Font size
WorksheetsSSLC வரலாறு 6 - 10 by MMA
Total questions: 100
Worksheet time: 50mins
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவு களில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
(iii) மற்றும் (iv) மட்டும் சரி
(i) மற்றும் (iv) மட்டும் சரி
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையா ர்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
(i) மற்றும் (ii) ஆகியவை சரி
(ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
(ii) மற்றும் (iii) ஆகியவை சரி
(i) மற்றும் (iv) ஆகியவை சரி
கூற்று: பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
கூற்று தவறானது காரணம் சரியானது
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
கூற்று: புதிய இராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலிலான இலட்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது.
காரணம்: தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
கூற்று தவறானது காரணம் சரியானது
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) மீர் ஜாபரிடமிருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 - 1832 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்
(iv) 1879 ஆம் ஆண்டில் சாந்தவர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறை படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
(i), (ii) மற்றும் (iii) சரியானவை
(i) மற்றும் (iii)சரியானவை
(iii) மற்றும் ( iv) சரியானவை
(i) மற்றும் (iv) சரியானவை
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்பு களில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாக கொண்டு வங்கபிரிவினை நடந்தது.
(i) மற்றும் (iii) சரியானவை
(i) ,(iii) மற்றும் (iv) சரியானவை
(ii) மற்றும் (iii) சரியானவை
(iii) மற்றும் (iv) சரியானவை
கூற்று : இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இன்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையை கையாண்டனர்
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
கூற்று தவறு காரணம் சரி
கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
கூற்று தவறு காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) இந்திய பொதுவுடைமைக் கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
(ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்
(iii) ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.
(iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்ம வாதிகள் பங்கேற்கவில்லை.
(i) மற்றும் (ii) சரியானது
(ii) மற்றும் (iii) சரியானது
(iv) சரியானது
(i) , (ii) மற்றும் (iii) சரியானது
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) இந்துஸ்தான் குடியரசு ராணுவம் 1924 ஆம் ஆண்டு கான்பூரில் உருவானது.
(ii) காகோரி சதித்திட்ட வழக்கில் ராம் பிரசாத் பிஸ்மில் விசாரிக்கப்பட்டார்.
(iii) இந்துஸ்தான் சமதர்ம குடியரசு அமைப்பு சூர்யா சென் என்பவரால் உருவாக்கப்பட்டது.
(iv) சிட்டகாங் ஆயுதக்கிடங்குத் தாக்குதல் B.K தத்தால் நடத்தப்பட்டது
(i) மற்றும் (ii) சரியானது
(i) மற்றும் (iii) சரியானது
(iii) சரியானது
(iii) மற்றும் (iv) சரியானது
கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டது.
காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழி செய்தது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனியாதிக்க அரசு போரில் பங்கேற்றது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் இல்லை.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது
(ii) தமிழில் வெளிவந்த தேசிய பருவ இதழான சுதேசமித்திரன் 1891ல் தொடங்கப்பட்டது
(iii) குடிமைப் பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
(iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதி அவர்
(i) மற்றும் (ii) ஆகியவை சரி
(iii) சரி
(iv) சரி
அனைத்தும் சரி.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை
(ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹாசனுடன் ராஜாஜி நெருக்கமாக பணியாற்றினார்
(iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
(iv) தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள் முன்பாக மறியல் செய்யப்படவில்லை.
(i) மற்றும் (ii) ஆகியவை சரி
(i) மற்றும் (iii) ஆகியவை சரி
(ii) சரி
(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
கூற்று : நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.
காரணம் : தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி விடும் என நீதிக்கட்சி அஞ்சியது.
காரணமும் கூற்றும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு ஆன சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
கூற்று : பிராமணர் அல்லாதவர்க்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற பிரச்சினையை பெரியார் எழுப்பினார்.
காரணம் : காங்கிரசின் முதல் அமைச்சரவையினா போது ராஜாஜி விற்பனை வரியை ரத்துச் செய்தார்.
காரணம் கூற்று ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812 ல் வெளியிடப்பட்டது
(ii) பனை ஓலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலை அடிகள் சேகரித்து தொகுத்தார்.
(iii) ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு. வி. கல்யாணசுந்தரம் தொழிற்சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.
(i), (ii) ஆகியன சரி
(i), (iii) ஆகியன சரி
(iv) சரி
(ii), (iii) ஆகியன சரி
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
(i) இந்திய பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்ததில் மார்கரட் கசினும் ஒருவராவார்
(ii) பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தானே உருவாக்கிய சிந்தனையாளர்கள் பகுத்தறிவாளர்கள் அமைப்புகளின் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் செலவழித்தார்
(iii) சிங்காரவேலர் இந்து மகாசபையின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
(iv) தென்னிந்தியாவிலுள்ள சாதிமுறை வடக்கே இருந்து வந்த பிராமணர்களின் வருகையோடு தொடர்புடையது என பெரியார் உறுதிபடக் கூறினார்.
(iii) ஆகியவை (iv) சரி
(ii), (iii), (iv) ஆகியவை சரி
(i), (ii), (iv) ஆகியவை சரி
(ii), (iii) ஆகியவை சரி
கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தை புறக்கணித்தது.
காரணம் கூற்று ஆகியவை சரி
கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல
காரணம் கூற்று இரண்டுமே தவறு
ஊற்று சரியானால் காரணத்துடன் பொருந்தவில்லை
கூற்று : முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் போருக்குப் பின்னர், பிரதிநிதித்துவ நிறுவனங்களை அறிமுகம் செய்வது குறித்துப் பரிசீலனை செய்து கொண்டிருந்தது.
காரணம் : 1920 இல் இரட்டை ஆட்சியானது ஒரு அரசு முறையாக மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கூற்று சரி, ஆனால் காரணம் சரியானது அல்ல.
கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
கூற்று, காரணம் இரண்டுமே சரி.
கூற்று தவறு, அது காரணத்துடன் பொருந்தவில்லை.
