எங்கு அவனைச் சந்தித்து, முத்தஞ்செய்தான்.?
வனாந்திரத்தில்
தேவபர்வதத்தில்
மலையின்மேல்
மீதியான் தேசத்தில்
மோசேயும் ஆரோனும் போய், யாரை கூடிவரச் செய்தார்கள்?
இஸ்ரவேல் புத்திரரை
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்களை
ஜனத்தை
இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர்
கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, யாருடைய கண்களுக்கு முன்பாக அடையாளங்களை செய்தான்.?
இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர்
ஜனங்களின்
இஸ்ரவேல் புத்திரரை
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்களை
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, என்ன செய்தார்கள் ?
தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்
தலைவணங்கி தொழுதுகொண்டார்கள்
தொழுதுகொண்டார்கள்
முறையிட்டார்கள்
Total verse in Exodus
(a)
