wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC குடிமையியல் by MMA

Total questions: 100

Worksheet time: 50mins

Name
Class
Date
1.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது
a)
1946ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள்
b)
1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள்
c)
1946ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள்
d)
1946ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்
2.
இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத்தலைவர்
a)
Dr.B.R. அம்பேத்கர்
b)
Dr.சச்சிதானந்த சின்கா
c)
Dr.இராஜேந்திர பிரசாத்
d)
Dr.இராதாகிருஷ்ணன்
3.
அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது
a)
பொருளாதாரம்
b)
குடியுரிமை
c)
முகவுரை
d)
சமதர்மம்
4.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
a)
ஒரு முறை
b)
இரு முறை
c)
மூன்று முறை
d)
எப்பொழுதும் இல்லை
5.
குடியுரிமைச்சட்டம் இயற்றப்பட்டது
a)
1953
b)
1955
c)
1957
d)
1959
6.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
a)
சமத்துவ உரிமை
b)
சுரண்டலுக்கெதிரான உரிமை
c)
சொத்துரிமை
d)
கல்வி மற்றும் கலாச்சார உரிமை
7.
இந்தியாவின் மகாசாசனம் என்று அழைக்கப்படும் இந்திய அரசியலமைப்பின் பகுதி எது?
a)
4
b)
3
c)
5
d)
2
8.
எந்தப் பிரிவின் கீழ் பேச்சுரிமை உள்ளது?
a)
பிரிவு 17
b)
பிரிவு 19
c)
பிரிவு 20
d)
பிரிவு 21
9.
சொத்துரிமை எந்தப் பிரிவின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது?
a)
சட்டப்பிரிவு 352
b)
சட்டப்பிரிவு 356
c)
சட்டப்பிரிவு 300
d)
சட்டப்பிரிவு 368
10.
நமது அடிப்படை கடமைகளை யாரிடமிருந்து பெற்றோம்?
a)
அமெரிக்க அரசியலமைப்பு
b)
கனடா அரசியலமைப்பு
c)
ரஷ்யா அரசியலமைப்பு
d)
ஐரிஷ் அரசியலமைப்பு
11.
Dr.B.R.அம்பேத்கரின் கூற்றுப்படி இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று சொல்லப்படுவது
a)
சட்டப்பிரிவு 26
b)
சட்டப்பிரிவு 32
c)
சட்டப்பிரிவு 30
d)
சட்டப்பிரிவு36
12.
86வது சட்டத் திருத்தத்தின்படி பிரிவு 21A வின் கீழ் அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது
a)
வேலைவாய்ப்பு
b)
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
c)
தீண்டாமை ஒழித்தல்
d)
தொடக்கக்கல்வி
13.
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பது
a)
ஆவணக்கேட்பு பேராணை
b)
தடையுறுத்தும் நீதிப்பேராணை
c)
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
d)
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
14.
அலுவலகமொழி சட்டம் இயற்றப்பட்ட வருடம்
a)
1963
b)
1964
c)
1965
d)
1966
15.
எத்தனை பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிப்பிடப்பட்டுள்ளன?
a)
மூன்று
b)
ஆறு
c)
எட்டு
d)
ஐந்து
16.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு
a)
நவம்பர் 26ஆம் நாள் 1949
b)
அக்டோபர் 26ஆம் நாள் 1949
c)
செப்டம்பர் 16ஆம் நாள் 1949
d)
ஆகஸ்டு 16ஆம் நாள் 1949
17.
ஒரு வெளிநாட்டவர் கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
