WorksheetsSPC 3.0 தமிழ்ப் புதிர்ப்போட்டி
Total questions: 45
Worksheet time: 15mins
1. ‘அவனா’ என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது?
அகவினா
புறவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
2. இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
இவனிடம்
பூக்கரம்
இவ்யானை
அப்பையன்
3. கீழ்க்காணும் விதிக்கேற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது
தம்பி புத்தகம்
அப்பா தாருங்கள்
இறகு குவித்தான்
தம்பியோடு போனேன்
4. கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களில் கெடுதல் புணர்ச்சியைத் தெரிவு செய்க.
ஆணழகன்
நற்றமிழ்
மாவிலை
மெய்யடி
5. பின்வரும் கவிதையினைப் படித்து, தொடர்ந்து வரும் வினாவுக்கு விடை காண்க.
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்குச் சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரைச் சிறையிடுவோம்
-கவியரசு கண்ணதாசன்
இக்கவிதையில் மோனையைத் தெரிவு செய்க.
பாலென - பணிவோம்
தாயகம் - தனக்கென
கூழென - காப்போரின்
சோறிடுவோம் - சிறையிடுவோம்
6. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்
அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகாது
இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்
7. பின்வரும் வாக்கியத்தில் அகச்சுட்டு ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
அவன் தன் தாயாரிடம் தனது சட்டை எங்கே என்று
கேட்டான்.
அவன்
தன்
எங்கே
8. கொடுக்கப்பட்ட எழுத்துகளைப் பற்றிய சரியான கூற்று யாது?
அ, ஈ, உ, ஐ.
சொல்லின் முதலில் வாரா எழுத்துகள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள்
சொல்லின் முதலில் வரும் எழுத்துகள்
சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும் எழுத்துகள்
9. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இனவெழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
I அங்கம்
III சட்டி
II தென்றல்
IV மேற்கு
I, II
I, III
II, III
II, IV
10. கீழ்க்காணும் சொற்றொடர் புணர்ந்த விதியைத் தேர்ந்தெடு.
கரம் + காட்டினேன் = கரங்காட்டினேன்
மகர மெய் ககரத்தோடு இயல்பாகப் புணர்ந்துள்ளது
மகர மெய் ககரத்தோடு புணரும்போது ககரம் கெட்டுள்ளது
மகர மெய் ககரத்தோடு புணரும்போது மகரம் கெட்டுள்ளது
மகர மெய் ககரத்தோடு புணரும்போது இன மெல்லெழுத்தாகத் திரிந்துள்ளது
11. கீழ்க்காணும் கூற்றுக்குச் சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் நம் நாட்டைப் பிரதிநிதித்து அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்ற சுரேசின் மறைந்திருந்த திறமை இன்று மலேசியர்கள் அனைவராலும் அறியப்பட்டது.
பசுமரத்தாணி போல
இலைமறை காய் போல
போல
ஊமை கண்ட கனா போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
12. சரியான பழமொழி என்ன?
வாழ்வே நோயற்ற செல்வம் குறைய
நோய் குறைவு செல்வம் நிறைய
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
எதுவும் இல்லை
13. எப்படி பட்டோர் கல்வி கற்றும் பயன் இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?
தீதும் நன்றும் பிரித்து அறிய தெரியாதோர்
நல்ல நட்பை சரியாக பயன்படுத்த தெரியாதோர்
பணத்தை அதிகப்படியாக கணக்கு வழக்கின்றி செலவு செய்தோர்
இறைவனின் திருவடியை வணங்காதோர்
14. எதனை வள்ளுவர் அமிழ்தம் என குறிப்பிடுகிறார்?
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மழை
இனிய சொற்கள்
கற்புடைய பெண்டீர் அளிக்கும் உணவு
ரிஷிகள் வழங்கும் போதனைகள்
15. கீழ்க்காணும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.
ஒழுக்கத்து நீத்தார் _______ விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
பெருமை
கடமை
பொறுமை
சிறுமை
16. கீழ்க்காணும் பொருளுக்கேற்ப திருக்குறளைத் தெரிவு செய்க.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
17. கீழ்காணும் விடைத் தேர்வுகளில் 'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் குறிப்புச் சொற்களைத் தெரிவுச் செய்க.
மனம் தளருதல்
தன்நம்பிக்கை இல்லாமல் இருத்தல்
விடாமுயற்சியோடு இருத்தல்
பொறாமை கொள்ளுதல்
18. சூழலுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
இளமைக் காலத்தில் கற்கும் கல்வி, நம் மனதில் பதிந்துவிடும். அது என்றும் அழியாது.
கண்ணினைக் காக்கும் இமைபோல
சிலை மேல் எழுத்துப் போல்
காட்டுத் தீ போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
19. எது கிரந்த எழுத்து அல்ல?
ஸர்ப்பம்
பலர்
புஷ்பம்
காஜா
20. சூழலுக்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
அரவினுக்குப் பாடும் திறமை இருந்த போதும் அவன் போட்டிகளில் கலந்து கொள்ளாததால் அவனுடைய திறமையை யாரும் அறிந்திருக்கவில்லை.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
மலரும் மணமும் போல
இலைமறை காய் போல
இலவு காத்த கிளி போல
21. கருத்துக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தன் இயலாமையை மறைத்துப் பிறரைக் குறை கூறுதல்
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
22. கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.
