Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+2 Acc L 1 - L 10 TM & EM

Total questions: 95

Worksheet time: 48mins

Name
Class
Date
1.

முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

Incomplete records are generally maintained by

a)

நிறுமம்

A company

b)

அரசு

Government

c)

சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

Small sized sole trader business

d)

பன்னாட்டு நிறுவனங்கள்

Multinational enterprises

2.

நிலை அறிக்கை ஒரு

Statement of affairs is a

a)

வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை Statement of income and expenditure

b)

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

Statement of assets and liabilities

c)

ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு

Summary of cash transactions

d)

கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு Summary of credit transactions

3.

தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

Opening statement of affairs is usually prepared to find out the

a)

தொடக்க முதல் கண்டறிய

Capital in the beginning of the year

b)

இறுதி முதல் கண்டறிய

Capital at the end of the year

c)

அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

Profit made during the year

d)

அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

Loss occurred during the year

4.

பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

The excess of assets over liabilities is

a)

நட்டம்

Loss

b)

ரொக்கம்

Cash

c)

முதல்

Capital

d)

இலாபம்

Profit

5.

கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

Which of the following items relating to bills payable is transferred to total creditors account?

a)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

Opening balance of bills payable

b)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

Closing balance of bills payable

c)

அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

Bills payable accepted during the year

d)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

Cash paid for bills payable

6.

கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

The amount of credit sales can be computed from

a)

 மொத்தக் கடனாளிகள் கணக்கு

Total debtors account

b)

மொத்தக் கடனீந்தோர் கணக்கு

Total creditors account

c)

பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

Bills receivable account

d)

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

Bills payable account

7.

முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

Which one of the following statements is not true in relation to incomplete records?

a)

இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

It is an unscientific method of recording transactions

b)

ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

Records are maintained only for cash and personal accounts

c)

இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

It is suitable for all types of organisations

d)

வரிஅதிகாரிகள்ஏற்றுக் கொள்வதில்லை

Tax authorities do not accept

8.

உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை

What is the amount of capital of the proprietor, if his assets are Rs. 85,000 and liabilities are Rs. 21,000?

a)

Rs. 85,000

b)

Rs. 1,06,000

c)

Rs. 21,000

d)

Rs. 64,000

9.

தொடக்க முதல் ரூ. 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ரூ. 6,000, அவ்வாண்டின் இலாபம் ரூ. 2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.

When capital in the beginning is Rs 10,000, drawings during the year is Rs 6,000, profit made during the year is Rs 2,000 and the additional capital introduced is Rs 3,000, find out the amount of capital at the end.

a)

Rs. 9,000

b)

Rs. 11,000

c)

Rs. 21,000

d)

Rs. 3,000

10.

கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு ?

Opening balance of debtors: Rs. 30,000, cash received: Rs. 1,00,000, credit sales: Rs. 90,000; closing balance of debtors is

a)

Rs. 30,000

b)

Rs. 1,30,000

c)

Rs. 40,000

d)

Rs. 20,000

11.

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

Receipts and payments account is a

a)

பெயரளவு கணக்கு

Nominal A/c

b)

சொத்து கணக்கு

Real A/c

c)

ஆள்சார் கணக்கு

Personal A/c

d)

பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

Representative personal account

12.

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

Receipts and payments account records receipts and payments of

a)

வருவாயினத் தன்மை மட்டும் உடையது

Revenue nature only

b)

முதலினத் தன்மை மட்டும் உடையது

Capital nature only

c)

வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

Both revenue and capital nature

d)

மேற்கண்ட எதுவுமில்லை

None of the above

13.

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

Balance of receipts and payments account indicates the

a)

அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

Loss incurred during the period

b)

அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

Excess of income over expenditure of the period

c)

அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

Total cash payments during the period

d)

அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

Cash and bank balance as on the date

14.

வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு

Income and expenditure account is a

a)

பெயரளவுக் கணக்கு

Nominal A/c

b)

சொத்து கணக்கு

Real A/c

c)

ஆள்சார் கணக்கு

Personal A/c

d)

பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

Representative personal account

15.

வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது.

Income and Expenditure Account is prepared to find out

a)

இலாபம் அல்லது நட்டம் 

Profit or loss

b)

ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு

Cash and bank balance

c)

உபரி அல்லது பற்றாக்குறை

Surplus or deficit

d)

நிதிநிலை 

Financial position

16.

பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

Which of the following should not be recorded in the income and expenditure account?

a)

பழைய செய்தித்தாள்கள் விற்றது

Sale of old news papers

b)

சொத்து விற்பனை மீதான நட்டம் 

Loss on sale of asset

c)

செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்

Honorarium paid to the secretary

d)

அறைகலன் விற்ற தொகை

Sale proceeds of furniture

17.

நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

Subscription due but not received for the current year is

a)

ஒரு சொத்து

An asset

b)

ஒரு பொறுப்பு

A liability

c)

ஒரு செலவு 

An expense

d)

தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று 

An item to be ignored

18.

உயில்கொடை ஒரு

Legacy is a

a)

வருவாயினச் செலவு

Revenue expenditure

b)

முதலினச் செலவு

Capital expenditure

c)

வருவாயின வரவு

Revenue receipt

d)

முதலின வரவு

Capital receipt

19.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

Donations received for a specific purpose is

a)

வருவாயின வரவு

Revenue receipt

b)

முதலின வரவு

Capital receipt

c)

வருவாயினச் செலவு

Revenue expenditure

d)

முதலினச் செலவு

Capital expenditure

20.

ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

There are 500 members in a club each paying ` 100 as annual subscription. Subscription

due but not received for the current year is ` 200; Subscription received in advance is ` 300.

Find out the amount of subscription to be shown in the income and expenditure account.

a)

Rs. 50,000

b)

Rs. 50,200

c)

Rs. 49,000

d)

Rs. 49,800

21.

கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

In the absence of a partnership deed, profits of the firm will be shared by the partners in

a)

சமமான விகிதத்தில்

Equal ratio

b)

முதல் விகிதத்தில்

Capital ratio

c)

சமமான மற்றும் முதல் விகிதத்தில்

Both Equal ratio and Capital ratio

d)

மேற்கூறிய எதுவுமில்லை

None of these

22.

கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி

In the absence of an agreement among the partners, interest on capital is

a)

b)

வங்கி வீதத்தில் வழங்கப்படும்

Allowed at bank rate

c)

ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

Allowed @ 5% per annum

d)

ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

Allowed @ 6% per annum

23.

கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்

As per the Indian Partnership Act, 1932, the rate of interest allowed on loans advanced by partners is

a)

ஆண்டுக்கு 8%

8% per annum

b)

ஆண்டுக்கு 12%

12% per annum

c)

ஆண்டுக்கு 5%

5% per annum

d)

ஆண்டுக்கு 6%

6% per annum

24.

பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

Which of the following is shown in Profit and loss appropriation account?

a)

அலுவலகச் செலவுகள்

Office expenses

b)

பணியாளர் ஊதியம்

Salary of staff

c)

கூட்டாளியின் ஊதியம்

Partners’ salary

d)

வங்கிக்கடன் மீதான வட்டி

Interest on bank loan

25.

கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?

When fixed capital method is adopted by a partnership firm, which of the following items will appear in capital account?

a)

கூடுதல் முதல் கொண்டுவந்தது

Additional capital introduced

b)

முதல் மீது வட்டி

Interest on capital

c)

எடுப்புகள் மீது வட்டி

Interest on drawings

d)

இலாபப் பகிர்வு

Share of profit

26.

ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக

When a partner withdraws regularly a fixed sum of money at the middle of every month, period for which interest is to be calculated on the drawings on an average is

a)

5.5 மாதங்கள்

5.5 moths

b)

6 மாதங்கள்

6 months

c)

12 மாதங்கள்

12 months

d)

6.5 மாதங்கள்

6.5 months

27.

பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

Which of the following is the incorrect pair?

a)

எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

Interest on drawings – Debited to capital account

b)

முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

Interest on capital – Credited to capital account

c)

கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

Interest on loan – Debited to capital account

d)

இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

Share of profit – Credited to capital account

28.

கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது

In the absence of an agreement, partners are entitled to

a)

சம்பளம்

Salary

b)

கழிவு

Commission

c)

கடன் மீது வட்டி

Interest on loan

d)

முதல் மீது வட்டி

Interest on capital

29.

பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Pick the odd one out

a)

கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

Partners share profits and losses equally

b)

கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.

Interest on partners’ capital is allowed at 7% per annum

c)

கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.

No salary or remuneration is allowed to partners

d)

கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

Interest on loan from partners is allowed at 6% per annum.

30.

எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

Profit after interest on drawings, interest on capital and remuneration is Rs. 10,500. Geetha, a partner, is entitled to receive commission @ 5% on profits after charging such commission. Find out commission.

a)

Rs. 50

b)

Rs. 150

c)

Rs. 550

d)

Rs. 500

31.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

Which of the following statements is true?

a)

நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

Goodwill is an intangible asset

b)

நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

Goodwill is a current asset

c)

நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

Goodwill is a fictitious asset

d)

நற்பெயரினை வாங்க முடியாது

Goodwill cannot be acquired

32.

உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

Super profit is the difference between

a)

பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்

Capital employed and average profit

b)

சொத்துகள் மற்றும் பொறுப்புகள்

Assets and liabilities

c)

சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்

Average profit and normal profit

d)

நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

Current year’s profit and average profit

33.

ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

The average rate of return of similar concerns is considered as

a)

சராசரி இலாபம்

Average profit

b)

சாதாரண இலாப விகிதம்

Normal rate of return

c)

எதிர்நோக்கும் இலாப விகிதம்

Expected rate of return

d)

இவைகளில் ஏதுமில்லை

None of these

34.

கீழ் வருவனவற்றில் எது சரியானது?

Which of the following is true?

a)

உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

Super profit = Total profit / number of years

b)

உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

Super profit = Weighted profit / number of years

c)

உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்

Super profit = Average profit – Normal profit

d)

உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்

Super profit = Average profit × Years of purchase

35.

சரியற்ற இணையினை அடையாளம் காணவும்

Identify the incorrect pair

a)

சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

Goodwill under Average profit method - Average profit × Number of years of purchase

b)

உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

Goodwill under Super profit method - Super profit × Number of years of purchase

c)

ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

Goodwill under Annuity method - Average profit × Present value annuity factor

d)

கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல்ஆண்டுகளின் எண்ணிக்கை

Goodwill under Weighted average - Weighted average profit × Number of years of

profit method purchase

36.

சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்

When the average profit is Rs. 25,000 and the normal profit is Rs. 15,000, super profit is

a)

Rs. 25,000

b)

Rs. 5,000

c)

Rs. 10,000

d)

Rs. 15,000

37.

2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

Book profit of 2017 is Rs 35,000; non-recurring income included in the profit is Rs 1,000 and abnormal loss charged in the year 2017 was Rs 2,000, then the adjusted profit is

a)

Rs. 36,000

b)

Rs. 35,000

c)

Rs. 38,000

d)

Rs. 34,000

38.

ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

The total capitalised value of a business is Rs 1,00,000; assets are Rs 1,50,000 and liabilities are Rs 80,000. The value of goodwill as per the capitalisation method will be

a)

Rs. 40,000

b)

Rs. 70,000

c)

Rs. 1,00,000

d)

Rs. 30,000

39.

மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

Revaluation A/c is a

a)

சொத்து க/கு

Real A/c

b)

பெயரளவு க/கு

Nominal A/c

c)

ஆள்சார் க/கு

Personal A/c

d)

ஆள்சாரா க/கு

Impersonal A/c

40.

மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது

On revaluation, the increase in the value of assets leads to

a)

ஆதாயம்

Gain

b)

நட்டம்

Loss

c)

செலவு

Expense

d)

இவற்றுள் எதுவுமில்லை

None of these

41.

சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

The profit or loss on revaluation of assets and liabilities is transferred to the capital account of

a)

பழைய கூட்டாளிகள்

The old partners

b)

புதிய கூட்டாளி

The new partner

c)

அனைத்து கூட்டாளிகள்

All the partners

d)

தியாகம் செய்த கூட்டாளிகள்

The Sacrificing partners

42.

கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால்அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

If the old profit sharing ratio is more than the new profit sharing ratio of a partner, the difference is called

a)

முதல் விகிதம்

Capital ratio

b)

தியாக விகிதம்

Sacrificing ratio

c)

ஆதாய விகிதம்

Gaining ratio

d)

இவற்றுள் எதுவுமில்லை

None of these

43.

கூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

At the time of admission, the goodwill brought by the new partner may be credited to the capital accounts of

a)

அனைத்து கூட்டாளிகள்

all the partners

b)

பழைய கூட்டாளிகள்

the old partners

c)

புதிய கூட்டாளி

the new partner

d)

தியாகம் செய்த கூட்டாளிகள்

the sacrificing partners

44.

கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

Which of the following statements is not true in relation to admission of a partner

a)

பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

Generally mutual rights of the partners change

b)

முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு

பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

The profits and losses of the previous years are distributed to the old partners

c)

கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

The firm is reconstituted under a new agreement

d)

ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

The existing agreement does not come to an end

45.

பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

Select the odd one out

a)

மறுமதிப்பீட்டு இலாபம்

Revaluation profit

b)

பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

Accumulated loss

c)

புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

Goodwill brought by new partner

d)

முதலீட்டு மாறுபடும் நிதி

Investment fluctuation fund

46.

ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.

James and Kamal are sharing profits and losses in the ratio of 5:3. They admit Sunil as a partner giving him 1/5 share of profits. Find out the sacrificing ratio.

a)

1:3

b)

3:1

c)

5:3

d)

3:5

47.

பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

Balaji and Kamalesh are partners sharing profits and losses in the ratio of 2:1. They admit

Yogesh into partnership. The new profit sharing ratio between Balaji, Kamalesh and Yogesh is agreed to 3:1:1. Find the sacrificing ratio between Balaji and Kamalesh.

a)

1:3

b)

3:1

c)

2:1

d)

1:2

48.

கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

A partner retires from the partnership firm on 30th June. He is liable for all
the acts of the firm up to the

a)

நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்

End of the current accounting period

b)

முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்

End of the previous accounting period

c)

கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்

Date of his retirement

d)

கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

Date of his final settlement

49.

கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது___

On retirement of a partner from a partnership firm, accumulated profits and losses are
distributed to the partners in the

a)

புதிய இலாபப் பகிர்வு விகிதம்

New profit sharing ratio

b)

பழைய இலாபப் பகிர்வு விகிதம்

Old profit sharing ratio

c)

ஆதாய விகிதம்

Gaining ratio

d)

தியாக விகிதம்

Sacrificing ratio

50.

கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது ____

On retirement of a partner, general reserve is transferred to the

a)

அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

Capital account of all the partners

b)

மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு

Revaluation account

c)

தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

Capital account of the continuing partners

d)

நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு

Memorandum revaluation account

51.

மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது____

On revaluation, the increase in liabilities leads to

a)

ஆதாயம்

Gain

b)

நட்டம்

Loss

c)

இலாபம்

Profit

d)

மேற்கண்ட எதுவுமில்லை

None of these

52.

ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

At the time of retirement of a partner, determination of gaining ratio is required

a)

மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு

To transfer revaluation profit or loss

b)

பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு

To distribute accumulated profits and losses

c)

நற்பெயரை சரிக்கட்டுவதற்கு 

To adjust goodwill

d)

மேற்கண்ட எதுவுமில்லை

None of these

53.

விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு___

If the final amount due to a retiring partner is not paid immediately, it is transferred to

a)

வங்கி க/கு

Bank A/c

b)

விலகும் கூட்டாளியின் முதல் க/கு

Retiring partner’s capital A/c

c)

விலகும் கூட்டாளியின் கடன் க/கு

Retiring partner’s loan A/c

d)

பிற கூட்டாளிகளின் முதல் க/கு

Other partners’ capital A/c

54.

ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு___

‘A’ was a partner in a partnership firm. He died on 31st March 2019. The final amount due
to him is ` 25,000 which is not paid immediately. It will be transferred to

a)

A-ன் முதல் கணக்கு

A’s capital account

b)

A-ன் கடன் கணக்கு

A’s current account

c)

A –ன் நிறைவேற்றாளர் கணக்கு

A’s Executor account

d)

A –ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு

A’s Executor loan account

55.

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.

A, B and C are partners sharing profits in the ratio of 2:2:1. On retirement of B, goodwill of
the firm was valued as ` 30,000. Find the contribution of A and C to compensate B:

a)

ரூ.20,000 மற்றும் ரூ.10,000

Rs. 20,000 and Rs. 10,000

b)

ரூ. 8,000 மற்றும் ரூ.4,000

Rs. 8,000 and Rs. 4,000

c)

ரூ.10,000 மற்றும் ரூ.20,000

Rs.10,000 and Rs. 20,000

d)

ரூ.15,000 மற்றும் ரூ.15,000

Rs.15,000 and Rs. 15,000

56.

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்___

A, B and C are partners sharing profits in the ratio of 4:2:3. C retires. The new profit
sharing ratio between A and B will be

a)

4:3

b)

3:4

c)

2:1

d)

1:2

57.

