NEW
Font size
Worksheets10th அணுக்கரு இயற்பியல்_6
Total questions: 12
Worksheet time: 6mins
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் ______ எனக் கருதப்படுகிறது.
தூண்டப்பட்ட கதிரியக்கம்
தன்னிச்சையான கதிரியக்கம்
செயற்கைக் கதிரியக்கம்
அ மற்றும் இ
கதிரியக்கத்தின் அலகு
ராண்ட்ஜன்
கியூரி
பெக்கொரல்
இவை அனைத்தும்
செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்______
பெக்கொரல்
ஐரின் கியூரி
ராண்ட்ஜன்
நீல்ஸ் போர்
கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்?
(i) α - சிதைவு
(ii) β - சிதைவு
(iii) γ - சிதைவு
(iv) நியூட்ரான் சிதைவு
(i) மட்டும் சரி
(ii) மற்றும் (iii) சரி
(i) மற்றும் (iv) சரி
(ii) மற்றும் (iv) சரி
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______
ரேடியோ அயோடின்
ரேடியோ கார்பன்
ரேடியோ கோபால்ட்
ரேடியோ நிக்கல்
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை _______
கண்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கும்
திசுக்களை பாதிக்கும்
மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
அதிகமான வெப்பத்தை உருவாக்கும்'
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.
காரீய ஆக்சைடு
இரும்பு
காரீயம்
அலுமினியம்
கீழ்க்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை போட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத்திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத்திறன் அதிகம்
(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(iv) மட்டும் சரி
(iii) மற்றும் (iv) சரி
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு _____
அணுக்கரு பிளவு
ஆல்பாச் சிதைவு
அணுக்கரு இணைவு
பீட்டாச் சிதைவு
அணுக்கரு சிதைவு (α சிதைவு) வினையில்
6X12 -----------> ZYA எனில் A மற்றும் Z ன் மதிப்பு
8, 6
8, 4
4, 8
கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து கான இயலாது
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் ________
கல்பாக்கம்
கூடங்குளம்
மும்பை
இராஜஸ்தான்
கீழ்க்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர்வினை நிகழும்
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்
(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
(i) மட்டும் சரி
(i) மற்றும் (ii) சரி
(iv) மட்டும் சரி
(iii) மற்றும் (iv) சரி