____________________________________
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
23. கீழ்க்காணும் செய்யுளில் கோடிட்ட வரிகளின் பொருளைத் தெரிவு செய்க.
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே
அவன்பால் உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும் கயிற்றினால் மன உறுதியோடு பக்தி செலுத்தினால்.
பாலைக் கடையும்போது நெய் வெளிப்படுவது போல இறையருள் வெளிப்படும்.
விறகில் தீயும், பாலில் நெய்யும் மறைந்திருப்பதுபோல மிகப் பெரிய மாணிக்கத்தைப் போன்று பேரொளியாகிய இறைவன் எங்கும் எதிலும் மறைந்துள்ளான்.
பெரியோர், சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
24. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
உங்கள் உழைப்பிற்குப் பலன் கிட்டியது.
கனகா சிறந்த ஆசிரியை என எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.
நாங்கள் தமிழ்மொழி கட்டுரையைப் பிழையின்றி எழுதினோம்.
.
நம் கையிலுள்ள பத்து விரல்களும் ஒரே அளவில் அமைந்திருக்கவில்லை
25. கீழ்க்காண்பனவற்றுள் தன்மை சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
எங்கள் பயணம் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
உன் வளர்ச்சியைக் கண்டு இந்த நாடு பெருமைக் கொள்கிறது.
பாரதி ஒரு சிறந்த தமிழ் புலவர்.
உமது பாட்டும் நடனமும் மிகச் சிறப்பாக இருக்கின்றன
26. வேற்றுமை உருபைச் சரியாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
2ஆம் வேற்றுமை - மாலா கோவிலுக்குச் சென்றாள்.
4ஆம் வேற்றுமை - கபிலன் நாயைத் துரத்தி அடித்தான்.
2ஆம் வேற்றுமை - பூனைக்கு வால் உண்டு.
4ஆம் வேற்றுமை - சிவாவுக்குத் தாகம் எடுத்தது.
27. ஒரு கருத்தையோ செயலையோ மிகைப்படுத்திக் கூறுவது ________ ஆகும்.
பெயரடை
விடையடை
வல்லடை
28. பின்வரும் கூட்டுவினைகளுள் எது வினை + வினை கூட்டுவினையாகும்?
பின்னடை
எடுத்துக்காட்டு
முன்னேறு
பழுதுபார்
29. பின்வருவனவற்றுள் எது செயப்படுபொருள் குன்றிய வினை வாக்கியம்?
மரக்கிளை அசைந்தது
கிளை புயலால் ஒடிந்தது
வேடன் வேட்டையாடினான்
30. பயன்பாட்டு சூழல் அடிப்படையில் பெயர்ச் சொற்கள் ____________ வகைப்படும்.
6
5
7
4
31. திருநாவுக்கரசர், “ என் கடன் பணி செய்து கிடப்பது,” என்றார்.
மேற்கண்ட நேர்கூற்று வாக்கியத்தை அயற்கூற்று வாக்கியமாக அமைத்திடுக.
தன் கடன் பணி செய்து கிடப்பது என்று கூவினார் திருநாவுக்கரசர்.
தமது கடன் பணி செய்து கிடப்பது என்று கூறினார் திரு.
தன் கடன் பணி செய்து கிடப்பது என்றார் திருநாவுக்கரசர்.
32. பிற நாட்டவர் எனும் சொற்றொடர் எந்த தொடரைக் குறிக்கின்றது?
உரித்தொடர்
வினைமுற்றுத் தொடர்
இடைத்தொடர்
33. கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்
34. வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.
35. அகநானூறு எந்த வகை தொகுப்பு நூலைச் சார்ந்தது?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
நீதி இலக்கியம்
36. அகநானூறு ___________ பாடல்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
399+கடவுள் வாழ்த்து
400 அகவல்
399 அகவல்
37. புணர்தலும் புணர்தல் நிமித்தம் என்ற உரிப்பொருளைக் கொண்ட திணை எது?
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
38. அகநானூற்றில் மொத்தம் எத்தனை திணைகள் கையாளப்பட்டன?
7
4
5
39. பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டு கருவூலமாகவும் திகழும் நூல் எது?
நற்றிணை
குறுந்தொகை
புறநானூறு
அகநானூறு
40. புறநானூறு______நூல்களுள் ஒன்று.
சிற்றிலக்கியம்
பேரிலக்கியம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
41. ‘காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்.
154
184
204
214
42. கீழ்வரும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது ?
கல்வியினும் உயர்ந்தது ஒன்றுமில்லை
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
43. கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
____________________________________________________
எண்ணுவம் என்பது இழுக்கு.
கற்றதனா பாய பயனின் கொல்
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
44. கீழ்க்காணும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
___________எல்லாம் மழை.
உடுப்பதூஉம்
எடுப்பதூஉம்
கடுப்பதூஉம்
மடுப்பதூஉம்
45. என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்:
கடுங்கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி,
தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,
இன் துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது,
பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால்
இந்த செய்யுலுக்கு சம்மதமான ஐம்பெரும்காப்பியதை தேர்வு செய்க.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
