Worksheets20. இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல்
Total questions: 32
Worksheet time: 18mins
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
போத்துத் தேர்வு முறை
கூட்டுத் தேர்வு முறை
தூய வரிசைத் தேர்வு முறை
கலப்பினமாக்கம்
பூசா கோமல் என்பது ____ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்
கரும்பு
நெல்
தட்டைப்பயிறு
மக்காச்சோளம்
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட துரு நோய்க்கும் எதிர்ப்பு தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது ____ இன் ரகமாகும்.
மிளகாய்
மக்காச்சோளம்
கரும்பு
கோதுமை
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____ ஆகும்
IR 8
IR 24
அட்டாமிட்டா 2
பொன்னி
உயிரித்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
வாழும் உயிரினங்கள்
வைட்டமின்கள்
உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி மற்றும் வாழும் உயிரினங்கள்
DNA வை வெட்டப் பயன்படும் நொதி (மூலக்கூறு கத்தரிக்கோல்) ____
கத்திரிக்கோல்
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியேஸ்
கத்தி
RNA நொதிகள்
rDNA என்பது ____
ஊர்தி DNA
வட்ட வடிவ DNA
ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA வின் சேர்க்கை
சாட்டிலைட் DNA
DNA விரல்ரேகைத் தொழில்நுட்பம் ____ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
ஓரிழை
திடீர் மாற்றமுற்ற
பல்லுருத் தோற்ற
மீண்டும் மீண்டும் வரும் தொடர்
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ____ என அழைக்கப்படுகின்றன.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
திடீர் மாற்றம் அடைந்தவை
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் மற்றும் மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ____ ஆகும்.
n = 7 மற்றும் x = 21
n = 21 மற்றும் x = 21
n = 7 மற்றும் x = 7
n = 21 மற்றும் x = 7
____ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்தி செய்யும் கலை ஆகும்.
தாவர பயிர்ப்பெருக்கம்
விலங்குப் பெருக்கம்
கலப்பினப் பெருக்கம்
பல்லுயிரி பெருக்கம்
புரதம் செறிந்த கோதுமை ரகம் ____ ஆகும்
அட்லஸ் 66
IR 24
அட்டாமிட்டா 2
பொன்னி
____ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
அனாசின்
மெட்டாசின்
கால்ச்சிசின்
புரோமைசின்
விரும்பத்தக்க ஊட்டச் சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்தி செய்யும் அறிவியல் முறை ____ எனப்படும்.
பயிர் வளர்ச்சி
பல்லுயிர் பெருக்கம்
உயிரூட்டச்சத்தேற்றம்
பயிர்பெருக்கம்
உற்பத்தி செய்யப்பட்ட ____ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து உருவாகும்.
அட்லஸ் 66
IR 24
அட்டாமிட்டா 2
பொன்னி
____ தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்துள்ளது.
DNA
rDNA
RNA
mRNA
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை ____ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாகிறது.
அமில வரிசை
தனிம வரிசை
கார வரிசை
நுண்ணுயிரி வரிசை
ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ____ இடையே காணப்படும்.
இரட்டைக் கரு இரட்டையர்கள்
ஒற்றைக் கரு இரட்டையர்கள்
ஒத்த கரு இரட்டையர்கள்
வேற்று கரு இரட்டையர்கள்
வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு ____ ஆகும்.
சிவப்பணுக்கள்
வெள்ளையணுக்கள்
குருத்தணுக்கள்
தட்டையணுக்கள்
ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, ____ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
கடத்தி ( பிளாஸ்டு)
தண்டு
சாட்டிலைட்
ஊர்தி
கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு _____ ஆகும்
ஆட்டோ டெட்ராபிளாய்டு
அல்லோ டெட்ராபிளாய்டு
நானோ டெட்ராபிளாய்டு
மோனோ டெட்ராபிளாய்டு
இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை ____ எனப்படும்
ஒருமயப் பயிர்ப் பெருக்கம்
பன்மயப் பயிர்ப்பெருக்கம்
ஒத்த பண்பு பயிர்ப்பெருக்கம்
வேற்றுப் பண்பு பயிர்ப்பெருக்கம்
உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித் தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டம் ____ எனப்படும்
குளோன்கள்
கலப்புயிரி
ஓம்புயிரி
உட்கலப்பு
இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் ____ சத்தின் தரத்தினை தீர்மானிக்கிறது.
புரதம்
வைட்டமின்
இரும்பு
கார்போ ஹைட்ரேட்
”கோல்டன் ரைஸ்” ஒரு மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்ட ____
கோதுமை
மக்காச்சோளம்
அரிசி
கரும்பு
பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் ____
கொல்லக்கூடியது
வளர்க்கக்கூடியது
ஈர்க்கக்கூடியது
கவரக்கூடியது
____ கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே (ஆய்வகத்தில்) நடைபெறும் கருவுறுதலாகும்.
இயற்கை
ஆய்வக
தொழிற்சாலை
செயற்கை
DNA விரல் ரேகைத் தொழில்நுட்பம் ____ என்பவரால் உருவாக்கப்பட்டது.
நார்மன் போர்லாக்
மா.சா.சுவாமிநாதன்
அலெக் ஜெஃப்ரே
கோ.நம்மாழ்வார்
பொருத்துக
அரைக்குள்ள கோதுமை
சோனாலிகா
அரைக்குள்ள அரிசி
IR 8
கரும்பு
சக்காரம்
பேசியோலஸ் முங்கோ
முங் நம்பர் 1
பொருத்துக
வேர்க்கடலை
TMV-2
rDNA தொழில்நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்
இன்சுலின்
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
நச்சு
பீட்டா கரோட்டின்
கோல்டன் ரைஸ்
கலப்புயிரி இரு பெற்றோரையும் விட ____ இருக்கும்.
குறையுள்ளதாக
மேம்பட்டதாக
அதே போல
தரமற்றதாக
rDNA தொழில்நுட்பம் கலப்பினமாக்கலை விட ____
கடினமானது
தரம் குறைவானது
மேலானது
எளிமையானது