X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்

X, Y and Z were partners sharing profits and losses equally. X died on 1st April 2019. Find
out the share of X in the profit of 2019 based on the profit of 2018 which showed Rs. 36,000

a)

ரூ. 1,000

Rs. 1000

b)

ரூ. 3,000

Rs. 3000

c)

ரூ.12,000

Rs. 12000

d)

ரூ.36,000

Rs. 36000

58.

முன்னுரிமைப் பங்கு என்பது
(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
(ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

A preference share is one
(i) which carries preferential right with respect to payment of dividend at fixed rate
(ii) which carries preferential right with respect to repayment of capital on winding up

a)

(i) மட்டும் சரியானது

Only (i) is correct

b)

(ii) மட்டும் சரியானது

Only (ii) is correct

c)

(i) மற்றும் (ii) சரியானது

Both (i) and (ii) are correct

d)

(i) மற்றும் (ii) தவறான

Both (i) and (ii) are incorrect

59.

நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்

That part of share capital which can be called up only on the winding up of a company is called

a)

அங்கீகரிக்கப்பட்ட முதல்

Authorised capital

b)

அழைக்கப்பட்ட முதல்

Called up capital

c)

முதலினக் காப்பு

Capital reserve

d)

காப்பு முதல்

Reserve capital

60.

ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

At the time of forfeiture, share capital account is debited with

a)

முகமதிப்பு

Face value

b)

பெயரளவு மதிப்பு

Nominal value

c)

செலுத்தப்பட்ட தொகை

Paid up amount

d)

அழைக்கப்பட்ட தொகை

Called up amount

61.

ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது_____. 

After the forfeited shares are reissued, the balance in the forfeited shares account should be transferred to

a)

பொதுக்காப்பு கணக்கிற்கு

General reserve account

b)

முதலினக் காப்பு கணக்கிற்கு

Capital reserve account

c)

பத்திர முனைமக் கணக்கிற்கு

Securities premium account

d)

உபரி கணக்கிற்கு

Surplus account

62.

முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____

The amount received over and above the par value is credited to

a)

பத்திர முனைமக் கணக்கு

Securities premium account

b)

அழைப்பு முன்பணக் கணக்கு

Calls in advance account

c)

பங்குமுதல் கணக்கு

Share capital account

d)

பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

Forfeited shares account

63.

பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?

Which of the following statement is false?

a)

வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.

Issued capital can never be more than the authorised capital

b)

பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்

In case of under subscription, issued capital will be less than the subscribed capital

c)

காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

Reserve capital can be called at the time of winding up

d)

செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்

Paid up capital is part of called up capital

64.

சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு_____.

When shares are issued for purchase of assets, the amount should be credited to

a)

விற்பனையாளர் க/கு

Vendor’s A/c

b)

பற்பல சொத்துகள் க/கு

Sundry assets A/c

c)

பங்குமுதல் க/கு

Share capital A/c

d)

வங்கி க/கு

Bank A/c

65.

ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை____

If a share of Rs.10 on which Rs.8 has been paid up is forfeited. Minimum reissue price is

a)

பங்கொன்று ரூ.10

Rs.10 per share

b)

பங்கொன்று ரூ.8

Rs.8 per share

c)

பங்கொன்று ரூ.5

Rs.5 per share

d)

பங்கொன்று ரூ.2

Rs.2 per share

66.

சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____

Supreme Ltd. forfeited 100 shares of Rs.10 each for non-payment of final call of Rs.2 per share. All these shares were re-issued at Rs.9 per share. What amount will be transferred to capital reserve account?

a)

ரூ.700

b)

ரூ.800

c)

ரூ.900

d)

ரூ.1,000

67.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல? 

Which of the following statements is not true?

a)

குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.

Notes and schedules also form part of financial statements

b)

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.

The tools of financial statement analysis include common-size statement

c)

போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.

Trend analysis refers to the study of movement of figures for one year

d)

பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள், பொது அளவு அடிப்படையின் சதவிகிதமதாக காட்டப்படுகின்றன.

The common–size statements show the relationship of various items with somecommon base, expressed as percentage of the common base

68.

இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது

Balance sheet provides information about the financial position of a business concern

a)

ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

Over a period of time

b)

ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

As on a particular date

c)

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

For a period of time

d)

குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

For the accounting period

69.

நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

Which of the following tools of financial statement analysis is suitable when data relating to several years are to be analysed?

a)

ரொக்க ஓட்ட பகுப்பாய்வு

Cash flow statement

b)

பொது அளவு அறிக்கை

Common size statement

c)

ஒப்பீட்டு அறிக்கை

Comparative statement

d)

போக்கு ஆய்வு

Trend analysis

70.

நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.

The financial statements do not exhibit

a)

பணம்சாரா தகவல்கள்

Non-monetary data

b)

கடந்தகால தகவல்கள்

Past data

c)

குறுகிய கால தகவல்கள்

Short term data

d)

நீண்டகால தகவல்கள்

Long term data

71.

பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

Which of the following is not a tool of financial statement analysis?

a)

போக்குப் பகுப்பாய்வு

Trend analysis

b)

பொது அளவு அறிக்கை

Common size statement

c)

ஒப்பீட்டு அறிக்கை

Comparative statement

d)

நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்

Standard costing

72.

நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____

The term ‘fund’ refers to

a)

நடப்புப் பொறுப்புகள்

Current liabilities

b)

நடைமுறை முதல்

Working capital

c)

நிலைச் சொத்துகள்

Fixed assets

d)

நீண்டகாலச் சொத்துகள்

Non-current assets

73.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?

Which of the following statements is not true?

a)

நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.

All the limitations of financial statements are applicable to financial statement analysis also.

b)

நிதிநிலை அறிக்கை பகுப்பாப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.

Financial statement analysis is only the means and not an end.

c)

நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை

Expert knowledge is not required in analysing the financial statements

d)

ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.

Interpretation of the analysed data involves personal judgement

74.

ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

A limited company’s sales has increased from Rs.1,25,000 to Rs.1,50,000. How does this appear in comparative income statement?

a)

+20%

b)

+120%

c)

-120%

d)

-20%

75.

ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

In a common-size balance sheet, if the percentage of non-current assets is 75, what would be the percentage of current assets?

a)

175

b)

125

c)

25

d)

100

76.

ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

Expenses for a business for the first year were Rs. 80,000. In the second year, it was increased to Rs. 88,000. What is the trend percentage in the second year

a)

10%

b)

110%

c)

90%

d)

11%

77.

ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது ______

The mathematical expression that provides a measure of the relationship between two figures is called

a)

முடிவு

Conclusion

b)

விகிதம்

Ratio

c)

மாதிரி

Model

d)

தீர்மானம்

Decision

78.

நடப்பு விகிதம் காட்டுவது ______. 

Current ratio indicates

a)

குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

Ability to meet short term obligations

b)

மேலாண்மை திறன்

Efficiency of management

c)

இலாபம் ஈட்டும் திறன்

Profitability

d)

நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

Long term solvency

79.

சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது______.

Current assets excluding inventory and prepaid expenses is called

a)

காப்புகள்

Reserves

b)

புலனாகும் சொத்துகள்

Tangible assets

c)

நிதி

Funds

d)

விரைவு சொத்துகள்

Quick assets

80.

புற அக பொறுப்புகள் அளவிடுவது ______.

Debt equity ratio is a measure of

a)

குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

Short term solvency

b)

நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

Long term solvency

c)

இலாபம் ஈட்டும் திறன்

Profitability

d)

செயல்திறன்

Efficiency

81.

ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
(i) விரைவு விகிதம் (ii) நிகர இலாப விகிதம்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம் (iv) நடப்பு விகிதம் 

To test the liquidity of a concern, which of the following ratios are useful?
(i) Quick ratio (ii) Net profit ratio
(iii) Debt-equity ratio (iv) Current ratio

a)

(i) and (ii)

b)

(i) and (iv)

c)

(ii) and (iii)

d)

(ii) and (iv)

82.

பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் 

Proportion of share holder's funds to total assets is called

a)

உரிமையாளர் விகிதம்

Proprietary ratio

b)

முதல் உந்துதிறன் விகிதம்

Capital gearing ratio

c)

புற அக பொறுப்பு விகிதம்

Debt equity ratio

d)

நடப்பு விகிதம்

Current ratio

83.

பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

Which one of the following is not correctly matched?

a)

நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்

Liquid ratio – Proportion

b)

மொத்த இலாப விகிதம் – சதவீதம்

Gross profit ratio – Percentage

c)

நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்

Fixed assets turnover ratio – Percentage

d)

புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

Debt-equity ratio – Proportion

84.

நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______

Current liabilities Rs. 40,000; Current assets Rs. 1,00,000 ; Inventory Rs. 20,000. Quick ratio is

a)

1:1

b)

2.5:1

c)

2:1

d)

1:2

85.

விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்____

Cost of revenue from operations Rs. 3,00,000; Inventory in the beginning of the year Rs. 60,000; Inventory at the close of the year Rs. 40,000. Inventory turnover ratio is

a)

2 மடங்கு

2 times

b)

3 மடங்கு

3 times

c)

6 மடங்கு

6 times

d)

8 மடங்கு

8 times

86.

பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது______

Accounting report prepared according to the requirements of the user is

a)

வழக்கமான கணக்கியல் அறிக்கை

Routine accounting report

b)

குறிப்பிட்ட நோக்க அறிக்கை

Special purpose report

c)

இருப்பாய்வு 

Trial balance

d)

இருப்புநிலைக் குறிப்பு 

Balance sheet

87.

F 11 எனும் பயன்பாடு ______

Function key F11 is used for

a)

நிறுவனப் பண்புகூறுகள் 

Company Features

b)

கணக்கியல் சான்றாவணங்கள் 

Accounting vouchers

c)

நிறுவன கட்டமைப்பு 

Company Configuration

d)

இவைகளில் எதுவும் இல்லை

None of these

88.

குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?

Which submenu displays groups, ledgers and voucher types in Tally?

a)

சரக்கிருப்பு சான்றாவணங்கள் 

Inventory vouchers

b)

கணக்கியல் சான்றாவணங்கள் 

Accounting vouchers

c)

நிறுவன தகவல் 

Company Info

d)

கணக்கு தகவல்

Account Info

89.

Tally-யில் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) ?
(i) ரொக்கம்  (ii) இலாப நட்டக் க/கு  (iii) முதல் க/கு 

What are the predefined Ledger(s) in Tally?
(i) Cash (ii) Profit & Loss A/c (iii) Capital A/c

a)

(i) மட்டும்

Only (i)

b)

(ii) மட்டும் 

Only (ii)

c)

(i) மற்றும் (ii)

Both (i) and (ii)

d)

(ii) மற்றும் (iii)

Both (ii) and (iii)

90.

எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

Contra voucher is used for

a)

தலைமைப் பதிவு 

Master entry

b)

அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

Withdrawal of cash from bank for office use

c)

அறிக்கைகள்

Reports

d)

சொத்துகள் கடனுக்கு வாங்கியது

Credit purchase of assets

91.

Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு? 

Which is not the default group in Tally?

a)

அனாமத்து க/கு 

Suspense account

b)

கொடுபட வேண்டிய செலவு க/கு 

Outstanding expense

c)

விற்பனை க/கு 

Sales account

d)

முதலீடுகள் க/கு

Investments

92.

சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?

Salary account comes under which of the following head?

a)

நேரடி வருமானங்கள் 

Direct Incomes

b)

நேரடி செலவினங்கள் 

Direct Expenses

c)

மறைமுக வருமானங்கள் 

Indirect Incomes

d)

மறைமுக செலவினங்கள்

Indirect Expenses

93.

அலுவலகப் பயன்பாட்டிற்காக  ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்? 

Rs. 25,000 withdrawn from bank for office use. In which voucher type, this transaction will be recorded

a)

எதிர்பதிவு சான்றாவணம் 

Contra Voucher

b)

பெறுதல்கள் சான்றாவணம் 

Receipt Voucher

c)

செலுத்தல்கள் சான்றாவணம் 

Payment Voucher

d)

விற்பனை சான்றாவனம்

Sales Voucher

94.

அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?

In which voucher type credit purchase of furniture is recorded in Tally

a)

பெறுதல்கள் சான்றாவணம் 

Receipt voucher

b)

உரிய குறிப்பேடு சான்றாவணம் 

Journal voucher

c)

கொள்முதல் சான்றாவணம் 

Purchase voucher

d)

பெறுதல்கள் சான்றாவணம்

Payment voucher

95.

Tally- யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?

Which of the following options is used to view Trial Balance from Gateway of Tally?

a)

Gateway of Tally - > Reports - > Trial Balance

b)

Gateway of Tally - > Trial Balance

c)

Gateway of Tally - > Reports - > Display - > Trial Balance

d)

இவைகளில் ஏதுமில்லை

None of these