wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பிரச்சனைக் கணக்கு

Total questions: 15

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

ஒரு கூடையில் 100 சிவப்பு நிற கொடிகளும், 300 மஞ்சள் நிற கொடிகளும் 50 நீல நிற கொடிகளும் இருந்தன. அக்கூடையிலுள்ள மொத்த கொடிகள் எத்தனை?

a)

450

b)

250

c)

150

d)

300

2.

சிவாவிடம் 456 370 கோலிகள் இருந்தன. ரவியிடம் சிவாவை விட 9 640 கோலிகள் குறைவாக இருந்தன. இருவரிடமும் உள்ள கோலிகளின் வேறுபாடு என்ன?

a)

446 730

b)

323 614

c)

9 640

d)

10 840

3.

கிளை நிறுவனம் ஒன்று 6 550 அன்னாசிக் கலன்களை உற்பத்தி செய்தது. முதன்மை நிறுவனமும், கிளை நிறுவனத்தைப் போல 4 மடங்கு அன்னாசிக் கலன்களை உற்பத்தி செய்தது. முதன்மை நிறுவனம் உற்பத்தி செய்த அன்னாசிக் கலன்கள் எத்தனை?

a)

26 150

b)

26 170

c)

26 190

d)

26 200

4.

'எ' தொழிற்சாலை 2019-ஆம் ஆண்டில் 0.07 மில்லியன் மகிழுந்துகளை உருவாக்கியது. அதே தொழிற்சாலை 2020-ஆம் ஆண்டில் 0.025 மில்லியன் வாகனங்கள் வெளியாக்கின.


அவ்விரு ஆண்டுகளில் வெளியாக்கப்பட்ட வாகனங்களைக் கணக்கிடுக.

a)

70 000

b)

75 000

c)

90 000

d)

95 000

5.

ஒரு மாவட்டத்தில் தொண்டுழிய சங்கம் 5000 குடும்பத்திற்கு RM2 000 000 சம அளவில் பிரித்துக் கொடுத்தது.

ஒரு குடும்பம் பெற்ற மொத்தப் பணத்தைக் கணக்கிடுக.

a)

RM100

b)

RM200

c)

RM300

d)

RM400

6.

'பி' விளையாட்டு அரங்கில் 10 000 பேர் பார்வையாளர்கள் அடக்கலாம். 'சி' விளையாட்டரங்கில் 0 000 பேர் பார்வையாளர்கள் அடக்கலாம். மொத்தப் பார்வையாளர்களைத் தசம மில்லியனில் கணக்கிடுக.

a)

0.01 juta

b)

0.03 juta

c)

0.04 juta

d)

0.05 juta

7.

பிரதமரின் நிதியுதவி தொகை அறிவிப்பை கண்டு களித்தவர்களின் எண்ணிகையைப் பின்வரும் குறிப்புக் காட்டுகிறது:-


ஆண் பார்வையாளர்கள : 1 950 000

பெண் பார்வையாளர்கள்: 2 100 000


ஆண் பார்வையாளர்களுக்கும் பெண் பார்வையாளர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுக.

a)

100 000

b)

150 000

c)

165 000

8.

புக்கிட் இண்டா பாதுகாக்கப்பட்ட காட்டில் 1 000 000 ஜாத்தி வகை மரங்கள் இருந்தன. அவற்றில்  18\frac{1}{8}  பகுதி மரங்கள் வெட்டப்பட்டால், மீதமிருக்கும் மரங்களைக் கணக்கிடுக.


a)

720 000

b)

800 000

c)

875 000

d)

900 000

9.

கையுறை செய்யும் ஒரு தொழிற்சாலை 0.2 மில்லியன் கையுறைகளை ஒரு மாதம் வெளியாக்கியது.


ஒவ்வொரு மாதமும் அந்தத் தொழிற்சாலை சம எண்ணிக்கையில் கையுறைகளை உற்பத்தி செய்தால், 6 மாதம் அந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்த கையுறைகளைக் கணக்கிடுக.

a)

1 200 000

b)

1 400 000

c)

2 000 000

10.

ஒரு தொழிற்சாலை காப்பி, சாக்லட், எழுமிச்சை சுவைகளில் 1.08 மில்லியன் பிஸ்கட்களை உருவாக்கியது.

காப்பி மற்றும் சாக்லட் சுவையுடைய பிஸ்கட்கள் எண்ணிக்கை தலா 250 000 ஆகும்.


எழுமிச்சை சுவை கொண்ட பிஸ்கட்களைக் கணக்கிடுக.

a)

580 000

b)

590 000

c)

840 000

d)

830 000

11.

2019-ஆம் ஆண்டு லங்காவி தீவிற்கு 2 950 000 சுற்றுப் பயணிகள் வந்தனர்.

அதே ஆண்டில் பங்கோர் தீவிற்கு 1 840 000 சுற்றுப் பயணிகள் வந்தனர்.


அந்த இரு தீவிற்கும் சென்ற சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையில் வேறுபாட்டினைக் கணக்கிடுக.

a)

1 000 000

b)

1 100 000

c)

1 110 000

d)

1 120 000

12.

முருகன் 1200 மாம்பழங்களும் 2422 கொய்யாப்பழங்களும் சரக்குந்த்தில் ஏற்றிச் சென்றான். முருகன் ஏற்றிச் செல்லும் மொத்தப் பழங்கள் எத்தனை?

a)

2622

b)

3624

c)

3622

d)

2624

13.

ரம்புத்தான் மரத்தில் 4832 பழங்கள் இருந்தன. 2646 பழங்கள் பறிக்கப்பட்டன.மரத்தில் மீதம் உள்ள ரம்புத்தான்கள் எத்தனை?

a)

3186

b)

2186

c)

1186

d)

2086

14.

முத்தழகியிடம் 21 தபால் தலைகள் உள்ளன. 7 பேர் பங்கிட்டுக் கொண்டால், ஒருவருக்கு எத்தனை தபால் தலைகள் கிடைக்கும்?

a)

147

b)

28

c)

3

d)

11

15.

ஒரு தட்டில் 9 பூக்களை அடுக்கலாம். 72 பூக்களை அடுக்க எத்தனை தட்டுகள் தேவைப்படும்?

a)

648

b)

81

c)

8

d)

63