wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC 10-ஆம் வகுப்பு வரலாறு பாடங்கள் 1 - 5

Total questions: 100

Worksheet time: 50mins

Name
Class
Date
1.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள்?
a)

ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்

b)

ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா

c)

ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

d)

ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி

2.
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளை தோற்கடித்தது?
a)
டெல்வில்லி
b)
ஆரஞ்சு நாடு
c)
அடோவா
d)
அல்ஜியர்ஸ்
3.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எடு?
a)
சீனா
b)
ஜப்பான்
c)
கொரியா
d)
மங்கோலியா
4.
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" என கூறியவர் யார்?
a)
லெனின்
b)
மார்க்ஸ்
c)
சன்யாட் சென்
d)
மா சே துங்
5.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
a)
ஆகாயப் போர் முறை
b)
பதுங்குகுழி போர் முறை
c)
நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை
d)
கடற்படை போர் முறை
6.
எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையை கைக்கொண்டது?
a)
பிரிட்டன்
b)
பிரான்ஸ்
c)
ஜெர்மனி
d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
7.
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a)
பிரிட்டன்
b)
பிரான்ஸ்
c)
ஜெர்மனி
d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
8.
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
a)
ஜெர்மனி
b)
ரஷ்யா
c)
இத்தாலி
d)
பிரான்ஸ்
9.
________ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
a)
1886
b)
1864
c)
1894
d)
1856
10.
1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட _____ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
a)
இலண்டன்
b)
பாரிஸ்
c)
பெர்லின்
d)
பெய்ஜிங்
11.
______ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினைஒப்பந்தம் செய்து கொண்டது.
a)
1905
b)
1914
c)
1902
d)
1912
12.
பால்கனில் ______நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது
a)
அல்பேனியா
b)
பல்கேரியா
c)
ஹெர்சிகோவினா
d)
மாசிடோனியா
13.
டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது
a)
ஜெர்மனி
b)
பிரான்ஸ்
c)
இத்தாலி
d)
ரஷ்யா
14.
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்_____ஆவார்.
a)
லியாட் ஜார்ஜ்
b)
கிளமென்சூ
c)
டிட்டோ
d)
கெரன்ஸ்கி
15.
லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள், சோஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக்கூட்டணிக்கு _____பிரதமராக தலைமை ஏற்றார்.
a)
லியாட் ஜார்ஜ்
b)
கிளமென்சூ
c)
டிட்டோ
d)
கெரன்ஸ்கி
16.
_____ ஆண்டில் லொக்கர்னோஉடன்படிக்கைகையெழுத்திடப்பட்டது
a)
1925
b)
1919
c)
1918
d)
1914
17.

சரியான கூற்றைத்தேர்வுசெய்யவும்

i) முதல் உலகப்போர்வெடித்தபோது இத்தாலி நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.

ii) வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையில் இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.

iii) செவ்ரஸ் உடன்படிக்கைஇத்தாலியுடன் கையெழுத்திடப்பட்டது.

iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி, இஸ்திரியா, தெற்கு டைரோல் போன்றவைகூட இத்தாலிக்கு மறுக்கப்பட்டது.

a)

i), ii) ஆகியன சரி

b)

iii) சரி

c)

iv) சரி

d)

i), iii), iv) ஆகியன சரி

18.

சரியான கூற்றைத்தேர்வுசெய்யவும்

i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிலைக் கைப்பற்றியது.

iv) சூயஸ் கால்வாயைத் தாக்கதுருக்கி மேற்கொண்டமுயற்சி முறியடிக்கப்பட்டது.

a)

i), ii) ஆகியன சரி

b)

i), iii) ஆகியன சரி

c)

iv) சரி

d)

i), ii), iv) ஆகியன சரி

19.

கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களைஉற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக்கைப்பற்றின.

காரணம்: இருநாடுகளும் தங்கள்தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களைஉற்பத்தி செய்தன.

a)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.

b)

கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

c)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

d)

காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

20.

கூற்று:ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.

காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

a)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.

b)

கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

c)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

d)

காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

21.
இத்தாலியில் யாருடன் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது?
a)
இத்தாலி
b)
ரஷ்யா
c)
போப்
d)
ஸ்பெயின்
22.
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரீகம் நிலை குலைந்து போயிற்று?
a)
ஹர்மன் கோர்ட்ஸ்
b)
பிரான்சிஸ்கோ பிசாரோ
c)
தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
d)
முதலாம் பெட்ரோ
23.
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
a)
ஆங்கிலேயர்
b)
ஸ்பானியர்
c)
ரஷ்யர்
d)
பிரெஞ்சுக்காரர்
24.
லத்தின் அமெரிக்காவுடன் "நல்ல அண்டை வீட்டுக்காரன்" எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் யார்?
a)
ரூஸ்வெல்ட்
b)
ட்ரூமன்
c)
உட்ரோ வில்சன்
d)
ஐசனோவர்
25.
உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
a)
ஐரோப்பா
b)
லத்தின் அமெரிக்கா
c)
இந்தியா
d)
சீனா
26.
தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையின் மூளையாக செயல்பட்டவர்.
a)
வெர்வோர்டு
b)
ஸ்மட்ஸ்
c)
ஹெர்சாக்
d)
போதா
27.
தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரிதப்படுத்தியது எது?
a)
அமெரிக்கா அளித்த உதவி
b)
நெப்போலியனின் படையெடுப்புகள்
c)
சைமன் பொலிவரின் பங்கேற்பு
d)
பிரெஞ்சுப் புரட்சி
28.
இலத்தின் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?
a)
தியோடர் ரூஸ்வெல்ட்
b)
ட்ரூமென்
c)
ஐசனோவர்
d)
உட்ரோ வில்சன
29.
சமூக ஜனநாயகக் கட்சியைநிறுவியவர் ___.
a)
ஹோ சி மின்
b)
பிசாரோ
c)
ஹர்மன் கோர்ட்ஸ்
d)
பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
30.
நாசிசகட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் -------
a)
ட்ரூமென்
b)
ஐசனோவர்
c)
ஜோசப் கோயபெல்ஸ்
d)
பிசாரோ
31.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ___.இல் நிறுவப்பட்டது
a)
1924
b)
1925
c)
1926
d)
1927
32.
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல் படை ___ என அழைக்கப்பட்டது
a)
டியூஸ
b)
விடுதலை சங்கம்
c)
கெஸ்டபோ
d)
ஸ்மட்ஸ்-ஹெர்சாக்
33.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் ____ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது
a)
1910
b)
1920
c)
1930
d)
1940
34.
ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ___ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
a)
26
b)
27
c)
28
d)
25
35.
____ ஒரு ராணுவ நாடாகும்
a)
லத்தின் அமெரிக்கா
b)
இந்தியா
c)
சீனா
d)
அஸ்டெக்குகள்
36.
போயர்கள் ____ என்றும் அழைக்கப்பட்டனர்
a)
ஆப்பிரிக்க நேர்கள்
b)
விடுதலை சங்கம்
c)
கெஸ்டபோ
d)
ஸ்மட்ஸ்-ஹெர்சாக்
37.

சரியான கூற்றைத் தேர்வு செய்க

i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவைதெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன்ஈடுபடவைப்பதேஇத்தாலியின்முக்கியக்கடமையாக இருந்தது.

ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தேஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.

iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தைவீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாளில் எற்பட்டது.

iv) ஆப்பிரிக்கதேசிய காங்கிரசின்மீதானத் தடை1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

a)

i), ii) ஆகியவைசரி

b)

iii) சரி

c)

iii), iv) ஆகியவைசரி

d)

i), ii), iii) ஆகியவைசரி

38.

கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.

காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்யவிருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது

a)

கூற்று, காரணம் இரண்டுமே சரி

b)

கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c)

கூற்று, காரணம் ஆகிய இரண்டுமேதவறு

d)

காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.

39.

கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின்காலனிய மாநாடு காலனியாதிக்கசக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின்செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.

காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்

a)

கூற்று, காரணம் இரண்டுமே சரி

b)

கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c)

கூற்று, காரணம் ஆகிய இரண்டுமேதவறு

d)

காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.

40.
இன ஒதுக்கல் கொள்கையை பின்பற்றிய நாடு ……………….
a)
தென் அமெரிக்கா
b)
தென் ஆப்பிரிக்கா
c)
பிரேசில்
d)
எகிப்து
41.
ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
a)
செம்டம்பர் 2, 1945
b)
அக்டோபர் 2, 1945
c)
ஆகஸ்டு 15, 1945
d)
அக்டோபர் 12, 1945
42.
பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப் படுவதில் முன் முயற்சி எடுத்தவர் யார்?
a)
ரூஸ்வெல்ட்
b)
சேம்பெர்லின்
c)
உட்ரோவில்சன்
d)
பால்டுவின்
43.
ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற் படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
a)
க்வாடல் கெனால்போர்
b)
மிட்வே போர்
c)
லெனின் கிரேடு போர்
d)
எல்அலாமெய்ன் போர்
44.
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
a)
கவாசாகி
b)
இன்னோசிமா
c)
ஹிரோஷிமா
d)
நாகசாகி
45.
ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?
a)
ரஷ்யர்கள்
b)
அரேபியர்கள்
c)
துருக்கியர்கள்
d)
யூதர்கள்
46.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
a)
சேம்பர்லின்
b)
வின்ஸ்டன் சர்ச்சில்
c)
லாயிட்ஜார்ஜ்
d)
ஸ்டேன்லி பால்டுவின்
47.
எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
a)
ஜுன் 26, 1942
b)
ஜுன் 26, 1945
c)
ஜனவரி 1, 1942
d)
ஜனவரி 1, 1945
48.
பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
a)
நியூயார்க்
b)
சிகாகோ
c)
லண்டன்
d)
தி ஹேக்
49.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