a)
வம்சாவளி
b)
பதிவு
c)
இயல்புரிமை
d)
மேற்கண்ட அனைத்தும்
18.
சிவிஸ் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்
a)
அமெண்ட்மெண்ட்
b)
சுதந்திரம்
c)
இறையாண்மை
d)
சிட்டிசன்
19.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணத்தை வெளியிட்டவர்
a)
இரண்டாம் ஜான்
b)
நான்காம் ஜான்
c)
முதலாம் ஜான்
d)
ஐந்தாம் ஜான்
20.
சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி எதைக் குறித்து ஆராய பரிந்துரை செய்யப்பட்டது
a)
மத்திய-மாநில உறவுகள்
b)
அடிப்படை கடமைகள்
c)
அடிப்படை உரிமைகள்
d)
நிதி உறவுகள்
21.
இந்திய அரசியலமைப்பின் பகுதி ஐந்தில் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் எதைப் பற்றி குறிப்பிடுகிறது?
a)
மக்களவை
b)
மாநிலங்களவை
c)
நிர்வாகம்
d)
நீதித்துறை
22.
மத்திய அரசின் நிர்வாகத் தலைவர்
a)
பிரதமர்
b)
குடியரசுத் தலைவர்
c)
சபாநாயகர்
d)
துணைக் குடியரசுத் தலைவர்
23.
மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம்
a)
சட்ட மன்றம்
b)
நீதித்துறை
c)
மேலவை
d)
நிர்வாகம்
24.
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
a)
மூன்று ஆண்டுகள்
b)
ஆறு ஆண்டுகள்
c)
ஐந்து ஆண்டுகள்
d)
நான்கு ஆண்டுகள்
25.
குடியரசுத் தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
a)
மேலவை
b)
லோக்சபா
c)
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
d)
வாக்காளர் குழுமம்
26.
தற்போதைய குடியரசுத் தலைவர்
a)
திரு. பிரனாப் முகர்ஜி
b)
திரு. ராம் நாத் கோவிந்த்
c)
திரு.கே.ஆர்.நாராயணன்
d)
திருமதி பிரதீபா பாட்டீல்
27.
மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?
a)
1
b)
2
c)
12
d)
3
28.
எந்த சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை குடியரசுத் தலைவர், மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதபோது நியமிக்கிறார்?
a)
பிற்படுத்தப்பட்ட பிரிவினர்
b)
பழங்குடியினர்
c)
சிறுபான்மையினர்
d)
ஆங்கிலோ இந்தியர்
29.
ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிப்பு வழங்கவும் எந்தப் பிரிவு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது?
a)
71-வது சட்டப்பிரிவு
b)
72-வது சட்டப்பிரிவு
c)
73-வது சட்டப்பிரிவு
d)
74-வது சட்டப்பிரிவு
30.
அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள்
a)
பீகார் மற்றும் பஞ்சாப்
b)
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
c)
கேரளா மற்றும் குஜராத்
d)
பஞ்சாப் மற்றும் கேரளா
31.
மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
a)
மும்பை
b)
புதுதில்லி
c)
கல்கத்தா
d)
சென்னை
32.
1969ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
a)
திரு M.ஹிதயதுல்லா
b)
திரு N.V.ரமணா
c)
திருமதி R.பானுமதி
d)
திரு L.நாகேஷ்வர ராவ்
33.
இந்திய உச்ச நீதிமன்றம் துவங்கப்பட்ட நாள் மற்றும் வருடம்
a)
1949 ஜனவரி 24
b)
1949 ஜனவரி 28
c)
1950 ஜனவரி 24
d)
1950 ஜனவரி 28
34.
தற்சமயம் உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளை கொண்டுள்ளது?
a)
26
b)
28
c)
25
d)
27
