Worksheetsமரபுத்தொடர்
Total questions: 20
Worksheet time: 10mins
1. கீழ்க்காணும் பொருளுக்கேற்ற மரபுத் தொடரைத் தெரிவுச் செய்க.
கலந்து பேசுதல்/ கூடிப்பேசுதல்
பாட்டு வாங்குதல்
எள்ளளவும்
அளவளாவுதல்
உச்சி குளிர்தல்
2. பிழையான இணையைத் தெரிவுச் செய்க.
எள்ளளவும் - பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
வீடு வாசல் - குடும்பமும் குடும்பப் பொறுப்பும்
அளவளாவுதல் - கூடிப் பேசுதல்
பாட்டு வாங்குதல் - திட்டப்படுதல்
3. தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ___________ கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
உச்சி குளிர்தல்
தோள் கொடுத்தல்
வீடு வாசல்
வாழையடி வாழை
4. யாழ்மொழி எஸ்.பி.எம் தேர்வில் 12 A-க்களைப் பெற்றதால் அவளின் பெற்றோர் _________.
வெட்டிப் பேச்சு
அளவளாவுதல்
அரைப்படிப்பு
உச்சி குளிர்தல்
5.தன் அறையில் இருந்த கண்ணாடி கோப்பை உடைத்ததால் தம்பி தந்தையிடம் __________.
உச்சி குளிர்ந்தான்
பாட்டு வாங்கினான்
அளவளாவினான்
தோள் கொடுத்தான்
6. போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால்
ஏற்படும் விளைவுகளை __________ எண்ணிப் பார்ப்பதில்லை.
வெட்டிப் பேச்சு
தோள் கொடுத்தல்
எள்ளளவும்
வீடு வாசல்
7. அரைப்படிப்பு பொருள் என்ன?
முழுமையான படிப்பு
நிரம்பாக் கல்வி
நிரம்பியக் கல்வி
நிதானக் கல்வி
8. சாலையைக் கடக்க அந்த முதியவருக்குக் கபிலன் _________________.
தோள் கொடுத்தான்
பாட்டு வாங்கினான்
உச்சி குளிர்ந்தான்
வெட்டிப் பேசினான்
9. இடைநிலைப்பள்ளியில் _____________ மட்டும் படித்துள்ள சீலன்
பலரின் வீட்டில் தோட்ட வேலைகளைச் செய்து தன் குடும்பத்திற்காக உழைக்கின்றான்.
ஏட்டிக்குப் போட்டி
அரைப்படிப்பு
எள்ளளவும்
வாழையடி வாழை
10. பொருளுக்கேற்ற மரபுத் தொடரைத் தெரிவுச் செய்க.
தலைமுறை தலைமுறையாக
ஏட்டுக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
வெட்டிப் பேச்சு
வாழையடி வாழை
11. அறிவியல் பாடத்தைச் செய்யாததால், தேவன் ஆசிரியரிடம் ______________.
வெட்டிப் பேசினன்
பாட்டு வாங்கினான்
உச்சி குளிர்ந்தான்
தோள் கொடுத்தான்
12. பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க.
வீண் பேச்சு / பயனற்ற பேச்சு
வாழையடி வாழை
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
தோள் கொடுத்தல்
13. திருமணத்தின் போது, மணமகன் காலில் மணமகளின் சகோதரன் மிஞ்சி அணிவிப்பது _____________ தமிழர்களால் கடைப்பிடித்து வரும் ஒரு சடங்காகும்.
வாழையடி வாழையாக
வீடு வாசலாக
தோள் கொடுப்பதாக
உச்சி குளிர்வாக
14. பொருளுக்கேற்ற பரபுத் தொடரைத் தெரிவுச் செய்க
எதிருக்கெதிராகச் செயல்படுதல் / விதண்டாவாதம்
வாழையடி வாழை
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
ஏட்டிக்குப் போட்டி
15. பேச்சுப் போட்டியில் தான் விரும்பிய கதைப் புத்தகத்தைப்
பரிசாகப் பெற்றதை எண்ணி மாதவி _____________
வெட்டிப் பேசினாள்
உச்சி குளிர்ந்தாள்
அளவளாவினாள்
தோள் கொடுத்தாள்
16. பாடம் போதிக்கும் பொழுது ________ பேசிக் கொண்டிருந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.
எள்ளளவும்
வீடு வாசல்
அரைப்படிப்பு
வெட்டிப் பேச்சு
17. ஆசிரியை திருமதி கலைவாணிக்குப் பள்ளி மண்டபத்தில்
நாற்காலிகளை அடுக்க படிவம் 4 மாணவர்கள் _______________
தோள் கொடுத்தனர்
அளவளாவினர்
உச்சி குளிர்ந்தனர்
வெட்டிப் பேசினர்
18. தன் அண்ணனிடம் எப்பொழுதும் _____________ நடந்து கொண்ட அகிலன்,
தந்தையின் அறிவுரையைக் கேட்டுத் திருந்தினான்
எள்ளளவாக
வாழையடி வாழையாக
ஏட்டுக்குப் போட்டியாக
அரைப்படிப்பாக
19. சிறு வயது முதல், உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் அயராது உழைத்த திரு.மணி
______________ மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
அரைப்படிப்புடன்
வீடு வாசலுடன்
வெட்டிப் பேச்சுடன்
எள்ளளவுடன்
20. எந்நேரமும் பாடங்களை மீள்பார்வை பார்க்கும் கவிதா அரசாங்கத் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறுவாள் என்பது ___________ சந்தேகமில்லை.
எள்ளளவும்
வாழையடி வாழை
தோள் கொடுத்தல்
பாட்டு வாங்குதல்