i) வங்கித்தொழில் யூதர்களின் முக்கியமான வணிக நடவடிக்கையாகும்.

ii) ஹிட்லர் யூதர்களைத் துன்புறுத்தினார்.

iii) சித்ரவதை முகாம்களில் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

iv) தற்போது ஐக்கிய நாடுகள் சபை 129 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது

a)

i), ii) சரி

b)

i), iii) சரி

c)

iii), iv) சரி

d)

i) சரி மற்றும் ii), iii), iv) தவறு

50.

கூற்று: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்அமெரிக்காதனது தனித்திருக்கும் கொள்கையைமாற்றியமைக்க வேண்டும் என்பதைஉணர்ந்தார்.

காரணம்: அவர் 1941இல் கடன் குத்தகைத்திட்டத்தைதொடங்கினார்.

a)

கூற்றும் காரணமும் சரி.

b)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

c)

காரணம் கூற்று ஆகிய இரண்டுமேதவறானவை.

d)

காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை.

51.
இராணுவ நீக்கம் செய்யப்பட்ட ___ பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
a)
பொர்லின்
b)
ரைன்லாந்து
c)
மார்ன்
d)
ஆஸ்திரியா
52.
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் ___என அழைக்கப்பட்டது
a)
ரோம் பாரிஸ் டோக்கியோ ஒப்பந்தம்
b)
மியுனிச் ஒப்பந்தம்
c)
ரோம் பெர்லின் டோக்கியோ ஒப்பந்தம்
d)
லோகார்னோ ஒப்பந்தம்
53.
___ கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்
a)
பால்டுவின்
b)
ரூஸ்வெல்ட்
c)
சேம்பெர்லின்
d)
உட்ரோவில்சன்
54.
1940 இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ___ ஆவார்
a)
பால்டுவின்
b)
ரூஸ்வெல்ட்
c)
சேம்பெர்லின்
d)
உட்ரோவில்சன்
55.
“இவ்வளவு குறைவான நபர்களுக்கு, இவ்வளவு அதிகமானோர் இவ்வளவு அதிகமாக கடமைப்பட்டிருப்பது” என ___ ன் வீரத்திற்கு சர்ச்சில் புகழாரம் சூட்டினார்.
a)
இராயல் நேவல் போர்ஸ்
b)
இராயல் ஆர்மி போர்ஸ்
c)
இராயல் ஏர் போர்ஸ்
d)
எதுவமில்லை
56.
___ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டு பிடிப்பதற்கான ஒரு கருவி.
a)
தொலைநோக்கி
b)
ரேடார்
c)
பைனாக்குலர்
d)
எதுவமில்லை
57.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் குறித்து ___ பிரிவுகளைக் கொண்டிருந்தது
a)
30
b)
32
c)
34
d)
36
58.
பிரிட்டனில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வாக்களிப்பின் மூலம் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர் ___ ஆவார்.
a)
கன்சர்வேட்டிவ் கட்சி
b)
குடியரசு கட்சி
c)
ஜனநாயக கட்சி
d)
தொழிலாளர் கட்சி
59.
யூத இன மக்களுக்காக ……………… எனும் நாடு உருவாக்கப்பட்டது.
a)
ரோம்
b)
பெர்லின்
c)
இஸ்ரேல்
d)
பாரிஸ்
60.
முத்துத் துறைமுக தாக்குதல் நடைபெற்ற ஆண்டு ……………….
a)
1941
b)
1951
c)
1841
d)
1961
61.
வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?
a)
சன் யாட் சென்
b)
ஷியாங் கே ஷேக்
c)
மைக்கேல் பொரோடின்
d)
சூ-யென்-லாய்
62.
எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
a)
உட்ரோ வில்சன்
b)
ட்ரூமென்
c)
தியோடர் ரூஸ்வெல்ட்
d)
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
63.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு போது நடைபெற்றது?
a)
செப்டம்பர் 1959
b)
செப்டம்பர் 1948
c)
செப்டம்பர் 1984
d)
செப்டம்பர் 1949
64.
அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _____ ஆகும்
a)
சீட்டோ
b)
நேட்டோ
c)
சென்டோ
d)
வார்சா ஒப்பந்தம்
65.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
a)
ஹபீஸ் ஆல்-ஆஸாத்
b)
யாசர் அராபத்
c)
நாசர்
d)
சதாம் உசேன்
66.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
a)
1975
b)
1976
c)
1973
d)
1974
67.
அரேபிய கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது?
a)
கெய்ரோ
b)
ஜோர்டான்
c)
லெபனான்
d)
சிரியா
68.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
a)
1979
b)
1989
c)
1990
d)
1991
69.

