wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திரு.முரளிதரன் நாடறிந்த வழக்கறிஞர். அவர் தினமும் இறைவனை வணங்க மறந்தில்லை.

a)

கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

b)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

d)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர்.

2.

தமிழினி கீழே விழுந்த தங்கையைப் பார்த்து _____________ எனச் சிரித்தாள்.

a)

சலசல

b)

கிலுகிலு

c)

திருதிரு

d)

கலகல

3.

மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன் கு ஆராய்ந்து அறிந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.

a)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

b)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர்?

a)

நன்மை தீமை

b)

தாயும் சேயும்

c)

முழு மூச்சு

d)

அல்லும் பகலும்

5.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நன்மை தீமை - நல்லது கெட்டது

b)

அல்லும் பகலும் - காலையும் மாலையும்

c)

தாயும் சேயும் - தாயும் குழைந்தையும்

d)

ஆடல் பாடல் - பாட்டும் நடனமும்

6.

எது படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடி?

a)

உடலினை உறுதிசெய்

b)

ஊண்மிக விரும்பு

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

ஐம்பொறி ஆட்சிகொள்

7.

எது படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன்?

a)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஐயம் புகினும் செய்வன செய்

d)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

8.

எடுத்ததற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

a)

ஓய்தல் ஒழி

b)

உடலினை உறுதிசெய்

c)

ஔடதம் குறை

d)

ஒற்றுமை வலிமையாம்

9.

சிறுகக் சிறுக சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

இளங்கன்று பயம் அறியாது

d)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

10.

மருத்துவமனையில் இருந்த ______________ நலுமுடன் வீடு திரும்பினார்கள்.

a)

நன்மை தீமை

b)

அல்லும் பகலும்

c)

எலும்பும் தோலுமாய்

d)

தாயும் சேயும்

11.

விமலன் தான் கற்றதை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதால் ஆண்டிறுதி சோதனையில் சிறந்த தேர்ச்சி பெற்றான்

a)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முயற்றே உலகு

c)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

12.

கீழ்க்காணும் பொருளுக்கான சரியான இரட்டைகிளவியைத் தெரிவு செய்க.

காய்ந்த இலை ஒன்றோடொன்று உரசும்போது அல்லது மிதிபடும்போது ஏற்படும் ஓசை

a)

தட-தட 

b)

சர-சர

c)

நர-நர

d)

தக-தக

13.

      ராமு ஓய்வு நேரங்களில் புது புது புத்தகங்களை வாங்கி படிப்பான். அவனுக்கு கிடைக்கப்பெற்ற அறிவால், இன்று ‘அமேசொன்’ நிறுவனத்தில் பணி புரிகிறான்.

a)

 தன் கையே தனக்கு உதவி

b)

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

c)

 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்பவன் படாது படுவான்

14.

தன் பேச்சைக் கேலாமல் தனது மகன் கைப்பேசியை வாங்கியதால் திரு கவின் _____________ வென இருந்தார்.

a)

கடு-கடு

b)

மினு-மினு

c)

சர-சர

d)

 கல-கல

15.

கபிலன் தன நண்பனோடு சண்டையை போட்டதால் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பள்ளிக்கூடத்தில் தன சுய மரியாதையை இழந்தான்.

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

c)

வதுப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை

d)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

16.

________________ என்ற பழமொழிக்கு ஏற்ப கடல் கடந்தாவது செல்வம் சேர்க்க வேண்டும்.

a)

குந்தித் தின்றால் குன்றும் மாலும்

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தீட்டின மரத்தில் கூர் பார்ப்பதா?

d)

தீட்டின மரத்தில் கூர் பார்ப்பதா?

17.

இந்திய வாணிக சந்தையில் அம்மா வாங்கி வந்த பாத்திரங்கள் _____________ வென மின்னின.

a)

நற-நற

b)

பள-பள

c)

பல-பல 

d)

தக-தக

18.

அன்று பூலோக பாடத்தில் சவூதி அரேபிய நாட்டின் சீதோசநிலையை கற்ற போது அம்மாணவர்கள் தங்கள் தாய்நாடான மலேசியாவில் மழைக்கு பஞ்சம் இல்லாததை எண்ணி பெரிதும் மகிழ்வுற்றனனர்.

a)

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை

b)

எவ்வ துறைவது உலகம் உலகத்தூடு அவ்வத் துறைவது அறிவு

c)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

d)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

19.

வாழ்க்கையின் அறநெறிகளை தெரிந்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்த ரவி அந்த சொற்பொழிவுக்கு சென்ற பின்னிலிருந்து இவ்வுலகத்தின் முதல் அடிப்படை கடவுள் என்பதை உணர்ந்து வாழ முயன்றான் .

a)

எவ்வ துறைவது உலகம் உலகத்தூடு அவ்வத் துறைவது அறிவு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு

d)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு

20.

செல்வி அரையாண்டு தேர்வில் குறைந்த புள்ளிகள் பெற்றதால் அவளது அம்மா _____________  வென பேசினார்.

a)

கடு-கடு 

b)

நற-நற

c)

விறு-விறு

d)

கல-கல