wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+1 HISTORY LESS 17

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

1. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம்

உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.

a)

பிளாசிப் போர்

b)

முதலாம் கர்நாடகப் போர்

c)

பக்சார் போர்

d)

வந்தவாசிப் போர்

2.

-----------------------உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா

ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின்

திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க

நேரிட்டது.

a)

அலகாபாத்

b)

மதராஸ்

c)

பூனா

d)

புதுச்சேரி

3.

...............................வங்காளத்தில் இரட்டை ஆட்சியை

அறிமுகப்படுத்தினார்.

a)

வாரன்ஹேஸ்டிங்ஸ்

b)

டியூப்ளே

c)

காரன்வாலிஸ்

d)

ராபர்ட் கிளைவ்

4.

.............................................................சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய

வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.

a)

ஒழுங்கு முறைச்சட்டம் (1773)

b)

பிட் இந்தியச் சட்டம் (1784)

c)

பட்டயச் சட்டம் (1813)

d)

பட்டயச் சட்டம் (1833)

5.

இந்தியாவில் முதல் ஆங்கிலேய அரசப் பிரதிநிதி

மற்றும் தலைமை ஆளுநராக இங்கிலாந்து

நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.

a)

காரன்வாலிஸ்

b)

கானிங்

c)

வெல்லெஸ்லி

d)

ஹேஸ்டிங்ஸ்

6.

...................................ஜமீன்தார்களோடு காரன்வா லிஸ்

நிலையான நிலவரித் திட்டத்தைமேற்கொண்டார்.

a)

மைசூர்

b)

பம்பாய்

c)

வங்காளம்

d)

சென்னை

7.

இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்............................

.

a)

காரன்வாலிஸ்

b)

தாமஸ் மன்றோ

c)

ராபர்ட் கிளைவ்

d)

வாரன் ஹேஸ்டிங்ஸ்

8.

தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி ............................

a)

வில்லியம் ஆதம்

b)

வில்லியம் ஸ்லீமேன்

c)

ஜேம்ஸ் ஹாலந்து

d)

ஜான் நிக்கல்சன்

9.

வாரிசு உரிமை இழப்புக் கொள்கை யின்படி

ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல்

மாகாணம் ..............................................

a)

நாக்பூர்

b)

அவத்

c)

ஜான்சி

d)

சதாரா

10.

நிர்பந்தப்ப டுத்தி வலுக்கட்டாயமாக வரி

வசூலிப்பதை ................................நியாயப்படுத்தியது.

a)

இரயத்துவாரி சட்டம்

b)

பிட் இந்தியச் சட்டம்

c)

நிலையான நிலவரித் திட்டம்

d)

சித்திரவதைச் சட்டம்

11.

.................................................இந்தியாவில் ஆங்கில மொழியை

அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும்

அறிமுகப்படுத்தினார்.

a)

காரன்வாலிஸ்

b)

வில்லியம் பெண்டிங்

c)

மெக்காலே

d)

தாமஸ் மன்றோ

12.

சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட

ஆண்டு .........................

a)

1837

b)

1861

c)

1844

d)

1857

13.

என்பவரின் முயற்சியால்

இந்தியாவில் சதி எனும் உடன்கட்டை ஏறும்

முறை ஒழிக்கப்பட்டது.

a)

வாரன் ஹேஸ்டிங்ஸ்

b)

வில்லியம் ஜோன்ஸ்

c)

ராஜா ராம்மோகன் ராய்

d)

தயானந்த சரஸ்வதி

14.

தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை

போக்குவரத்து 1856ல் சென்னை யிலிருந்து

வரை இயக்கப்பட்டது.

a)

வாணியம்பாடி

b)

காட்பாடி

c)

விழுப்புரம்

d)

அரக்கோணம்

15.

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு

a)

கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை

ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால்

தேர்ந்தெடுக்கப்பட்டார்.

b)

துணைப்படை த் திட்டத்தா ல் கிழக்கிந்தியக்

கம்பெனியின் இராணுவ வளங்களும்

செயல்திறனும் குறைந்தன.

c)

வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு

ஊக்கமளிக்கும் வகையில் மதரசா

(இஸ்லாமிய கல்வி நிறுவனம்)

தொடங்கப்பட்டது.

d)

டல்ஹௌசி பிரபு மார்ச் 1835இல் கல்கத்தா

மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.

16.

கூற்று: ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கா ன பணிகளில் முனைப்புடன்ஈடுபட்டது.

காரணம்: 19ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக்கடைசி கால் நூற்றாண்டில் அதிகமானபஞ்சங்கள் நிலவின.

a)

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான

விளக்கம் அல்ல

b)

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான

விளக்கம் அல்ல

c)

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான

விளக்கம் ஆகும்.

d)

கூற்று தவறு; காரணம் சரி

17.

கீழ்க்கண்டவற்றுள், எது தவறாக

பொருத்தப்பட்டுள்ளது?

a)

கங்காதர ராவ் - ஜான்சி

கோலாப்பூர்

b)

ரகுஜி போன்ஸ்லே - நாக்பூர்

c)

ஷாஜி - சதாரா

d)

சிந்தியா - கோலாப்பூர்

18.

பொருத்துக

(i) ஆர்தர் காட்டன் - 1. சமஸ்கிருதகல்லூரி

(ii) வில்லியம் ஸ்லீமேன் - 2. கொள்ளிடம்

(iii) வில்லியம் பெண்டிங் - 3. தக்கர்களைஅடக்குதல்

(iv) காரன்வாலிஸ் - 4. சதி ஒழிப்புச்சட்டம்

a)

4, 1, 2, 3

b)

2, 3, 4, 1

c)

3, 2, ,1, 4

d)

2, 1, 4, 3