சரியான வாக்கியம்/வாக்கியங்களைத் தெரிவு செய்க

i) கற்றறிந்தசிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.

ii) கோமிங்டாங்கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.

iii) மஞ்சூரியாமீதும் ஷாண்டுங்மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டைவிதிக்கயுவான் ஷி-கேஉடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.

iv) சோவியத்நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசைஅங்கீகரிக்கமறுத்தது.

a)

i) மற்றும் ii) சரி

b)

ii) மற்றும் iii) சரி

c)

i) மற்றும் iii) சரி

d)

i) மற்றும் iv) சரி

70.

சரியான வாக்கியம்/வாக்கியங்களைத் தெரிவு செய்க

i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளைசோவியத்இராணுவம் விடுதலைசெய்தது.

ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேநேட்டோஉருவாக்கப்பட்டது.

iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத்தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.

iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப்பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனைஎடுத்துக்காட்டவிரும்பியது

a)

ii), iii) மற்றும் iv) சரி

b)

i) மற்றும் ii) சரி

c)

iii) மற்றும் iv) சரி

d)

i), ii) மற்றும் iii) சரி

71.

கூற்று (கூ): அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்டஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.

காரணம் (கா): அமெரிக்கநாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத்தன் செல்வாக்கின் கீழ் சொண்டுவர நினைத்தது.

a)

கூற்றும் காரணமும் இரண்டுமேசரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

b)

கூற்றும் காரணமும் தவறானவை

c)

கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றைத்துல்லியமாக விளக்குகிறது

d)