35.
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்
a)
520
b)
530
c)
552
d)
545
36.
கட்சித் தாவல் தடைச் சட்டம் இயற்றப்பட்டது
a)
2001ஆம் ஆண்டு
b)
1985ஆம் ஆண்டு
c)
1995ஆம் ஆண்டு
d)
2005ஆம் ஆண்டு
37.
பிரதம அமைச்சரை நியமிப்பவர்
a)
உச்ச நீதிமன்ற நீதிபதி
b)
தலைமை தேர்தல் ஆணையம்
c)
குடியரசுத் தலைவர்
d)
ஆளுநர்
38.
இந்திய அரசின் உயர்ந்த சட்ட அதிகாரி
a)
தலைமை வழக்குரைஞர்
b)
பிரதம அமைச்சர்
c)
சபாநாயகர்
d)
இராசாங்க அமைச்சர்
39.
நிதி மசோதாவை யாரிடம் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்
a)
மக்களவையில்
b)
மாநிலங்களவையில்
c)
பிரதமரிடம்
d)
குடியரசுத் தலைவரிடம்
40.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர்
a)
பிப்ரவரி முதல் மே வரை
b)
ஜூலை முதல் செப்டம்பர் வரை
c)
மார்ச் முதல் மே வரை
d)
நவம்பர் மற்றும் டிசம்பர்
41.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள மாநிலம்
a)
உத்திரப்பிரதேசம்
b)
மேற்கு வங்காளம்
c)
குஜராத்
d)
ஜம்மு காஷ்மீர்
42.
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர்
a)
முதலமைச்சர்
b)
ஆளுநர்
c)
குடியரசுத்தலைவர்
d)
உயர் நீதிமன்ற நீதிபதி
43.
ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு
a)
157
b)
154
c)
163
d)
169
44.
தமிழ்நாடு சட்ட மேலவை நீக்கப்பட்ட ஆண்டு
a)
1962
b)
1956
c)
1986
d)
1996
45.
ஆளுநராக பதவி ஏற்பவர் எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்?
a)
30
b)
45
c)
35
d)
40
46.
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவரை நியமனம் செய்பவர்
a)
ஆளுநர்
b)
குடியரசுத் தலைவர்
c)
அமைச்சரவைக் குழு
d)
மாநில தேர்தல் ஆணையர்
47.
ஒரு மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது நேரடியாக ஆட்சி செய்பவர்
a)
அமைச்சர்
b)
ஆளுநர்
c)
பிரதமர்
d)
குடியரசுத் தலைவர்
48.
1977-ல் முதலமைச்சராக இருந்தவர்
a)
திரு.M.கருணாநிதி
b)
திரு.M.பக்தவத்சலம்
c)
திரு.M.G.இராமச்சந்திரன்
d)
திருமதி ஜானகி இராமச்சந்திரன்
49.
மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர்
a)
ஆளுநர்
b)
முதலமைச்சர்
c)
பிரதமர்
d)
சபாநாயகர்
50.
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் அமைச்சர்களின் விழுக்காடு
a)
13
b)
17
c)
12
d)
15
51.
சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதைப்பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது?
a)
மக்கள் தொகையை
b)
பகுதியை
c)
கல்வியை
d)
பொருளாதாரத்தை
52.
இரண்டு சட்ட மன்றம் உள்ள மாநிலங்கள்
a)
13
b)
11
c)
9
d)
7
53.
விதான் பரிஷத் என்பது
a)
அமைச்சரவை
b)
சட்ட மேலவை
c)
சட்ட மன்ற கீழவை
d)
உயர் நீதிமன்றம்
54.
உலகிலேயே இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம்
a)
கொல்கத்தா உயர் நீதிமன்றம்
b)
மும்பை உயர் நீதிமன்றம்
c)
சென்னை உயர் நீதிமன்றம்
d)
லண்டன் உயர் நீதிமன்றம்
55.
சென்னை உயர் நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
a)
1762
b)
1662
c)
1862
d)
1872
56.
தற்போது உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை
a)
25
b)
28
c)
31
d)
33
57.
உயர் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றி கூறும் சட்டப்பிரிவு
a)
224 மற்றும் 225
b)
226 மற்றும் 227
c)
225 மற்றும் 226
d)
223 மற்றும் 224
58.
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்ட மன்ற கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வளவு மிகாமல் இருக்க வேண்டும்?
a)
3-ல் 1 பங்கு
b)
4-ல் 3 பங்கு
c)
2-ல் 1 பங்கு
d)
3-ல் 2 பங்கு
59.
தமிழ் நாட்டின் முதல் முதலமைச்சர்
a)
திரு.K.காமராஜர்
b)
திரு.O.P.இராமசாமி
c)
திரு.C.N.அண்ணாதுரை
d)
திரு.P.S.குமாரசாமி ராஜா
60.
மாநில சட்டமன்றத்திற்கு கூட்டாகப் பொறுப்பானது
a)
முதலமைச்சர்
b)
ஆளுநர்
c)
நீதிமன்றம்
d)
அமைச்சரவை
61.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
a)
பாதுகாப்பு அமைச்சர்
b)
பிரதம அமைச்சர்
c)
வெளிவிவகாரங்கள் அமைச்சர்
d)
உள்துறை அமைச்சர்
62.
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
a)
இந்தியா மற்றும் நேபாளம்
b)
இந்தியா மற்றும் சீனா
c)
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
d)
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
63.
இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
a)
சட்டப்பிரிவு 51
b)
சட்டப்பிரிவு 50
c)
சட்டப்பிரிவு 52
d)
சட்டப்பிரிவு 53
64.
இன ஒதுக்கல் கொள்கை என்பது
a)
ஒரு சர்வதேச சங்கம்
b)
இராஜதந்திரம்
c)
எதுவுமில்லை
d)
ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
65.
1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது
a)
வியாபாரம் மற்றும் வணிகம்
b)
சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
c)
கலாச்சார பரிமாற்றங்கள்
d)
ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
66.
நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
a)
உலக ஒத்துழைப்பு
b)
உலக அமைதி
c)
காலனித்துவம்
d)
இனச் சமத்துவம்
67.
கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
a)
யுகோஸ்லாவியா
b)
பாகிஸ்தான்
c)
எகிப்து
d)
இந்தோனேசியா
68.
பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி
a)
ராஜதந்திரம்
b)
சுகாதாரம்
c)
உள்நாட்டு விவகாரங்கள்
d)
சமூக நலம்
69.
அணிசேராமை என்பதன் பொருள்
a)
காலனித்துவம்
b)
ராணுவமயமின்மை
c)
மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
d)
தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
70.
ராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது
a)
ஆற்றல் பாதுகாப்பு
b)
நீர் பாதுகாப்பு
c)
தொற்று நோய்கள்
d)
இவை அனைத்தும்
71.
இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ------- .
a)
அகமதாகாத்
b)
திருவனந்தபுரம்
c)
பொக்ரான்
d)
கல்பாக்கம்
72.
---------- என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
a)
இராஜதந்திரம்
b)
ஒரு சர்வதேச சங்கம்
c)
ஆற்றல் பாதுகாப்பு
d)
எதுவுமில்லை
73.
இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை -------- .
a)
காலனித்துவம்
b)
காலனித்துவம்
c)
ஆற்றல் பாதுகாப்பு
d)
அணிசேராமை
74.

