Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர்கள் இணைமொழிகள்
Total questions: 18
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வெளி நாட்டுக்குச் செல்லும் முன் அந்த நாட்டின் ____ தெரிந்துகொண்டு நம் பயண ஏற்பாட்டைச் செய்வது அறிவார்ந்த செயல் ஆகும்.
a)
ஆற அமர
b)
சட்டதிட்டங்களை
c)
அவசரக் குடுக்கையாக
d)
அறக்க பறக்க
2.
சிண்டா என்னும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு கழகம் உதவித் தேவைப்படும் ____ உதவுவதுடன் அவர்களுக்கு விழாக்காலங்களின் போதும் பற்றுச்சீட்டுகளையும் பரிசிப்பொருட்களையும் வழங்குகின்றது.
a)
ஏழை எளியவர்க்கு
b)
ஈவிரக்கம்
c)
அறக்க பறக்க
d)
அவசரக்குடுக்கையாக
3.
போகிப் பண்டிக்கையின் வீட்டில் உள்ள ____ பொருட்களையெல்லாம் வீசி எறிய வேண்டும் என்று அம்மா கூறினார்.
a)
கரைத்து குடித்து
b)
அவசரக் குடுக்கை
c)
அறக்க பறக்க
d)
ஓட்டை உடைசல்
4.
பணிப்பெண் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டிலிருந்த விலையுர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ____
a)
கம்பி நீட்டினாள்
b)
ஓட்டம் பிடித்தாள்
c)
இனிக்க பேசினாள்
d)
ஒற்றைக் காலில் நிற்றாள்
5.
ராமன் _____ என்பதால் அவனின் அம்மா அவனிடம் தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதில்லை.
a)
ஓட்டைக்கை
b)
ஓட்டைவாய்
c)
அவசரக்குடுக்கை
d)
அடக்கவொடுக்கம்
6.
ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடத்தை முடிக்காத மாறன் அவர் வருவதைப் பார்த்தவுடன் அவர் கண்ணில் படாமல் அங்கிருந்து _______.
a)
கம்பி நீட்டினான்
b)
ஓட்டம் பிடித்தான்
c)
இனிக்கப் பேசினான்
d)
கரைத்துக் குடித்தான்
7.
என் அக்கா சதாரணநிலைத் தேர்வு எழுதிவுடன் என் அம்மா அவரின் மேற்படிப்பைத் தொடர்வதற்கான முடிவை ____ எடுக்க சொன்னார்.
a)
இனிக்க பேசி
b)
அவசரக்குடுக்கையாக
c)
அறக்க பறக்க
d)
ஆற அமர
8.
மாலா பேச்சுப் போட்டியில் சிறந்த பேச்சாளர் என்று அறிவித்ததும் அதை கேட்டு ஒரு நிமிடம் அது உண்மையா அல்லது பொய்யா என்று அவள் ____ நின்றாள்.
a)
ஆடாமல் அசையாமல்
b)
ஓற்றைக் காலில்
c)
அவசரக்குடுக்கையாக
d)
ஓட்டம் பிடித்து
9.
பாலித் தீவில் தெருவில் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் மீது பலர் __ கொண்டு அவற்றிற்கு உணவளித்து வருகின்றனர்.
a)
ஈவிரக்கமின்றி
b)
ஈவிரக்கம்
c)
இனிக்க பேசி
d)
ஆற அமர
10.
கடைத்தொகுதியில் பார்த்த பொம்மை வேண்டும் என்று _______ மகனை தாய் சமாதனப்படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.
a)
அறக்க பறக்க
b)
அடக்கவடுக்கமாக
c)
கண்டதையும் கேட்டதையும்
d)
ஒற்றைக் காலில் நின்ற
11.
கொடுக்கப்படும் வேலைகளை உடனுக்குடன் செய்யாமல் ______ செய்வதால் வாழ்க்கையில் பல விசயங்களை நாம் இழந்துவிடுகிறோம்.
a)
ஆறப்போட்டு
b)
கரைத்துக்குடித்து
c)
ஆற அமர
d)
அறக்க பறக்க
12.
கண்ணன் எப்போதும் கேட்கப்படும் வினாக்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ____ பதில் அளிக்கும் குணம் படைத்தவன்.
a)
ஆறஅமர
b)
அவசரக்குடுக்கை
c)
அவசரக்குடுக்கையாக
d)
கண்மூடித்தனமாக
13.
பாரதி திருக்குறளை _____ நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு திணறாமல் உடனுக்குடன் பதில் அளிக்க முடிந்தது.
a)
ஓட்டம் பிடித்ததால்
b)
ஒற்றைக் காலில் நின்றதால்
c)
கரைத்துக் குடித்திருந்ததால்
d)
ஆறப்போட்டதால்
14.
கல்விகேள்விகளில் சிறந்தவர் என்று பாரட்டப்படும் திரு. குமரன் வாழ்வில் வெற்றி பெற அவர் ________ நடந்துகொண்டதே காரணமாகும்.
a)
அடக்கவொடுக்கமாக
b)
ஆற அமர
c)
அறக்கபறக்க
d)
அவசரக்குடுக்கையாக
15.
ஆண்டிறுதித் தேர்வில் ராமன் சிறப்பு தேர்ச்சி பெற்றதால் பள்ளியிலேயே சிறந்த மாணவன் என்று பாராட்டப்பட்டதை நினைத்து அவனது பெற்றோர் ______.
a)
உச்சி குளிர்ந்தனர்
b)
ஒற்றைக் காலில் நின்றனர்
c)
கரைத்துக் குடித்தனர்
d)
இனிக்கப் பேசினர்
16.
வீட்டில் தனியாக இருந்த முதியோரிடம் ____ தன்னிடமுள்ள பொருட்களை விற்க முயன்ற இளையரின் எண்ணம் ஈடேறவில்லை.
a)
அடக்கவொடுக்கம்
b)
ஆற அமர
c)
ஒற்றைக் காலில் நின்று
d)
இனிக்க பேசி
17.
இரவு முழுவதும் கணினி விளையாட்டை விளையாடிதால் காலையில் கால தாமதமாக எழுந்த மாறன் பள்ளிக்கு ________ ஓடினான்.
a)
ஆறஅமர
b)
அறக்க பறக்க
c)
அவசரக்குடுக்கையாக
d)
கம்பி நீட்டினான்
18.
விமலா _______ என்பதால் அவளிடம் எந்த ரகசியத்தையும் கூற அவள் தோழிகள் முன் வருவதில்லை.
a)
அடக்கவொடுக்கம்
b)
அவரசக் குடுக்கை
c)
ஓட்டைக் கை
d)
ஓட்டை வாய்
Reset