கூற்று தவறு ஆனால் காரணம் சரி

72.
நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ___ஆவார்.
a)
சன் யாட் சென்
b)
ஷியாங் கே ஷேக்
c)
மைக்கேல் பொரோடின்
d)
சூ-யென்-லாய்
73.
1918 இல் ___ பல்கலை கழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது
a)
காண்டன்
b)
ஹாங்காங்
c)
நான்கிங்
d)
பீகிங்
74.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்___ ஆகும்
a)
நேட்டோ (NATO) ஒப்பந்தம்
b)
சீட்டோ (SEATO ஒப்பந்தம்
c)
வார்சா ஒப்பந்தம்
d)
சென்டோ (CENTO) ஒப்பந்தம்
75.
துருக்கிய அரபுப் பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ___ஆகும்.
a)
நேட்டோ (NATO) ஒப்பந்தம்
b)
சீட்டோ (SEATO ஒப்பந்தம்
c)
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம்
d)
சென்டோ (CENTO) ஒப்பந்தம்
76.
ஜெர்மனி நேட்டோவில் ___ ஆண்டு இணைந்தது.
a)
1945
b)
1955
c)
1956
d)
1975
77.
ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ___ நகரில் அமைந்துள்ளது
a)
மாஸ்டிரிக்ட்
b)
ரோம்
c)
ஸ்ட்ராஸ்பெர்க்
d)
பாரீஸ்
78.
ஐரோப்பிய இணைவைஉறுதி செய்ய7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்டஒப்பந்தம்___ ஆகும்.
a)
மாஸ்டிரிக்ட்
b)
ரோம்
c)
ஸ்ட்ராஸ்பெர்க்
d)
பாரீஸ்
79.
சென்டோ (CENTO) என்பது----------
a)
மணிலா ஒப்பந்தம்
b)
பாக்தாத் ஒப்பந்தம்
c)
வார்சா ஒப்பந்தம்
d)
இவற்றில் எதுவுமில்லை
80.
பனிப்போர் என்ற சொல்லை கையாண்டவர் -------
a)
லெனின்
b)
உட்ரோ வில்சன்
c)
ட்ரூமேன்
d)
மார்ஷல்
81.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
a)
1827
b)
1829
c)
1826
d)
1927
82.
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
a)
ஆரிய சமாஜம்
b)
பிரம்ம சமாஜம்
c)
பிரார்த்தனா சமாஜம்
d)
ஆதி பிரம்ம சமாஜம்
83.
யாருடைய பணியும் இயக்கமும், 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
a)
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
b)
ராஜாராம் மோகன்ராய்
c)
அன்னிபெசன்ட்
d)
ஜோதிபா பூலே
84.
ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்? தாரகமந்திரம்?
a)
பார்சி இயக்கம்
b)
அலிகார் இயக்கம்
c)
ராமகிருஷ்ணா மிஷன்
d)
திராவிட மகாஜன சபை
85.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
a)
பாபா தயாள் தாஸ்
b)
பாபா ராம் சிங்
c)
குரு நானக்
d)
ஜோதிபா பூலே
86.
சுவாமி சாரதானந்தா என்பவர் யார்?
a)
சுவாமி விவேகானந்தரின் சீடர்
b)
இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
c)
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
d)
சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
87.
விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
a)
M.G. ரானடே
b)
தேவேந்திரநாத் தாகூர்
c)
ஜோதிபா பூலே
d)
அய்யன்காளி
88.
சத்தியார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?
a)
தயானந்த சரஸ்வதி
b)
வைகுண்டசாமி
c)
அன்னிபெசன்ட்
d)
சுவாமி சாரதாநந்தா
89.
_______ சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
a)
வள்ளலார் (இராமலிங்க அடிகள்)
b)
ஜோதிபா புலே
c)
நாராயணகுரு
d)
அயோத்திதாசர்
90.
பூனே சர்வஜனிக் சபையை நிறுவியவர் ______
a)
நாராயண குரு
b)
அயோத்திதாசர்
c)
M.G.ரானடே
d)
விவேகானந்தர்
91.
சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர் _________ ஆவார்.
a)
ஸ்வாமி தயானந்த சரஸ்வதி
b)
ஜோதிபா பூலே
c)
நாராயண குரு
d)
பாபா ராம் சிங்
92.
குலாம்கிரி நூலை எழுதியவர் யார்?
a)
வைகுண்ட சாமி
b)
அன்னிபெசன்ட்
c)
ராஜாராம் மோகன்ராய்
d)
ஜோதிபா பூலே
93.
சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் -----------ன் நேர்மறைக் கொள்கைகளை பட்டியலிடுகிறது.
a)
ஜோதிபா புலே
b)
நாராயண குரு
c)
சுவாமி தயானந்த சரஸ்வதி
d)
விவேகானந்தர்
94.
ராமகிருஷ்ணா மிஷன் ஆல் _____ நிறுவப்பட்டது.
a)
விவேகானந்தர்
b)
அம்பேத்கர்
c)
அலிகார் இயக்கம்
d)
அன்னிபெசன்ட்
95.
_____ அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்.
a)
திராவிட மகாஜன சபை
b)
சிங் சபா
c)
அலிகார் இயக்கம்
d)
பார்சி இயக்கம்
96.
கேரளாவின் சாதிய கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வந்தவர்.
a)
நாராயண குரு
b)
வள்ளலார்
c)
அயோத்திதாசர்
d)
ஜோதிபா புலே
97.
"ஒரு பைசா தமிழன்" பத்திரிக்கையை துவக்கியவர்.
a)
அன்னிபெசன்ட்
b)
ஜோதிபா புலே
c)
அயோத்திதாசர்
d)
தயானந்த சரஸ்வதி
98.

சரியான கூற்றைத்தேர்ந்தெடுக்கவும்

i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் சமபந்தி களையும் சாதி கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபா பூலேஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது

a)

i) சரி

b)

ii) சரி

c)

i),ii) ஆகியன சரி

d)

iii), iv) ஆகியன சரி

99.

சரியான கூற்றைத்தேர்ந்தெடுக்கவும்

(i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி உடல்நலம் பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

(ii) பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.

(iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.

(iv) ராமகிருஷ்ணர் வங்கப் பிரிவினையை எதிர்த்தார்.

a)

i) சரி

b)

i) மற்றும் ii) சரி

c)

iii) சரி

d)

iv) சரி

100.

கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோர் விடுதிகளையும் விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம் : ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

a)

கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாக இல்லை.

b)

கூற்று சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாக உள்ளது.

c)

இரண்டுமே தவறு.

d)

காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.