பின்வருவனவற்றைக் கால வரிசைப் படுத்துக

(i) பஞ்சசீலம்

(ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை

(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்

(iv) முதல் அணுவெடிப்புச் சோதனை

a)

(i), (iii), (iv), (ii)

b)

(i), (ii), (iii), (iv)

c)

(i), (ii), (iv), (iii)

d)

(i), (iii), (ii), (iv)

75.

பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?

(i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

(ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்

(iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

(iv) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

a)

(i) மற்றும் (ii)

b)

(iii) மற்றும் (iv)

c)

(ii) மட்டும்

d)

(iv) மட்டும்

76.

கூற்று: 1971இல் இந்தோ - சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.

காரணம்: இது 1962இன் பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது

a)

கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

b)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

77.

கூற்று: இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.

காரணம்: உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

a)

கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

b)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

78.
பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது
a)
சரி
b)
தவறு
c)
.
d)
.
79.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
a)
சரி
b)
தவறு
c)
.
d)
.
80.
இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது
a)
சரி
b)
தவறு
c)
.
d)
.
81.
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?
a)
பர்மா - இந்தியா
b)
இந்தியா - நேபாளம்
c)
இந்தியா – சீனா
d)
இந்தியா - பூடான்
82.

இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

1 ஜி 20

2 ஏசியான் (ASEAN)

3 சார்க் (SAARC)

4 பிரிக்ஸ் (BRICS)

a)

4 மட்டும்

b)

2 மட்டும்

c)

2, 4 மற்றும் 1

d)

1, 2 மற்றும் 3

83.
ஒபெக் (OPEC) என்பது
a)
சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
b)
ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
c)
ஒரு சர்வதேச நிறுவனம்
d)
எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
84.
இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
a)
வங்காளதேசம்
b)
மியான்மர்
c)
ஆப்கானிஸ்தான்
d)
சீனா
85.

பின்வருவனவற்றைப் பொருத்துக

i) சல்மா அணை - 1. வங்காளதேசம்

ii) பராக்கா ஒப்பந்தம் - 2. நேபாளம்

iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் - 3. ஆப்கானிஸ்தான்

iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் - 4. பூடான்

a)

3 1 4 2

b)

3 1 2 4

c)

3 4 1 2

d)

4 3 2 1

86.
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
a)
5
b)
6
c)
7
d)
8
87.
எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும் ?
a)
இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
b)
மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
c)
மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
d)
இலங்கை மற்றும் மாலத்தீவு
88.
எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
a)
மேகாலயா
b)
அருணாச்சலப்பிரதேசம்
c)
மிசோரம்
d)
மேற்கு வங்காளம்
89.
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
a)
2
b)
3
c)
4
d)
5
90.
புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
a)
மவுண்ட்பேட்டன் பிரபு
b)
சர் சிரில் ராட்க்ளிஃப்
c)
கிளமன்ட் அட்லி
d)
மேற்கூறிய ஒருவருமில்லை
91.
____________ இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும்
a)
வங்காளதேசம்
b)
மியான்மர்
c)
பூடான்
d)
சீனா
92.
இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ____________ இருக்கிறது
a)
மியான்மர்
b)
பூடான்
c)
ஆப்கானிஸ்தான்
d)
சீனா
93.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ____________ ஆகும்.
a)
நேபாளம்
b)
மியான்மர்
c)
பூடான்
d)
வங்காளதேசம்
94.
இந்தியாவிற்குச் சொந்தமான ____________ என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது
a)
ஆசாத் காஷ்மீர்
b)
டீன்பிகா
c)
ரோத்தங்பாஸ்
d)
மணிக்கரன்
95.
இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு ____________ ஆகும்
a)
வங்காளதேசம்
b)
மியான்மர்
c)
பூடான்
d)
நேபாளம்
96.
____________________ ஆல் இந்தியாவும் இலங்கையும் பிரிக்கப்படுகின்றன.
a)
கட்ச் வளைகுடா
b)
காம்பே வளைகுடா
c)
சிலிகா ஏரி
d)
பாக் நீர் சந்தி
97.

இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?

1. சாலை

2. ரயில் வழி

3. கப்பல்

4. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

a)

1, 2 மற்றும் 3

b)

1, 3 மற்றும் 4

c)

2, 3 மற்றும் 4

d)

1, 2, 3 மற்றும் 4

98.

கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கியுள்ளன.

காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

a)

கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

b)

கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

c)

கூற்று தவறு; காரணம் சரி

d)

கூற்று, காரணம் இரண்டும் தவறு

99.

பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?

1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ’தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.

2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.

3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.

4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

a)

1, 2 மற்றும் 3

b)

2, 3 மற்றும் 4

c)

1, 3 மற்றும் 4

d)

1, 2 மற்றும் 4

100.

கூற்று: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.

காரணம்: தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

a)

கூற்றுசரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று தவறு. காரணம் சரி.

c)

கூற்று காரணம் இரண்டும் தவறு

d)

கூற்று காரணம் இரண்டும் சரி .