WorksheetsMarabhu Thodar, Inaimozhi 22
Total questions: 10
Worksheet time: 8mins
தொற்றுநோய்ப் பரவல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட உணவகங்களை _________ பொருட்டு அரசாங்கம் அவற்றுக்கு நிதி ஆதரவு வழங்கி வருகிறது.
சொந்தக்காலில் நிற்க வைக்கும்
கைதூக்கிவிடும்
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் சிலர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் _________ செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கண்டும் காணாமலும்
தலைகாட்டிவிட்டு
தாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தம் மகன் __________ பதிலளித்தது தந்தைக்குச் சினத்தை உண்டாக்கியது.
பட்டும் படாமலும்
அரைமனத்துடன்
கண்டும் காணாமலும்
எச்சூழலிலும் ஒருவரது ___________ வேறுபடாமல் இருக்கும்போதுதான் அவரைச் சமுதாயம் உயர்வாகக் கருதிப் போற்றும்.
வாழ்விலும் தாழ்விலும்
சொல்லும் செயலும்
குறையும் நிறையும்
சில நாடுகளில் எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் அரசாங்கம் ____________ நேரிடும்போது அந்நாடுகளின் நிலைத்தன்மை பெருமளவில் பாதிப்புறும்.
ஆட்டங்காண
உருக்குலைய
காலை வார
அலைக்கழிக்க
குமுதாவின் மேலதிகாரி யாரும் முன்வந்து செய்ய விரும்பாத வேலையைக் குமுதா செய்யும்படி பணித்ததால் அவள் வேறு வழியின்றி அதை _________ செய்தாள்.
ஆட்டங்கண்டு
கண்ணைக் கசக்கி
அரைமனத்துடன்
பட்டும் படாமலும்
தொற்றுநோய்ப் பரவல் காரணமாக மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளப் பல உலக நாடுகள் தடை விதித்ததால் விமானத்துறை ___________.
தாளம்போட்டது
ஆட்டங்கண்டது
உருக்குலைந்தது
ஏழை நாடுகளில் பசிக்கொடுமை மக்களை ___________ நிலையில் வளர்ந்த நாடுகளில் வாழ்வோர் உணவை விரயமாக்குவது வருத்தத்திற்குரியதாகும்.
வாட்டி வதைக்கும்
உருக்குலைக்கும்
தலைசாக்கும்
தாளம்போடும்
பெற்றோர் எவ்வளவு கூறியும் ராகவன் தம் போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதை அவனது ____________ உணர்த்தின.
அகமும் முகமும்
சொல்லும் செயலும்
பண்டைய தமிழகத்தில் வறுமையில் சிக்கி வாடிய புலவர்களின் நிலை உணர்ந்து மன்னர்கள் அவர்களை __________.
கைதூக்கிவிட்டனர்
தலையில் வைத்துக் கொண்டாடினர்
அலைக்கழித்தனர்
