wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்நிலை 3 மரபுத்தொடர் பயிற்சி 6

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. 1. பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாறனின் அப்பா பத்தாயிரம் வெள்ளியை பள்ளி நிதிக்காக

a)

அள்ளிக் கொடுத்தார்

b)

அள்ளியிறைத்தார்

2.
  1. 2. அம்மா தன் ஒரே மகளான மாலாவிற்கு அதிகம் _______________________ வந்ததால் அவள் தன் மனம் போனபடி நடக்கிறாள்

a)

இடங்கொடுத்து

b)

இழுத்தடித்து

3.
  1. 3.       நகமும் சதையும் போல இருந்த ராமுவும் சோமுவும் சிறிய பிரச்சனை ஒன்றின் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டதால் அவர்களின் நட்பு ______________________.

a)

இடங்கொடுத்தது

b)

இரண்டுபட்டது

4.
  1. 4.       கபிலன் தன் பாட்டி என்ன சொன்னாலும்  கேட்காமல் ___________________ பேசுவதால் பாட்டி மனம் உடைந்து போகிறார்.

a)

எடுத்தெறிந்து

b)

இடித்துரைத்து

5.
  1. 5.  

          தன் ஒரே மகளின் திருமணத்திற்காக ரதியின் அப்பா ஊர் மக்கள் வியக்கும்படி பணத்தை ________________________.

a)

அள்ளியிறைத்தார்

b)

இழுத்தடித்தார்

6.
  1. 6. இடங்கொடுத்தல் என்பதன் பொருள்

a)

கண்டிப்பாக இல்லாமல் இருப்பது

b)

கண்டித்து அறிவுரை கூறுவது

7.

7. ஓடியாடிப் பார்த்தல் என்பதன் பொருள்

a)

எல்லா வேலைகளையும் செய்தல்

b)

அலட்சியமாக இருத்தல்

8.
  1. 8. கண்மூடித்தனம் என்பதன் பொருள்

a)

அலட்சியமாகச் செய்வது

b)

எதையும் ஆராயாமல் செய்தல்

9.

9. கழித்துக் கட்டுதல்

a)

தேவையில்லாததை ஒதுக்குதல்

b)

அளவுக்கு அதிகமாகக் கொடுத்தல்

10.
  1. 10. இரண்டுபடுதல் என்பதன் பொருள்

a)

பிரிதல்

b)

அலையவிடுதல்

11.
  1. 11. இழுத்தடித்தல்

a)

பல முறை அலைய விடுதல்

b)

பல முறை கண்டித்தல்

12.

கண்பிதுங்குதல் என்பதன் பொருள்

a)

அதிகமான வேலையால் ஏற்படும் வருத்தம்

b)

உண்மை நிலையை அறியாமல் இருத்தல்